தமிழருக்கு உணவு, உடை தவிர வேறெதுவும் தேவையில்லை: ஜாதிக ஹெல உறுமய

சிறீலங்கா அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அரசுமுழுமையாக நடைமுறைப்படுத்த முயன்றால், அரசிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது.

தமிழ் மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், சுயகௌரவத்தைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை என நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அரசுஇதனை செய்தால் அரசிலிருந்து நாங்கள் வெளியேறவேண்டிவரும்.

13 ஆவது திருத்தச் சட்டம் நாட்டிற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அது முழுமையாக அமுல்படுத்தப்படாமல் உள்ளதால்தான் நாடு இதுவரை மோசமான பாதிப்புகளிலிருந்து தப்பியுள்ளது.

இந்த திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாணங்களுக்கு காணி, காவல்துறை அதிகாரங்களை வழங்குவதையும் எதிர்க்கிறோம். தமிழ் மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், சமூக கௌரவத்தைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை.
சங்கதி

Source & Thanks : .yarl

25 விமர்சனங்கள் to “தமிழருக்கு உணவு, உடை தவிர வேறெதுவும் தேவையில்லை: ஜாதிக ஹெல உறுமய”

  1. eela tamilan Says:

    தமிழனுக்கு உரிமய் கொடுக்கக் கூடாது என்ற தனது இன துவேஸம் எப்படி காட்டுகிறான் சிங்களவன் . இவனா தமிழனுக்கு உரிமய் கொடுப்பான் ? இது எலும்புக்கு வாலாட்டும் உதுகளுக்கு புரியுமா ? உதுகளுக்கு அவன் எலும்பு போட்டால் வால் ஆட்டி வாயை மூடு என்றால் மூடிக்கொண்டு அவன் கால் அடியில் படுத்து இருக்கும் . அதுதான் தமிழனின் உரிமய் .

  2. கவிஓவியன் Says:

    புத்தர் உயிரோடிருந்தால் சிங்கள இனவெறிக்கு எதிராக ஆயுதமேந்தியிருப்பார்.

    ஜாதிக ஹெல உறுமய இன்று பௌத்த தர்மத்தை பற்றி பேசுவதில்லை. கண்டி தலதா மாளிகையில் புத்தர் சிலைகள் காணாமல் போயுள்ளது, இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு ஹெல உறுமய மௌனம் காக்கிறது.

    ஜாதிக ஹெல உறுமய தமிழ் இனத்தை பூண்டோடு அழிக்க திட்டமிட்டுள்ளது.

    புத்தம் சரணம் கச்சாமியா அல்லது புத்தம் இரத்தம் கச்சாமியா?


    கடவுளை மற ,மனிதனை நினை!!
    கவிஓவியன்

  3. vinothiny Says:

    எமக்கு உணவு உடை தவிர வேறெதுவும் தேவையில்லை என்று சொல்வதற்கு நீ யாரடா ?
    கொதிக்கின்றது எனது ரத்தம்.நாடு கடத்தப்பட்டு இலங்கை வந்து சேர்ந்த நாடோடி நீ யாரடா எம் இனத்தின் தேவை பற்றி எடுத்துரைக்க ?காலம் ஒருநாள் மாறும் அன்று உனக்கு உரிய பாடம் புகட்டப்படும் .அதுவரை புத்த மதத்தின் போதனைகளை இனியாவது ஒருமுறை படித்துப் பார் .புத்த மதத்திற்கே இன்றைய சில பிக்குகள் சாபக்கேடு .

