‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (20.04.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் இன்று மேற்கொண்டு வரும் பாரிய படை நடவடிக்கையின் போது பெரும் மனிதப் பேரவலம் நிகழ்ந்துள்ளது. இதில் 988-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1,215-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை பகுதியை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட்கிழமை அதிகாலை தன்னிடம் உள்ள அனைத்து நாசகார ஆயுதங்களின் சூட்டாதரவுடன் பாரிய படை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
அதேவேளையில் மக்கள் மீதும் மக்கள் வாழ்விடங்கள் மீதும் ஆட்லெறி எறிகணை, கொத்துக்குண்டு எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார், பீரங்கி, கனரக துப்பாக்கி, தொலைதூர துப்பாக்கி மற்றும் வான் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் அகோரமாக நடத்தியுள்ளனர்.
இதில் 988-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1,215-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஏலவே பொக்கணைப் பகுதிக்குச் சென்ற மக்களை கேடயமாக பாவித்துக்கொண்டு பாரிய நடவடிக்கையினை சிறிலங்கா படையினர் மேற்கொண்டதுடன், அதற்கு ஒத்துழைக்காத மக்கள் மீதும் சரசமாரியான துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாகவும் இதிலும் பெருமளவிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னியில் இடம்பெயர்ந்த தமிழ்மக்களை அவலப்படுத்த சிறிலங்கா படையினர் இரவு இரவாக தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்நாள் சனிக்கிழமை பின்னிரவில் தொடங்கிய தொடர் ஆட்லெறி எறிகணை, கொத்துக்குண்டு எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார், பீரங்கி, கனரக துப்பாக்கி, தொலைதூர துப்பாக்கி மற்றும் குறிசூட்டு தாக்குதல்கள் இன்று காலை வரை சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்டு வருகின்றன.
மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளான மாத்தளன், வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்களை இலக்குவைத்து சிறிலங்கா படையினர் மேற்படி தாக்குதல்களை அகோரமாக நடத்தி வருகின்றனர்.
இத்தாக்குதல்களால் மக்கள் தொடர்ந்து இழப்புக்களை சந்தித்து வருகின்றனர்.
நேற்று இரவு தொடக்கம் இன்று காலை வரை 34 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 46 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகொலை செய்யப்பட்டவர்களில் நெடுங்கேணி, பழம்பாசியைச் சேர்ந்த கிராம சேவையாளரான நல்லைநாதன் ரேணுகாந்தன் என்பவரும் அடங்குவார் என புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் காரணமாக அப்பாவிச் சிவிலியன்கள் எதிர்நோக்கி வரும் பேரவலங்கள் நாளுக்கு நாள் உயர்வடைந்து செல்வதாக கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் பொப் றே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்று வரும் யுத்த நிலவரம் குறித்து உலக சமூகம் தேவைக்கு அதிகமாக மௌனம் சாதித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையில் அல்லலுறும் அப்பாவிச் சிவிலியன்களுக்கு உடனடி நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

யுத்தம் காரணமாக 150,000த்திற்கும் மேற்பட்ட சிவிலியன்கள் உணவு மற்றும் குடிநீர் வசதியின்றி அவதியுறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வன்னிச் சிவிலியன்களது மனிதாபிமானப் பிரச்சினைகளை உலக சமூகம் தொடர்ந்தும் வேடிக்கை பார்க்கக் கூடாது எனவும், கனேடிய அரசாங்கம் தலைமையேற்றும் சிவிலியன் பாதுகாப்பு நடவடிக்கை விரைந்து ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வன்னிச் சிவிலியன்களுக்கு தேவையான அடிப்படை மனிதாபிமான உதவிகள் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு போன்றவற்றை உறுதிப்படுத்த சர்வதேச சமூகம் தயக்கம் காட்டக் கூடாதென அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியாக தீர்வு காண முடியாது என்பதனை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்து காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டும் எனவும் பொப் றே கோரிக்கை விடுத்துள்ளார்.

