வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
இரண்டு குறுகிய தூர ஏவுகணைகளை வடகொரியா நேற்று வெற்றிகரமாக ஏவி பரிசோதனை செய்துள்ளது.
வடகொரியா ஏற்கனவே பரிசோதித்த பல்வேறு அணு ஆயுத ஏவுகணை சோதனைகளுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
அத்துடன் தென்கொரியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே போர் மூளக்கூடும் என்ற பதற்றமான சூழ்நிலையும் காணப்பட்டது.
இந்நிலையில் , இந்த பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் வடகொரியா இன்று மீண்டும் இரண்டு குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளதாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த இரு ஏவுகணைகளும் வடகொரியாவின் கிழக்கு கடலோர நகரான வான்சனிலிருந்து ஏவப்பட்டுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன. E-mail to a friend
Source & Thanks : .virakesari.lk
