    ஈழத் தமிழச்சி

  4. எல்லாளன் Says:

    யாம் தெரிந்ததை வாசகர்கள் தெரிந்துகொள்ள மட்டுமே……..That’s mean no personal comments.OK

    புலிகளின் சரணடைவு அரசியலும் புத்துயிர் பெறும் சிங்கள பெளத்த மேலாதிக்க வாதமும்

    இலங்கை என்பது பௌத்ததைப் பாதுகாப்பதற்கான புனித தேசம், இந்த தேசத்தைத் தொடர்ச்சியாகப் பாதுகாக்கும் நிலையிலுள்ளவர்கள் சிங்கள பௌத்தர்கள், தமிழர்களும் ஏனைய சிறுபான்மையினரும் இந்தத் தீவில் வாழ இடமளித்த சகிப்புத் தன்மை கொண்ட சிங்கள மக்களுக்கு நன்றியுடையவர்களாயிருக்க வேண்டும் என்பதே பௌத்த சிங்கள தேசிய வாதமாகக் கட்டமைக்கப்படுகிறது என்கிறார், நீல் டெவோட்டா (P:49 Economic and Political Weekly: 31.01.2009)

    ஒரு மக்கள் கூட்டத்தின் அடையாளம் திட்டமிட்டுச் சிதைக்கப்படும் போது, அவ்வடையாளத்தின் நியாயத்தன்மைக்கும் தேவைப்பாட்டிற்கும் அப்பால், அதற்கெதிரான போராட்டம் என்பது நியாயமானதே! இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் அடையாளங்கள் சிதைக்கப்படும் போது அதற்கெதிரான போராட்டம் என்பது, பல படிமுறைகளூடாக ஜனநாயக வரை முறைக்குட்பட்ட வழிமுறைகளைக் கடந்து ஆயுதப் போராட்டமாகப் பரிணாமமடைந்தது. இன்னும், இதன் வழிமுறைகளுக்கும் தவறுகளுக்கும் அப்பால் இவ் வன்முறைப் போராட்டத்தின் நியாயத் தன்மையைப் பொதுவாக எந்த இடதுசாரிப் போக்குடையவர்களும் மறுத்ததில்லை.

    நீல் டெவோட்டா குறிப்பிடுகின்ற பௌத்த சிங்கள தேசியவாதம் அல்லது பெருந்தேசிய வாதம் என்பது தமிழ் பேசும் மக்களின் மீது கட்டவிழ்ழ்த்து விட்ட அரசியல், பொருளாதார, கலாச்சார, சமூக அடக்கு முறைகள் கருத்தியலாக்கப்பட்டு பெருந்தேசிய வாதத்தின் ஏகோபித்த ஆதரவோடு சிறுபான்மைத் தமிழ் பேசும் அனைத்துத் தேசிய இனங்களின் மீதான ஒடுக்கு முறையாக வளர்ர்சியடைந்தது.

    இந்த சமூகவிரோதக் கருத்தியலான பெருந்தேசிய வாதத்திற்கு எதிராக முன்னெழுந்த முதலாளித்துவ ஜனநாயக வரம்புகளுக்குட்பட்ட ஒவ்வொரு போராட்டங்களும் இதே கருத்தியலைக் கருவியாகக் கொண்டு அழித்தொழிக்கப்பட்டது. காலனியத்திற்குப் பின்னான 1958, 1983, 2009 ஆண்டுகளில் அரச பயங்கர வாதம் நடத்தி முடித்த இனப் படுகொலைகளான மக்கள் படுகொலைகளின் பின்னதாகவும் இந்த பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை அடித்தளமாகக் கொண்ட பெருந்தேசியவாதம் புதிய தெம்பையும் உத்வேகத்தையும் பெற்றுக்கொண்டது.

    பௌத்தத்தை அரசியற் தளத்திற்கு நகர்த்தியதற்கான முழுப்பொறுப்பும் பிரித்தானியக் காலனியாதிக்க அரசையே சாருமெனினும் தேரவாத பௌத்தத்தின் சமூக ஆதிக்கம் காலனிக்கு முன் பகுதியிலேயே இருந்ததை நியூட்டன் குணசிங்க போன்ற மனிதவியலாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

    ஐம்பதாயிரம் மனித உயிர்களை 100 நாட்களுக்குள், பயங்கரவாதிகளுக்கெதிரான போர் என்ற தலையங்கத்தில் பலி கொண்ட பேரினவாத அரசியல், தனது பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை இலங்கை வாழ் ஏனைய சிறுபான்மையினரின் மேல் புதிய உத்வேகத்துடன் திணிக்க முயல்கிறது.

