பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் ஊக்கத்தொகை உயர்வு : அமைச்சர் அறிவிப்பு

சென்னை : 15 நாள் பேராட்டத்துக்கு பிறகு பயிற்சி மருத்துவர்கள் நேற்று போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதனையடுத்து சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் சுகாதார துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிக்கை வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பயிற்சி மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை 6 ஆயிரம் ரூபாயில் இருந்து 7 ஆயிரமாகவும், உயர்த்தப்பட்டுள்ளது. முதலாம் ஆண்‌டு முதுநிலை மருத்து‌வ மாணவர்களுக்கு 15,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்து‌வ மாணவர்களுக்கு 16,000 ரூபாயாகவும், மூன்றாம் ஆண்டு முதுநிலை மருத்து‌வ மாணவர்களுக்கு 17,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சிறப்பு முதுகலை மருத்துவப் படிப்பு படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 18,000 ரூபாயாகவும் , இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்ககு 19,000 ரூபாயாகவும், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு 20,000 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எம்.சி.எச். படிக்கும் மருத்துவர்களுக்கு ஏற்கனவே ரூ. 10 ஆயிரம் என்று இருந்தது. இனி ரூ. 18 ஆயிரம் என்றும் 5-ம் ஆண்டு மருத்துவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் என்று இருந்தது. இனி ரூ. 19 ஆயிரம் என்றும் உயர்த்தி வழங்கப்படும் இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.