விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான ஆயுதக் கப்பல் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது?

posted in: தமிழீழம் | 0

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான ஆயுதக் கப்பல் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

“பிரின்ஸஸ் கிரிஸ்டினா” (MV ‘Princess Cristina’) என்ற இந்தக் கப்பல் பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்டது. இந்த கப்பல் தற்போது கொழும்பு கடற்படைத் தளத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல், கைது செய்யப்பட்டுள்ள கே. பத்மநாதன் வழங்கிய தகவல் அடிப்படையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இவ்வாறான மேலும் சில கப்பல்களும் கே. பத்மநாதனின் தகவல் அடிப்படையில் இலங்கைக்கு கொண்டுவரப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கப்பலில் இலங்கையைச் சேர்ந்த மாலுமிகள் இருந்ததாகவும், இதைக் கைப்பற்றும் நடவடிக்கைக்கு வெளிநாட்டு உதவிகள் பெறப்பட்டதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

அதேவேளை இந்தக் கப்பலில் எத்தனை மாலுமிகள் இருந்தனர் என்றோ- அவர்களும் கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டனரா என்பது பற்றியோ எந்தத் தகவலையும் இலங்கை அரசு வெளியிடவில்லை.

மேலும் இந்தக் கப்பல் எங்கு வைத்துக் கைப்பற்றப்பட்டது என்ற தகவலையும் இலங்கை அரசாங்கம் இரகசியமாகவே வைத்திருக்கிறது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.