    மல்வத்த மற்றும் அஸ்கிரிய பௌத்த பீடங்களின் வரலாற்றில் மிக அதி உயர் விருதாகக் கருதப்படும் “விஷ்வ கீர்த்தி சிறீ திரி சிங்களாதீஸ்வர” என்ற விருதை, இப் பீடங்களின் மகா நாயக்கர்களான பௌத்த் பிக்குகள் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு 23.05.2009 அன்று வழங்கிக் கௌரவித்துள்ளனர்.

    சோழ சாம்ராஜ்யத்திற்கெதிரான போரில் பௌத்த சிங்கள ஆதிக்கத்தை நிறுவி இலங்கையை ஒரே கொடிக்குக் கீழ் கொண்டுவந்த கஜபாகு மன்னனுக்கு வழங்கப்பட இந்த திரி சிங்கள விருது அதன் பின்னராக இலங்கையில் முழுமையாகப் பௌத்த சிங்கள ஆதிக்கத்தை முழுமையாக நிறுவியதற்காக இலங்கை ஜனாதிபதிக்கு பௌத்த பீடாதிபதிகளால் வழங்கப்பட்டுள்ளது.

    ஒரு தனிமனிதன் தன்னுடைய தாய் நாட்டிடமிருந்து பெற்றுக்கொள்ளத்தக்க மிகப்பெரிய விருதாக தான் இதைக் கருதுவதாகக் கூறிய மகிந்த ராஜபக்ஷ தனது தாய் நாடு பிளவுபடுவதை தான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன் எனவும் கூறினார்.மகா சங்க பௌத்த பிக்குகள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, தாய் நாட்டின் ஐக்கியத்தையும் பௌத்த மதத்தையும் பாதுகாப்பதற்காகவே தனக்கும் இந்த விருது வழங்கப்பட்டதாக மேலும் தெரிவித்தார்.

    பௌத்த சிங்கள மேலாத்திக்க வாதத்தை அடித்தளமாக கொண்ட பேரினவாத அரசியலானது ஆயிரக்கணக்கான மனிதர்களின் பிணங்களின் மீது புத்துயிர் பெற்றுள்ளது.

    பேரின வாததின் தத்துவார்த்தப் பகுதியான இப் புத்துயிர்சியானது இதற்கெதிரான எதிர்ப்பு அரசியலை மேலும் மேலும் வலியுறுத்துகிறது. சாட்சியின்றி இன்னும் நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலையும் அதற்கு வழங்கப்படுகின்ற சமூகவிரோதத் தத்துவார்த்த முலாமும் சிறுபான்மையின மக்கள் மத்தியில் மட்டுமல்ல சிங்கள் மக்கள் மத்தியிலும் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.

    தமிழ் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறையின் தத்துவார்த்தப் பின்புலமாக அமைந்த மேலாதிக்க வாதம் ஒரு புறத்தில் புத்துயிர் பெற மறுபுறத்தில் இதற்கான எதிர்ப்பு அரசியலென்பது, புலிகளின் அழிவிற்குப் பின்னதாக, முற்றாக அற்றுப் போயுள்ள நிலையையே நாம் காண்கிறோம். மேலும், இதே எதிர்ப்பு அரசியலுக்கான வெற்றிடத்தை மேற்கு நாடுகளும் அதன் ஏகாதிபத்திய நலன்கள் சார் புத்திஜீவுகளும் நிரப்புகின்ற ஒரு அபாயகரமான அரசியற் பகைப் புலத்தில் தான் அரசிற்கெதிரான ஆயுதப் போராட்டத்தின் தந்திரோபாயங்கள் வகுக்கப்பட வேண்டும்.