வன்னிச் சிவிலியன்கள் தங்கியிருக்கும் அகதி முகாம்களை ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் பார்வையிட வேண்டும் எனவும், குறித்த நிலைமைகள் குறித்து சர்வதேச சமூகம் மற்றும் ஊடகங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி சிறிலங்கா அரசாங்கத்தின் நண்பர்; அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தனது நண்பர் எனக் குறிப்பிட்டது கவலை தருகின்றது என்று சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்புத்துறை விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு முதலைமைச்சர் மு.கருணாநிதி சிறிலங்கா அரசாங்கத்தின் நண்பன். ஆனால், எமது நண்பன் கருணாநிதி விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தனது நண்பன் என குறிப்பிட்டது எமக்கு கவலை தருகின்றது.
எனினும் தற்போது தேர்தல் காலம் என்பதனால் தமிழகத்தில் அரசியல் இலாபத்தை கருத்தில் கொண்டே கருணாநிதி இந்த அறிக்கையை விடுத்திருப்பார் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார
!!!!!!!!!!!!!!!!!!
இலங்கை அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ள அகதி முகாம்களில் தங்கியுள்ள வன்னிச் சிவிலியன்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கி வருவதாக பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் கார்டியன் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

உணவு, குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகளின்றி மக்கள் பெரும் இடர்களை சந்தித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதிக வசதிகள் உடைய அகதி முகாமாக மனிக்பாம் முகாம் கருதப்படுவதாகவும், குறித்த அகதி முகாமில் கூட போதியளவு வசதிகள் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மையில் சர்வதேச ஊடகவியலாளர்கள் சிலருக்கு பனிக்பாம் அகதி முகாமுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டதாகவும், இதன் போது மனிக்பாம் முகாம் மக்கள் சுகாதார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றமை தெரியவந்துள்ளது.

அகதி முகாம்களைச் சுற்றி பாரியளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அகதி முகாம்களைச் சுற்றி மின் கம்பிகள் இடப்பட்டுள்ளதாகவும், இராணுவப் படைவீரர்கள் முகாமைச் சுற்றி பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

போதியளவு சுகாதார வசதிகள் இன்மையினால் மக்கள் தொற்று நோய்களை எதிர்நோக்கக் கூடிய அபாயம் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது .

அகதி முகாமைச் சேர்ந்த மக்களது சுதந்திர இடம் நகர்வு முற்று முழுதாக தடைப்பட்டுள்ளதென கார்டியன் இணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போது தெரிவித்திருக்கின்றார்.
“விடுதலைப் புலிகளின் புதிய அனைத்துலகத் தொடர்பாளர் செல்வராஜா பத்மநாதனுடன் பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கு தான் விரும்புவதாக அரச தலைவரின் மூத்த ஆலோசகர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார்” எனவும் நீர்கொழும்பில் இடம்பெற்ற ஐ.தே.க.வின் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போது ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் இந்த பிந்திய நகர்வு தொடர்பாக அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் தான் கேள்வி எழுப்புவதாகத் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, அரச தலைவருடன் பகிரங்க விவாதம் ஒன்றுக்குத் தான் தயாராக இருந்த போதிலும், அரச தலைவர் துரதிர்ஸ்ட்டவசமாக அதனைத் தவிர்த்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
“விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நன்மையளிக்கக்கூடிய வகையில் அவர்களுடனான போர் நிறுத்த உடன்படிக்கையை நான் கைச்சாத்திட்டதாக அரசாங்கம் என்மீது குற்றச்சாட்டைச் சுமத்துகின்றது” எனக் குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க, “நான் அவ்வாறு செய்திருந்தால் விடுதலைப் புலிகள் என்னைத்தான் அரச தலைவராக்கியிருப்பார்கள். ஆனால், அவர்கள் அரச தலைவர் தேர்தலில் என்னைத் தோற்கடிக்கும் வகையில் செயற்பட்டது நான் தேசத்துக்குத் துரோகம் செய்யவில்லை” என்பதையே புலப்படுத்துகின்றது” எனவும் சுட்டிக்காட்டினார்.
“சமாதான முயற்சிகளும் போர் நிறுத்த முயற்சியும் சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்தினாலேயே முன்னெடுக்கப்பட்டது” எனவும் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, “ஏற்கனவே தொடங்கப்பட்ட அந்த முயற்சியை முன்னெடுத்துச் சென்ற நடவடிக்கையை மட்டுமே நாம் முன்னெடுத்தோம்” எனவும் குறிப்பிட்டார்.
“இது தொடர்பாக பகிரங்க விவாதம் ஒன்றுக்கு வருமாறு நான் சவால் விட்டிருந்த போதிலும் அரச தலைவர் அதனைத் தவிர்த்துவிட்டார்” எனக் குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க, “அரசாங்கம் சொல்வது உண்மையாக இருந்தால் இந்த விவாதத்தில் அரச தலைவர் வெற்றி பெறுவார். அதன் மூலம் ஐ.தே.க.வின் பிரச்சாரங்கள் அனைத்தும் சீர்குலைந்துவிடும். ஆனால் அரச தலைவர் அவ்வாறான விவாதம் ஒன்றுக்கு வர மறுத்துவிட்டார்.” எனவும் தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!
இலங்கையில் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டால் மட்டுமே சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்க வேண்டுமென அமெரிக்கா புதிய நிபந்தனையொன்றை விதித்துள்ளதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து, இலங்கை அரசாங்கம் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனாக கோரியுள்ளது.

