யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதலைப்புலிகளை சரணடையுமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் மறைந்துள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களை கண்டு பிடிக்க, சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாண பொது அமைப்புகள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களின் உதவிகளை கோரியுள்ளது.

இராணுவத்தினரால் வழங்கப்பட்ட 48 மணித்தியாலத்தினுள், விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் ஒருவரும் சரணடையாத நிலையிலேயே இந்த உதவி கோரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண குடா நாட்டின் பொது அமைப்புகள், அரச அதிகாரிகள் மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகளுடன், பலாலியில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் சிறிலங்கா படைத்தரப்பு விடுதலைப் புலிகள் தொடர்பிலான தகவல் சேர்க்கும் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளது.

இதற்கிடையில், கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடாத மற்றும் தொழிலற்று வீடுகளில் இருக்கும் இளைஞர்களை கைது செய்வதற்கான சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளை இராணுவம் முன்னெடுத்துள்ளது.

இந்த நிலையில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை இராணுவ முகாம்களுக்கு அழைத்து, அந்த இளைஞர்கள் தொடர்பான விபரங்களை சேகரித்து வருகிறது.

வடமராட்சி மற்றும் தென்மராட்சி பகுதிகளில் பொது மக்கள் பாரிய மனத்தாக்கங்களுக்கு உள்ளாகும் வகையில், இராணுவம் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.