    புலிகளின் அழிவிற்குப் பின்னதாகவேனும், புலிகள் தொடர்பான விமர்சனப்பார்வை என்பதும், தமிழ் பேசும் மக்களின் நியாயமான போராட்டத்தை புலிகள் சிதைவிற்குட்படுதினர் என்பதும் மக்கள் மத்தியில் சொல்லப்பட வேண்டும்.

    நீண்ட ஜனநாயகப் போராட்டங்களூடக வன்முறை சார் எதிர்ப்பரசியல் என்பதே ஒரே வழியென்ற முடிபிற்கு வந்த போதுதான் ஆயுதமேந்திய தலை மறைவு இயக்கங்கள் உருவாகின. இவ்வியங்களின் முற்போக்குக் கூறுகளெல்லாம் புலிகளால் அழிக்கப்பட்ட பின்னர், எஞ்சியிருந்த புலிகள் ஒருவித பாசிச அமைப்பாக வளர்சியடைந்து, இறுதியில் 30 வருட ஆயுதப்போராட்டததைச் சிதைத்து சின்னாபின்னமாகியது மட்ட்மல்லாது, இன்று அதன் புதிய தலைமை “ஜனநாயக” வழிகளில் போராட அழைப்புவிடுக்கிறது. அதன் மறு பிரிவானது, புலிகளின் தோல்வியடைந்த அதே பழைய கட்டமைப்பை எதிர்ப்பரசியலின் தீர்வாக முன்வைக்கிறது.

    தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு இன அழிப்பிற்கெதிரான புதிய அரசியலை எவ்வாறு முன்வைப்பது என்பதை ஆய்வு செய்யக்கூட மறுக்கும் புலி அரசியலிற்கு எதிர்வினையாக சரணடைவு வாதமே முன்வைக்கப்படுகிறது.

    புலி அரசியலின் தோல்விக்கான பிரதான காரணம் மக்களை அணிதிரட்டாத, மக்களிலிருந்து அன்னியப்பட்ட, வேறுமனே ஆயுதம் சார்ந்த அரசியலையே முன்வைத்ததாகும். புலிகளின் துப்பாக்கிகளுக்கு போதிய குண்டுகள் இருக்கும் வரை அவர்கள் பலமானவர்களாயிருந்தனர், அவை தீர்ந்து போன போது பலமிழந்து போயினர்.

    சர்வதேச ரீதியில், மனிதாபிமானிகளோ, ஜனநாயக சக்திகளோ, முற்போக்காளர்களோ 30 வருட காலத்தில் அணிதிரட்டப்படவில்லை.

    தமிழகதில் கூட வாக்கு அரசியல் நடத்தும், வை.கோ, கருணாநிதி, திருமாவளவன், பாண்டியன் போன்ற சந்தர்ப்பவாதிகளே தமிழ்பேசும் இலங்கை மக்களின் போராட்டத்தின் ஆதரவு சக்த்திகளாக உள்வாங்கப்பட்ட நிலையில் அவர்கள் அங்கம் வகிக்கும் அரசாங்கங்களே இலங்கையில் நடைபெறும் இன அழிப்பின் பிரதான பின்புலமாக உள்ளன. இன்று வரைக்கும் ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும், வாக்கு அரசியலுக்கு உட்பட்டாத எந்த தமிழக இடது சாரிக் குழுக்களுடனும் புலிகள் ஒருங்கிணைவிற்கும் வர முயற்சிகவில்லை.

    ஈராக் மீதான அமரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக தெருவிலிறங்கிய எந்த ஐரோப்பிய ஜனநாயக சக்திகளும் இலங்கையில் நடைபெறும் இன்ப்படுகொலை தொடர்பாக குழப்பமான கருத்தையே கொண்டுள்ள நிலையில் புலம் பெயர் தமிழர்களின் போராட்டங்களை ஏறெடுத்துக் கூடப் பார்க்கவில்லை. புலம் பெயர் புலி அரசியல் என்பது தமிழ் நாட்டைப்போல் ஐரோப்பிய நாடுகளிலும் சந்தர்ப்பவாத, கட்சி அரசியல் வாதிகளையே நம்பியுள்ளது.

