விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கை: நேபாள மாவோயிஸ்ட் தலைவர் கண்டனம்

posted in: Uncategorized | 0

இந்தியாவில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராகவும், இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் அந்த நாட்டு அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகளை கண்டிப்பதாக நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரும், முன்னாள் பிரதமருமான பிரசந்தா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் காத்மாண்டுவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியா மற்றும் இலங்கை அரசுகள் புரட்சிகர இயக்கங்களை ஒடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளன. இது கண்டனத்துக்குரியது.

இதுபோன்ற நடவடிக்கைகளை மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. இந்த நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு பாதகமாகவே முடியும்.

தெற்காசிய மாவோயிஸ்ட் கட்சிகளின் கூட்டு நடவடிக்கைகளை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வலுப்படுத்தி வருகிறோம்.

அதேபோல உலக அளவில் உள்ள ஆயுதப் போராட்டங்களையும் நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

நேபாளத்துக்கு வெளியே உரிமைகளுக்காக நடைபெறும் ஆயுதப் போராட்டங்களை நாங்கள் உறுதிபட ஆதரிப்போம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் அமைதிப் பேச்சு வார்த்தைகளில் சேர்ந்ததன் மூலம் ஆயுதப் போராட்டத்தை நாங்கள் கைவிட்டு விட்டதாக அர்த்தம் கொள்ளக் கூடாது.

நேபாள ராணுவத் தளபதி கதவாலை மீண்டும் அப்பதவியில் அமர்த்தியதன் மூலம் நேபாள அரசு தவறு செய்து விட்டது. அதைத் திருத்திக் கொள்ள நான்கு நாள் அவகாசம் தருகிறோம். அதற்குப் பிறகும அது திருந்தாவிட்டால் மக்கள் புரட்சி வெடிக்கும் என்றார் பி