மஹிந்த ராஜபக்ஷவின் அரியாசனத்தில் சரத் பொன்சேகாவை அமர வைப்போம்: தம்பர அமில தேரர்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரியாசனத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவை இம்முறை அமர வைப்போம் என தேசப் பற்றுடைய தேசிய மையத்தின் தலைவர் தம்பர அமில தேரர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த தேர்தலின் போது உயிரைப் பணயமாக வைத்து மஹிந்த ராஜபக்ஷவை தாம் ஆட்சி பீடமேற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி காரணமாக நாடு பாரிய அழிவுகளை எதிர்நோக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொடிய யுத்தத்திலிருந்து நாட்டை பாதுகாத்த ஜெனரல் சரத் பொன்சேகா, மக்களின் புண்ணியத்தினால் அவதரித்த வீரர் என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை ஊழல் மோசடிகளிலிருந்து மீட்டெடுப்பது சரத் பொன்சேகாவிற்கு சுலபமான காரியம் என அவர் தெரிவித்துள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.