    இதே பிற்போக்கு சக்திகள் தான் புலித் தலைமையை நந்திக் கடல் வரை நகர்த்திச் சென்று இலங்கை இரணுவத்தின் கைகளில் ஒப்படைக்கவும் உதவியவர்கள்.

    ஆக, மனித இனத்தின் மீதும பற்றுக் கொண்டவர்களும், ஐம்ப்தாயிரம் உயிர்களைப் பலிகொண்டு, ஊனமுற்ற ஒரு சந்ததியை உருவாக்கி, இன்னும் தடுப்பு முகாம்களில் அப்பாவிகளை அடைத்துவைத்து இனப்படுகொலையைத் தொடரும் இலங்கை அரசிற்கெதிரான எதிர்ப்பரசியலை முன்வைக்க விழைபவர்களும் புலிகளின் தோற்றுப்போன வழிமுறைகளிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்.

    1. மக்களை சார்ந்து நிற்கும் சர்வதேச சமூகத்தை படுகொலைகளுக்கெதிராக அணிதிரட்ட வேண்டும்.

    2. புலம் பெயர் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் புலிகளின் அரசியல் தவறை அம்பலப்படுத்த வேண்டும்.

    3. மக்கள் சார்ந்த சிறீ லங்கா அரசிற்கெதிரான தமிழ் பேசும் மக்களின் தற்பாதுகாப்பு யுத்தத்திற்கான புதிய தந்திரோபாயங்களை வகுத்துகொள்ள வேண்டும்.

    எஞ்சியிருக்கும் புலிகளின் ஜனநாயக வழிமுறைக்குத் திரும்பும் வியாபார நோக்கிலான கோஷத்தை தமிழ் பேசும் மக்கள் வேடிக்கையான கோரமாகவே பார்க்கிறார்கள். சிறீலங்கா அரசிற்கெதிரான தமிழ் பேசும் மக்களின் போராட்ட்த்திற்கான தேவை, திட்டமிட்ட இனப் படுகொலையிலிருந்து தற்பாதுகாத்துக் கொள்வதற்கான போராட்டம் முனெப்போதையும் விட இன்று அவசியமாயுள்ளது. அதற்கான தத்துவார்த்த வழிமுறையும், தந்திரோபாய நகர்வும் புலிகளின் போராட்ட முறையை நிராகரிப்பதிலிருந்தே உருவாக முடியும்.

    ***கடவுளை நினை….மனிதனை நேசி!***

  5. எல்லாளன் Says:

    1. மக்களை சார்ந்து நிற்கும் சர்வதேச சமூகத்தை படுகொலைகளுக்கெதிராக அணிதிரட்ட வேண்டும்.

    2. புலம் பெயர் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் புலிகளின் அரசியல் தவறை அம்பலப்படுத்த வேண்டும்.

    3. மக்கள் சார்ந்த சிறீ லங்கா அரசிற்கெதிரான தமிழ் பேசும் மக்களின் தற்பாதுகாப்பு யுத்தத்திற்கான புதிய தந்திரோபாயங்களை வகுத்துகொள்ள வேண்டும்.

    எஞ்சியிருக்கும் புலிகளின் ஜனநாயக வழிமுறைக்குத் திரும்பும் வியாபார நோக்கிலான கோஷத்தை தமிழ் பேசும் மக்கள் வேடிக்கையான கோரமாகவே பார்க்கிறார்கள். சிறீலங்கா அரசிற்கெதிரான தமிழ் பேசும் மக்களின் போராட்ட்த்திற்கான தேவை, திட்டமிட்ட இனப் படுகொலையிலிருந்து தற்பாதுகாத்துக் கொள்வதற்கான போராட்டம் முனெப்போதையும் விட இன்று அவசியமாயுள்ளது. அதற்கான தத்துவார்த்த வழிமுறையும், தந்திரோபாய நகர்வும் புலிகளின் போராட்ட முறையை நிராகரிப்பதிலிருந்தே உருவாக முடியும்.