இந்த நிலையில் யுத்த நிறுத்தம் ஏற்படுத்தாத பட்சத்தில் இலங்கைகான கடனுதவி நிறுத்தப்படும் என அமெரிக்கா இரகசிய எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.

யுத்த நிறுத்தமொன்றை அமுல்செய்யுமாறு அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் விடுத்த கோரிக்கையை இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ நிராகரித்ததனைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன ..

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சிறிலங்கா இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்று தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்படுவதாகக் கூறப்படும் சிங்கள இளைஞர் ஒருவரைக் கண்டுபிடிப்பதற்காக பொதுமக்களின் உதவியை காவல்துறை நாடியிருக்கின்றது.
இராணுவத்தில் இருந்து பல வருடங்களுக்கு முன்னர் தப்பிச்சென்ற தென்னக்கோன் கமகே மில்டன் என்ற இந்த இளைஞர் தற்போது விடுதலைப் புலிகளுடன் இணைந்து தென்பகுதியில் இடம்பெற்ற பல தாக்குதல் நடவடிக்கைகளில் கலந்துகொண்டதாக காவல்துறையின் தலைமையகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தில் இருந்து தப்பிச் செல்லும் போது இவர் கிழக்கு மாகாணத்தில் உள்ள வெலிக்கந்தை இராணுவ முகாமில் பணியாற்றியதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அக்காலப் பகுதியிலேயே அவர் புலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
31 வயதான மில்டன் 1996 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்துகொண்டார். இவர் தொடர்பான தகவல்களைத் தெரிவிப்பதற்குத் தேவையான தொலைபேசி இலக்கங்களும், அவரது படமும் காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது.
மொனறாகல மாவட்டத்தில் உள்ள புத்தள பகுதியில் இரு வாரங்களுக்கு முன்னர் சிங்களக் கிராமங்கள் இரண்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. 12 பேர் கொல்லப்பட்ட இந்தத் தாக்குதலில் விடுதலைப் புலிகளுக்கு உதவியாக மில்டனும் செயற்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தென்பகுதியிலில் உள்ள காடுகளுக்குள் மறைந்திருந்து செயற்படும் ராம் தலைமையிலான விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியுடன் மில்டன் இணைந்து செயற்படுவதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்திருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் உள்ள சிறிலங்காவின் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பாகவும், தேசியப் பிரச்சினையில் நோர்வேயின் பங்களிப்பு தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டும் என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணி கோரியுள்ளது.
இது தொடர்பாக சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டாரவுக்கு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
நோர்வேயின் தலையீடு பற்றி விவாதிக்கப்படுவது தற்போதைய காலகட்டத்தில் அவசியம் என்பதால் அதற்கான நேரத்தை ஒதுக்குமாறு இக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட விமல் வீரவன்ச, நோர்வேயுடனான இராஜதந்திர உறவுகளை சிறிலங்கா முற்றாகத் துண்டித்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் தம்முடைய நிலைப்பாடு எனவும் தெரிவித்தார்.
நோர்வேயை நாட்டை விட்டு வெளியேறுமாறு கோரி கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்தின் முன்பாக தமது கட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று திங்கட்கிழமை நடத்துவதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள மக்களுக்குச் சேவையாற்றி வரும் அரசாங்க மருத்துவர்கள் மிகவும் களைப்படைந்துள்ளதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்திருக்கின்றது.
இந்தப் பகுதியில் இடம்பெறும் போரினால் காயமடையும் ஆயிரக்கணக்கான மக்களுக்குச் சிகிச்சையளிப்பதற்குத் தேவையான மருந்துகள் இல்லாது உள்ளதுதான் தாம் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினையாக உள்ளது எனவும் செஞ்சிலுவைச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தப் பகுதியில் இருந்து தரைவழியாக வெளியேறும் மக்களுக்கு பணியாற்றுவதற்கு தாம் விரும்புவதாகவும், இருந்தபோதிலும் அதற்கான அனுமதி தமக்குக் கிடைக்கவில்லை எனவும் செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டிருக்கின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரைப் பகுதியில் உள்ள ஒரு சிறிய பகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ள செஞ்சிலுவைச் சங்கம் அவர்களின் வாழ்க்கை ஆபத்தானதாகவே உள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
இந்தப் பகுதியுடன் தரைவழியான தொடர்புகள் எதுவும் செஞ்சிலுவைச் சங்கத்துக்கு இல்லாமையால் கடல்வழியாக மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை செஞ்சிலுவைச் சங்கம் மேற்கொண்டு வருகின்றது .
வாராந்தம் இரண்டு அல்லது மூன்று தடவைகளில் 400 அல்லது 500 பேர்களாக கப்பல்கள் மூலம் நோயாளிகள், வயதானவர்கள் மற்றும் மோசமான நிலையில் காயமடைந்தவர்கள் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆதரவுடன் வெளியேற்றப்படுகின்றனர்.
“இங்குள்ள நிலைமைகள் மிகவும் மோசமானதாக உள்ளது” எனக் குறிப்பிடும் செஞ்சிலுவைச் சங்கத்தின் முக்கிய பணியாளரான போல் கஸ்ட்டலா, “தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இங்குள்ள மருத்துவ வசதிகள் போதுமானதாக இல்லை” எனவும் தெரிவித்தார்.
“சுகாதார அமைச்சைச் சேர்ந்த மருத்துவர்கள் இப்போதும் இங்கு பணிபுரிகின்றார்கள்” எனக் குறிப்பிடும் அவர், “இந்த மருத்துவர்கள் மாதக்கணக்காக இரவு-பகலாக எந்தவிதமான இடைவெளியும் இல்லாமல் பணிபுரிவதால் மிகவும் களைப்படைந்து விட்டனர். அத்துடன் மருந்துப் பொருட்களின் விநியோகமும் மிகவும் குறைவாகவே இருக்கின்றது” எனத் தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமக்கு உரிய வகையில் மரியாதை அளிக்கப்படவில்லை என பிராந்தியங்களுக்குப் பொறுப்பான பிரதிப் காவற்துறை மா அதிபர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

