பருத்தி ஏற்றுமதியை வரைமுறைப்படுத்த வேண்டும் : ஜவுளிக்குழு தலைவர் தகவல்

posted in: வர்த்தகம் | 0

மதுரை: ”உள்நாட்டுத் தேவைக்காக இந்திய பருத்தி ஏற்றுமதியை மத்திய அரசு வரைமுறைப்படுத்த வேண்டும்” என ஜவுளித்குழு தலைவர் கருமுத்து கண்ணன் தெரிவித்தார். மதுரையில் பருத்தி அரவை மற்றும் பேலிடுதல் நிறுவனங்களை மதிப்பீடு செய்யும் முறை குறித்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது:

உலகில் இந்தியா அதிக அளவில் பருத்தி உற்பத்தி செய்கிறது. ஆனால் தரத்தில் பின்தங்கியுள்ளோம். பருத்தி அரவை மேற்கொள்ளும் போது நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தாமல் உள்ளோம். அரசு பல விதங்களில் உதவிகள் அளித்து வருகிறது. இதனை பருத்தி ஆலை உரிமையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவிலிருந்து வங்கதேசம், சீனா அதிக அளவில் பருத்தியை இறக்குமதி செய்து, பல பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். உலக சந்தையில் இந்திய பருத்திக்கு அதிக தேவை உள்ளது. பருத்தி உற்பத்தியாளர்கள் பாதிக்காமலும், உள்நாட்டு தேவைக்காகவும், இந்திய பருத்தி ஏற்றுமதியை மத்திய அரசு வரைமுறைப்படுத்த வேண்டும், என்றார்.

கலெக்டர் மதிவாணன் தலைமை வகித்தார். ஜவுளிக்குழு இயக்குனர் உலகநாதன், செயலர் பிரதீப் குப்தா, உறுப்பினர் பிரிட்டோ ஜோசப், மதுரை நூற்பாலை சங்க தலைவர் கோபாலகிருஷ்ண ராஜா, ஸ்ரீவில்லிப்புத்தூர் பருத்தி ஆராய்ச்சி துறை பேராசிரியர் ராமலிங்கம், ஜி.எச்.சி.எல்.,லிட்., துணை தலைவர் சிவபாலசுப்பிரமணியன் பங்கேற்றனர்

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.