  6. gri Says:

    வணக்கம் .
    ரவி அவர்களே .பட்டிமன்றம் இன்று தான் சூடு பிடிச்சிருக்கிறது .சுப்பர் சுப்பர் .வசந்தா சந்திரன் அருமை பேச்சு நடை மிக அருமை. பட்டிமன்றம் அனுபவம் இருக்கிறதோ .வாழ்த்துக்கள்

    ரவி உங் கள் முடிவு சப் என்று விட்டது. காரணம்.
    தொடரட்டும் உங்கள்
    பணி.

  7. எல்லாளன் Says:

    Hi Gri…who’s this persons & what’s the connection with this topic..what happen? are you OK

  8. vinothiny Says:

    ஒரு நல்ல கணவன் தன் மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் ?தமிழ் ஒலி நண்பர்களின் பதில் என்னவாக இருக்கும்?அன்புடன் கவி ஓவியன்,கேசவன்,திராவிடன்,எல்லாளன்,கிரி,கணேஷ் ,மகேந்திரன் மattum எல்லோரின் பதில்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன் .இறுதியில் என்னுடைய பதிலை எழுதுகின்றேன் .நன்றி.வினோ

  9. gri Says:

    வாழ்த்தை தானே சார் சொன்னேன் .பணவிரஜம் இல்லாமல் செஜ்வது பாராட்டுவதும் .திட்டுவதும் தானே .நான் பாராட்டை தானே தெரிவித்தீன் .ஜார் எவராக இருந்தாலும் எமக்கென ..புறான்மை இல்லாது மனம் திறந்து ஜார் வாழ்த்தினாலும் அவர்கள் என்னும் திறம்பட நிகழ்ச்சிஜை செஜ்வார்கள் .ரவி அவர்களைஜும் தான் வாழ்த்தினேன் .அதற்காக மற்வ்வர்கள் சரிஜில்லை என்று இல்லை .நான் மட்டும் இல்லை ஜாறைஜுமே மனம் திறந்து வாழ்த்திப் பழகுங்கள் .
    வாழ்த்துவதற்கு வஞ்சனை எதற்கு .நான் எப்போதும் வானொலி கேட்பேந் .ரவி அவர்கள் சொன்னார்கள் இந்நிகழ்ச்சி பத்தி விமர்சனம் தறுமாறு அதனால் தான் பாராட்டிநேந் .

  10. gri Says:

    ஒரு கணவன் மனைவிஜின் அன்பை புரிந்தது நடந்து கொள்ள வேண்டும்

  11. gri Says:

    ஸகோதரரே வாழ்த்துவதை தான் தட்டிகொடுத்தல் என்றும் சொல்வார்கள் தெரீஜுமா .ஒரு பெண் ஒரு பெண்ணை வாழ்த்துவதில் என்ன இருக்கு எனது பெஜர் கிரிசா நான் கிரிஎன்று சுருக்கமாக எழுதிநன் .பெண் என்ன ஆண் என்ன தட்டி கொடுப்பதில் பின் வாங்க மாட்டாள் இந்த கிரிசா. .அன்றில் இருந்து இன்றுவரை T R T வானொலி இன் பரம ரசிகை எந்த நிகழ்ச்சி என்று இல்லை எல்லா நிகழ்சி ஜும் ரசித்து கேட்பது தான்எனது வழமை . பேரைஜும் புகளைஜும் கேட்டு வாங்க கூடாது தான வரவேந்டும் சார் ..

  12. KESAVAN Says:

    அன்பானவர்களுக்கு மட்டும்………….தமிழை எழுதி முடித்தபின் ஒருமுறை சரிபார்த்து பின்னர் கொப்பி செய்து வெளியிட வேண்டுகிறேன்.தொடர்க உங்கள் சேவை TRTதமிழ்ஒலி இணையதளத்தில் ………..நன்றி! வணக்கம்!! கூறி விடைபெற்று மீண்டும் வருவேன்…..அன்புடன் கேசவன்.