அண்மையில் காவற்துறை திணைக்களத்தில் ஏற்படுத்தப்பட்ட புதிய மாற்றங்களின் அடிப்படையில் பிரதிப் காவற்துறை மா அதிபர்கள் காவற்துறை தலைமையகங்களிலிருந்து வெளியேறி தனியான காரியாலங்களை அமைத்துக்கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், காவற்துறை நிலையப் பொறுப்பதிகாரி ஒருவருக்கு வழங்கப்படும் சலுகைகள் கூட தமக்கு வழங்கப்படவில்லை என பிரதிப் காவற்துறை மா அதிபர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக சில பிரதிப் காவற்துறை மா அதிபர்கள் ஹோட்டல்களில் அறைகளை ஒதுக்கி அதில் தமது பணிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது .

!!!!!!!!!!!!!!!!!!!
புத்தாண்டினை முன்னிட்டு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 48 மணித்தியால தற்காலிக போர்நிறுத்தத்தினை நீடிக்குமாறு வெளிநாட்டு பிரதிநிதிகள் என்னிடம் கேட்டுக்கொள்கின்றனரே தவிர ஒரு மணித்தியாலத்திற்கு போர்நிறுத்தத்தை கடைப்பிடிக்குமாறு பிரபாகரனிடம் கோரிக்கை விடுப்பதில்லை, பிரபாகரனை ஒரு மணித்தியாலத்திற்கேனும் போர்நிறுத்தம் செய்யுமாறு சர்வதேச சமூகம் வலியுறுத்த முடியுமா? என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.

