வெளிநாட்டில் வேலைபார்க்கும் இந்தியாவுக்கு வரவழைக்கும் டி.சி.எஸ்.

மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் ( டி.சி.எஸ்.,), வெளிநாடுகளில் இருக்கும் அதன் நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களில் பெரும்பாலானவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருகிறது.

செலவை குறைக்கும்விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவிக்கிறது. நாங்கள் ஆன்சைட் – ஆஃப்ஷோர் மாடலில் வேலை செய்ய திட்டமிட்டிருக்கிறோம். எனவே பெரும்பாலான வேலைகளை இந்தியாவிலேயே செய்ய தீர்மானித்திருக்கிறோம். இது எங்களுக்கு ஆகும் செலவை கணிசமாக குறைக்கிறது என்கிறார் டி.சி.எஸ்.,ஸின் சி.ஓ.ஓ. சந்திரசேகரன். இருந்தாலும் இந்த நடவடிக்கையால் நாங்கள் வெளிநாடுகளில் இருந்து முழுவதுமாக வெளியேறி விடுவோம் என்ற அர்த்தமில்லை என்றார் அவர். வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை இந்தியாவுக்கு அழைத்ததை அடுத்து, 2008 – 09 நான்காவது காலாண்டில் அதன் வருமானம் அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவில் இருந்த அவர்களது ஊழியர்களை இந்தியா அழைத்ததன் மூலம் அது, ரூ.121 கோடி யை செலவில் மிச்சப்படுத்தியிருக்கிறது. இருந்தாலும் எவ்வளவு ஊழியர்கள் இதுவரை இந்தியாவுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லவில்லை. இருந்தாலும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இங்கு அழைக்கப்பட்டிருப்பார்கள் என்று தெரிகிறது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.