  13. N.Kanesh Germany Says:

    வணக்கம் வினோதினி.
    இதற்கு கிரிஜின் பதில்தான் எனது பதிலும் .

  14. N.Kanesh Germany Says:

    நன்றி கேசவன் உங்கள் சுட்டிக் காட்டலுக்கு

  15. vinothiny Says:

    ஒரு கணவன் குடும்பப் பெண்ணிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற என் கேள்விக்கு என்னை மதித்து பதில் எழுதிய அன்பு நண்பன் கிரிக்கு என் அன்பு கலந்த நன்றிகள்.

  16. vinothiny Says:

    கிரி என்னுடைய கேள்வியின் பதிலாக நான் நினைப்பது
    கண்ணாக! கண்ணைக் காக்கும் இமையாக !கண்ணீரை துடைக்கும் விரலாக!கண்ணில் தூஸி விழுந்தால் அகற்றும் விரலாக !இறுதியில் கண்ணை குத்தாத விரலாக!

  17. vinothiny Says:

    என்ன இனிய நண்பர் கவி ஓவியனை நீண்ட நாட்களாகக் காணவில்லை .அன்புடன் தமிழ் ஒலியில் இணைந்திருங்கள் .l

  18. KESAVAN Says:

    அவசரப் பொழுதொன்றில்
    தவறி விழுந்த வார்த்தை
    தெறித்துச் சிதறியதில்
    எங்கும் ரணம்;
    குருதி கொப்பளிக்க.
    தடித்தெழுந்த வார்த்தைகளில்
    பொதிந்திருந்தது காயப்பட்ட
    வலியும் வேதனையும்;
    கூடவே குருதி வாடையும்.
    எதிரெதிர் வாக்கியங்களில்
    நிறுவப்பட்டதெல்லாம் இருவரும்
    யோக்கயமில்லையென்பதன்றி
    பிறிதொன்றில்லை.
    பின்மாலைப் பொழுதில்
    குற்றவுணர்ச்சி ததும்பும் வார்த்தைகளில்
    தோய்ந்திருந்த மருந்து
    குணமாக்குறது ரணங்களை
    காயமாக்குவதும்,
    காயமாற்றுவதும்
    வார்த்தைகளே.
    எதைப் பேசுகிறோம்
    என்பதிலிருக்கிறது
    வாழ்க்கை.
    ஓங்கி ஒலிக்கும்
    கெட்டிமேளத்தில்
    அமுங்கிப் போகிறது
    யாரோ ஒருத்தரின்
    விசும்பல் சத்தம்
    எப்போதும்

  19. vinothiny Says:

    என்றுமே இனிமையாகவும் இளமை துள்ளலுடனும் தன் கருத்துக்களை முன் வைக்கும் அன்பு நண்பர் என்றுமே என் மதிப்புக்குரிய கேசவனின் கவிதையில் ஏனிந்த சோக அலைகள் .உங்கள் கவியின் கருத்து எனக்கு புரியவில்லை இனிய தோழனே?என்றுமே உங்களின் ஆக்கங்களுக்காக காத்திருக்கும் பலரில் நானுன் ஒருத்தி .அன்புடன் வினோ

  20. KESAVAN Says:

    ஒரு நல்ல கணவன் தன் மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் ?

    என் இனிய தோழிக்கு நன்றிகளும் உங்கள் கேள்விகணைக்கு எனக்கு தெரிந்த விளக்கமும்……….

    1) நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை (Ego) விடுங்கள்.

    2) அர்த்தமில்லாமலும், பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள் (Loose Talks)

    3) எந்த விஷயத்தையும், பிரச்சனையையும் நாசுக்காக கையாளுங்கள் (Diplomacy), விட்டுக் கொடுங்கள் (Compromise).

    4) சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள் (Tolerance).

    5) நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள் (Adament Argument), குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள். (Narrow Mindedness)

    6) உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள் (Carrying Tales)

    7) மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள் (Superiority Complex)

    8) அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள் (Over Expectation)

    9) எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

    10) கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்.