சர்வதேச யுத்த கொள்கைகளை நாம் மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டி எங்களை சர்வதேச யுத்த நீதிமன்றத்தின் மின்சார நாற்காலியில் அமரவைப்பதற்கு முயற்சிகளை சிலர் மேற்கொண்டுவருக்கின்றனர் எனினும் தாய் நாட்டிற்காக நான் கழுத்தையும் கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றேன் என்றும் அவர் சொன்னார்.

அலரிமாளிகையில் நடைபெற்ற ஒன்றுக்கூடலில் ஆயுர்வேத நிபுணர்கள் ,சமாதான நீதவான்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
என் மக்களை காப்பாற்றுவதற்கு முன்வர யாருக்கும் வலிமை இல்லையே. மக்கள் சாவதை பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை. இவ்வாறு நேற்று முன்தினம் வன்னிப்பகுதியில் இருந்து தமிழகம் சென்ற இலங்கை அகதி கண்ணீர் மல்க கூறினார்.
இலங்கையில் விடுதலை புலிகளுக்கும், இராணுவத்திற்கும் இடையே நடைபெற்று வரும் போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இதனால் அப்பாவி தமிழர்கள் பதுங்கு குழிகளில் வாழ்க்கை நடத்தி வரும் அவலம் உள்ளது. மேலும் பாதுகாப்பு பகுதிகளிலும் இலங்கை இராணுவம் குண்டுகளை கொத்து கொத்தாக வீசி வருவதால் உயிருக்கு பயந்து போய் அப்பாவி தமிழ்மக்கள் படகு மூலம் தமிழகத்திற்கு அகதிகளாக வந்து கொண்டு இருக்கின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட கண்ணாடி இழைப் படகில் 5 ஆண்கள், 4 பெண்கள், 2 குழந்தைகள் என 11 பேர் அகதிகளாக வேளாங்கண்ணி புதிய கடற்கரையில் வந்து இறங்கினர். இந்த தகவலை அறிந்த வேளாங்கண்ணி பொலிஸார், அந்த 11 அகதிகளையும் பொலிஸ் வானில் ஏற்றிக் கொண்டு நாகைக்கு வந்தனர்.
அங்கு தனி அறையில் வைத்து, உண்மையிலேயே இவர்கள் அனைவரும் அப்பாவி தமிழர்கள் தானா? அல்லது விடுதலை புலிகளா? என்று தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் இவர்கள் அனைவரும் விடுதலை புலிகள் அல்ல என்பது தெரியவந்தது. மேலும் முல்லைத்தீவில் இருந்து அதிகாலை 41/2 மணிக்கு படகில் புறப்பட்டு சுமார் 15 மணி நேர பயணத்திற்கு பின்பு வேளாங்கண்ணி வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து நேற்றுகாலை 11 பேரையும் பொலிஸார் பலத்த பாதுகாப்புடன் மண்டபம் அகதிகள் முகாமிற்கு கொண்டு சென்றனர்.
முன்னதாக அகதியாக வந்த ரொபேர்ட்சன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கை இராணுவம் விமானங்கள் மூலமாகவும், பீரங்கி மூலமாகவும் குண்டுகளை கொத்து கொத்தாக எங்கள் மக்கள் மீது வீசி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் பதுங்கு குழிகளில் தங்கி, வாழ்ந்து வருகின்றனர். சிறுவர்களும் பதுங்கு குழிகளில் தான் உள்ளனர் . எந்தநேரமாக இருந்தாலும் சரி பதுங்கு குழியை விட்டு வெளியே வரவே முடியவில்லை . எப்போதும் குழிக் குள்ளேயே இருக்கக்கூடிய நிலை உள்ளது.
கடுமையான சண்டை நடப்பதால் எங்கள் கண்முன்பே எம் மக்கள் செத்து மடிகின்றனர் . பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கிறது. பயந்து கொண்டே வாழ வேண்டிய சூழ்நிலை உள்ளது . எம் மக்களை காப்பாற்றுவதற்கு முன்வர யாருக்கும் வலிமை இல்லையே. மக்கள் சாவதை பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை. இதனால் அதிகாலை 41/2 மணிக்கு படகில் புறப்பட்டோம் . வேளாங்கண்ணிக்கு தான் வர வேண்டும் என்று எண்ணி வரவில்லை. இந்தியாவில் எங்காவது ஓரிடத்திற்கு செல்ல வேண்டும் என்று தான் புற பட்டோம். ஆனால் வேளாங்க ணிக்கு வந்துள்ளோம்.
இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
india
!!!!!!!!!!!!!!!!!
பிரபாகரன் தீவிரவாதி அல்லர் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளதற்கு தேர்தல் பயமே காரணம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரை இலங்கைப் பிரச்சினை ஒரு முக்கிய விஷயமாக மாறியுள்ளது. இதனால்தான் இலங்கை பிரச்னை தொடர்பாக தினமும் அறிக்கையோ அல்லது பேட்டியோ அளிக்கிறார் முதல்வர் கருணாநிதி.
இலங்கை அரசு போரை நிறுத்தாவிட்டால், ராஜீய உறவுகளை மத்திய அரசு துண்டிக்க வேண்டும் என்று இரண்டு தினங்களுக்கு முன்பு கூறினார் முதல்வர் கருணாநிதி.
ஆனால், மத்திய அரசு அந்த நிலையை எடுக்கவில்லை. இதையடுத்து இப்போது எல்டிடிஈ இயக்கத் தலைவர் பிரபாகரன் தீவிரவாதி அல்ல எனக் கூறுகிறார். எல்.டி. டி.. தடை செய்யப்பட்ட இயக்கமாகும்.
