தாக்குதல் நடத்த கட்டளைக்கு காத்திருக்கும் ‘கரும்புலிகள்’!- இலங்கை மீடியா

கொழும்பு: கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினர் ஊடுறுவியுள்ளனர். உரிய இலக்குகள் மற்றும் ஆலோசனைக்காக அவர்கள் காத்துள்ளனர் என்று இலங்கை மீடியாவில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து லக்பிம இதழ் வெளியிட்டுள்ள செய்தியில்,

வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பில் தற்கொலைப் போராளிகள் மறைந்திருக்கின்றனர். ஜன நடமாட்ட்டமிக்க பகுதிகளில் அதிக அளவில் இவர்கள் பதுங்கியுள்ளனர்.

எத்தனை தற்கொலைப் போராளிகள் பதுங்கியுள்ளனர் என்பது குறித்த சரியான தகவல்களை தற்போதைக்கு வெளியிட முடியாது என பாதுகாப்புத் துறை தெரிவிக்கிறது.

போர் முடிந்த பின்னர் கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளில் 20 தற்கொலை அங்கிகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

தற்கொலைப் போராட்டங்களை முன்னெடுத்த 100 விடுதலைப் புலி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரபாகரனின் மறைவிற்குப் பின்னரான புலிகளின் அச்சுறுத்தல்களை குறைத்து மதிப்பீடு செய்ய முடியாத நிலை உள்ளது.

குறிப்பாக தற்கொலைப் போராளிகளின் அச்சுறுத்தல்கள் தொடர்பாக சரியான மதிப்பீடுகள் இதுவரையில் வெளியிடப்படவில்லை. தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என உத்தரவாதங்களை வழங்க முடியாது எனவும் பாதுகாப்புத்துறை கூறுகிறது.

அரசியல் ரீதியான போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள போதிலும், புலிகள் மீண்டும் ஒன்றிணைந்து ஆயுதங்களை ஏந்த மாட்டார்கள் என்பதற்கு இதுவரையில் எவ்வித உத்தரவாதமும் இல்லை.

சேட்டிலைட் போன்கள் மூலமாக விடுதலைப் புலிகள் தொடர்ந்து தொடர்புகள் மற்றும் ஆலோசனயில் இருந்து வருகின்றனர்.

தற்கொலைப் போராளிகளை யார் கட்டுப்படுத்தியது, அவர்களுக்கான கட்டளைகளை யார் வழங்கியது என்பது சரியாக தெரிந்து கொள்ளும் வரையில் தற்கொலை த் தாக்குதல் அச்சுறுத்தல்களை மறுக்க முடியாது என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : thatstamil

Leave a Reply

Your email address will not be published.