    11) உங்கள் கருத்துகளில் உடும்புப் பிடியாக இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள் (Flexibility)

    12) அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்

    13) கருத்துக்களை, செயல்களை, நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். (Mis-understanding)

    14) மரியாதை காட்டவும், இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.(Courtesy)

    15) புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

    16) பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.

    17) அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் விட்டு பேசுங்கள்.

    18) பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள்.

    19) நிலையை உயர்த்து….. நினைப்பை உயர்த்தாதே.

    20) விட்டுக் கொடுப்பவன், கெட்டுப் போவதில்லை.

  21. vinothiny Says:

    great kesavan.brilliant

  22. vinothiny Says:

    கிரேட் .சூப்பர் .இதை விட ஒரு சிறந்த விளக்கத்தை கொடுக்க என்னை பொறுத்த வரையில் எவராலும் முடியாது.உண்மையில் உங்களை நண்பனாகப் பெறத்தகுதி எனக்கிருக்கின்றதா?யோசிக்கின்றேன் .

  23. KESAVAN Says:

    நாம் எல்லோரும் ஒரே குடையினுள் உள்ளவர்கள் அதாவது TRTதமிழ்ஒலி எனும் ஊடகத்துறைக்கு ஆதரவு கொடுத்து ஒத்துழைப்பவர்கள்….எல்லோரும் ஒரே நண்பர்கள்…எல்லாவற்றிலும் சமத்துவம்…..ஆதலால் வினோ யோசனை எதுவும் வேண்டாமே? தொடர்ந்து TRTதமிழ்ஒலியுடன் இணைந்திருந்து எல்லோரும் மகிழ்வுடன் இருப்போமாக!

    வாழ்க தமிழ்!

  24. KESAVAN Says:

    படித்ததிலே பிடித்த கவிதாகவிதை நினைவில் நின்ற நண்பர்களுக்கு…

    நாம் எதிர்பார்க்கவில்லை
    சந்திப்போம் என்று !
    நாம் எதிர்பார்க்கிறோம்
    பிரியப்போகிறோம் என்று !
    நான் எதிர்பார்க்கிறேன்
    என்னை மறக்கமாட்டீர்கள் என்று !

    தலைமுடி நரைத்தப் பிறகு
    தலைமுறை ஒன்று கடந்த பிறகு
    என்றோ ஒரு நாள் சந்தித்தால்…

    நன்றாய் பழகினோம் என்று
    நாம் பேசிய வார்த்தைகள்
    நினைவில் இருந்தால்…
    அன்று கூறுவோம்
    நம் நட்பு கடல் என்று

    நம் நினைவுகளை
    நெஞ்சில் பதித்துவிட்டேன்
    என் கையெப்பப் புத்தகத்தில்
    கையெழுத்து இடுங்கள் !

    எங்கள் முகங்களை
    நினைவில் நிறுத்திக் கொண்டேன்
    இருப்பினும் உங்கள்
    புகைப்படங்கள் தாருங்கள் !

    காலம் நினைத்தால்
    மீண்டும் சந்திப்போம்
    சரித்திரம் படைத்தவர்களாக !
    நீங்கள் சரித்திரம் படைக்க
    என் வாழ்த்துக்கள் !!

  25. N.Kanesh gummersbach Says:

    அன்பு நண்பா ! இவ்வளவு காலமும் ஒரு தொடர்பும் இல்லாது தமிழ் ஒலியால் ஒன்றானோம் . மீண்டும் பிரிவா? ஸ்ரீ லங்கா வதை முகாமில் தான் தமிழன் பேச முடியாது . அப்படி என்ன குழப்பம் ?உங்கள் சேவை எங்களுக்கு (தமிழ் ஒலி நேயர்களுக்கு ) தேவெய் . இனி பிரிவு வேண்டாம்.

Leave a Reply

Press Ctrl+g to toggle between English and Tamil