மத்திய அரசில் தி.மு.. அங்கம் வகிக்கிறது; இந்த நிலையில் எல் .டி.டி.. இயக்கத்தின் மீதான தடையை மத்திய அரசு நீக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி ஏன் வற்புறுத்தவில்லை?
இலங்கைப் பிரச்னையில் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்து விட்டது என தமிழக மக்கள் கருதுகின்றனர்.
எனவே தேர்தல் பயம் காரணமாகவே பிரபாகரனுக்கு ஆதரவாகப் பேசுகிறார் முதல்வர் கருணாநிதி . கருணாநிதியின் நிலைப்பாடு, முரண்பாடுகளின் மொத்த உருவமாக உள்ளது என்றார் டி. ராஜா .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் உச்சக்கட்ட போர் நடக்கிறது. நம்முடைய தமிழர்கள் 31/2 லட்சம் பேர் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட கொத்துக்குண்டுகளை இராணுவத்தினர் வீசுகின்றனர். இதையெல்லாம் கண்டும் காணாமல் இந்திய அரசு இருந்து கொண்டிருக்கிறது என மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
.தி.மு.. தேர்தல் நிதியளிப்பு கூட்டம் அமைந்தகரையில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு .தி.மு.. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமை தாங்கினார்.
.தி.மு.. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:-
இலங்கையில் உச்சக்கட்ட போர் நடக்கிறது. நம்முடைய தமிழர்கள் 31/2 லட்சம் பேர் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது தடை செய்யப்பட்ட குண்டுகளை இராணுவத்தினர் வீசி வருகின்றனர். தாயின் வயிற்றில் இருக்கும் சிசுக்கள் கொடூரமாக கொல்லப்பட்டு இருக்கின்றன . இதையெல்லாம் கண்டும் காணாமல் இந்திய அரசு இருந்து கொண்டிருக்கிறது.
தமிழர்களை கொல்ல இந்த குண்டுகளை இந்திய அரசு தான் கொடுத்து இருக்கிறது என்று நான் குற்றஞ்சாட்டுகிறேன். பிரபாகரனை பிடித்தால் இரத்த ஆறு ஓடும் என்று நான் பேசினேன் என்று வழக்கு பதிவு செய்கிறார்கள். இதை நான் மறுக்கவில்லை . நான் மரணத்திற்கு பயப்படவில்லை.
இலங்கை தமிழர் மீது அக்கறை இருந்தால் ஏன் போரை நிறுத்த சொல்லவில்லை. இலங்கை அரசு மீது ஏன் பொருளாதார தடை விதிப்போம் என்று ஏன் சொல்லவில்லை . இலங்கைக்கு உதவ மாட்டோம் என்று ஏன் இந்தியா சொல்லவில்லை.
பிரபாகரன் போரில் இறந்து போனால் வருத்தப்படுவேன் என்று கருணாநிதி சொல்கிறார். அவர் சாகடிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? அவர் சாக மாட்டார்.
தனி ஈழம் அமைக்க பாடுபடுவோம் என்று .தி.மு.. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஜெயலலிதா ஒரு முடிவு எடுத்தால் அதில் உறுதியாக இருப்பார். அவர் ஒருவேளை இந்தியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவருக்கு நாங்கள் ஆதரவு தெரிவிப்போம். என்றார
!!!!!!!!!!!!!!!!!!
நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் இஸ்ரேல் நாட்டில் தயாரிக்கப்பட்ட உளவு செயற்கைக் கோள் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்விக்கான சிறிய செயற்கைக்கோள்கள் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. பி.எஸ். எல்.விசி 12 செலுத்துவாகனம் மூலம் இந்த செயற்கைக்கோள்கள் இரண்டும் காலை 6.45 மணிக்கு விண்ணில் சீறிப்பாய்ந்தன
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, உத்தரப்பிரதேச முதல்வர் கல்யாண் சிங் உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை காங்கிரஸ் நம்பியதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறிய விளக்கத்தை ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் நிராகரித்துள்ளார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் காங்கிரஸ் கட்சிக்கும் பொறுப்பு இருக்கிறது என்று லாலுபிரசாத் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டை அஸ்ஸாம் மாநிலத்தில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் மறுத்த பிரதமர் மன்மோகன்சிங் , பாபர் மசூதி பாதுகாக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் உறுதி அளித்ததாகவும், அதனை காங்கிரஸ் நம்பியதுதான் தவறு என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த விளக்கத்தை லாலுபிரசாத் நேற்று பாட்னா அருகே தேர்தல் பிரசாரத்தின் போது நிராகரித்துள்ளார் .

பாபர் மசூதி இடிப்பில் காங்கிரசின் தொடர்பு, சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது. மசூதி இடிக்கப்படுவதை அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக லாலு பிரசார் குறைகூறினார். நரசிம்மரா மசூதி இடிப்பைத் தடுக்க முயற்சி மேற்கொள்ளவில்லை என்றார் லாலு.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தி.மு.., .தி.மு.., கட்சி தலைவர்களுக்கு தைரியம் இருந்தால் தே.மு.தி..வைபோல் தனித்து போட்டியிடவேண்டும் என அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜயகாந்த் பேசினார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சேலம் மக்களவை தொகுதி வேட்பாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான தங்கபாலு வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக் கட்சியின் உள்ளூர் தலைவர்களும், தொண்டர்களும் ரகளையில் ஈடுபட்டனர். இதன் மூலம் சேலம் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து வந்த உட்கட்சி பூசல் அம்பலத்துக்கு வந்தது. .

சேலம் மக்களவை தொகுதி வேட்பாளரான தங்கபாலு சேலத்தில் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே ஆதரவு திரட்டுவதற்கு வந்திருந்தார். இதற்கான கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளரும், அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம், முன்னாள் காங்கிரஸ் எம்.எல். . ஆர்.ஆர்.சேகரன், முன்னாள் காங்கிரஸ் எம்.பி. தேவதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

இவர்கள் முன்னிலையிலேயே தங்கபாலுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் தலைவர்களும், தொண்டர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரை கூட்டத்தில் பேசவிடாமல் தடுத்துவிட்டனர். அப்போது, வீரபாண்டி ஆறுமுகம் தலையிட்டு அரசியல் மற்றும் தனிநபர் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதற்காக சண்டை போடும் நேரம் இதுவல்ல என்று சொல்லி காங்கிரஸ் தொண்டர்களை அமைதிப்படுத்தினார்.

‘கருத்துவேறுபாடுகள் காரணமாக சண்டை போட்டுக்கொண்டால் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற முக்கிய நோக்கம் நிறைவேறாது. யார் வேட்பாளர் என்பது முக்கியமல்ல. அவரை (தங்கபாலு) வேட்பாளராக கட்சித் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். எனவே அவரது வெற்றிக்காக நீங்கள் பாடுபட வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சியினரை வீரபாண்டி ஆறுமுகம் கேட்டுக்கொண்டார்.

அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும். அதற்கு முதல் கட்டமாக காங்கிரஸ் கட்சியினர் முதலில் தங்களுக்குள் ஒற்றுமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்தார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தேர்தல் விதி மீறல்:njhlh;ghf நடிகர் சிரஞ்சீவிக்குஆந்திர கோர்ட்டு பிடிவாரண்டுgpwg;gpj;J உத்தரவு ,l;Ls;sJ
பிரஜா ராஜ்ஜியம் கட்சி தலைவரும் நடிகருமான சிரஞ்சீவி ஆந்திராவில் பிரசாரம் செய்து வருகிறார். அவர் கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி கர்னூல் மாவட்டம் நந்தியாலா பகுதியில் இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்தார். இதுபற்றி காங்கிரசார் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதையடுத்து நந்தியாலா போலீசார் சிரஞ்சீவி மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் விஷ்ணு வர்த்தன்ரெட்டி, மொய்ன்கான், மஞ்சு நாதரெட்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர் . இவ்வழக்கு கர்னூல் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் சிரஞ்சீவி ஆஜராகவில்லை. அவர் கோர்ட்டில் 17-ந் தேதி ஆஜராகும்படி நீதிபதி தேஜேனவரி உத்தரவிட்டார் .
ஆனால் சிரஞ்சீவி நேற்றும் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு பிடி வாரண்டுபிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
விஷ்ணுவர்த்தன் ரெட்டி, மொய்ன்கான், மஞ்சு நாதரெட்டி ஆகிய 3 பேரும் நேற்று ஆஜரானார்கள்.பின்னர் ஜாமீன் பெற்று திரும்பினர் .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தென் தமிழகத்தில் நிலவும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணுமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகத்தில் 100 இடங்களில் ஏப்ரல் 27-ல் புதிய தமிழகம் கட்சி சார்பில் ரயில் மறியலுக்குப் பதிலாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
அவர் ராஜபாளையத்தில் செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்ததாவது: தென்காசி மக்களவைத் தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். எங்கள் கட்சி சார்பில் தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர் நிறுத்தப்படுவார்கள். ஏப்ரல் 22 முதல் பிரசாரம் செய்ய உள்ளேன் என்றார் கிருஷ்ணசாமி.
!!!!!!!!!!!!!!!!!!!
world
!!!!!!!!!!
சீனாவிடம் இருந்து திபெத்துக்கு விடுதலை வேண்டி தலாய் லாமாவின் சகோதரரின் மகன் ஜிக்மி நோர்ப் அமெரிக்காவில் 1, 448 கி.மீ. தூரம் நடைப்பயணம் மேற்கொண்டார். இண்டியானாவில் கடந்த நான்கு வாரங்களுக்கு முன் நடைப்பயணத்தை தொடங்கிய அவர் நியூ யார்க்கில் உள்ள சீன தூதரகம் முன்பு வெள்ளிக்கிழமை இரவு தனது பயணத்தை நிறைவு செய்தார். திபெத் மக்களை சீனா அடிமைப்படுத்தி வருகிறது.
திபெத்துக்கு சீனாவிடம் இருந்து விடுதலை வேண்டும் என்று ஜிக்மி தெரிவித்தார். இவரது தந்தை மறைந்த தாக்சர் ரின்போச்சே, தலாய் லாமாவின் சகோதரர். அவரும் திபெத்தின் விடுதலைக்காக போராடி வந்தார். திபெத் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று கூறி அதை சீனா தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. ஆனால் தங்கள் மத உரிமை , சுதந்திரத்தை சீனா பறிப்பதாகக் கூறி திபெத்தியர்கள் போராடி வருகின்றனர்.
!!!!!!!!!!!!!!!!!!!

பாகிஸ்தான் அபாயகரமான நிலையில் உள்ளது என்று அந்நாட்டு முன்னாள் அதிபர் பர்வீஸ் முஷாரப் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவுக்கு செல்லும் முன் இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை, செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது : பாகிஸ்தானில் நிலவி வரும் சூழ்நிலைகள் குறித்து சர்வதேச சமூகம் கூறுவதில் பாகிஸ்தான் தலைமை அதிக கவனமும், அக்கறையும் எடுத்துக் கொள்ள வேண்டும். பாகிஸ்தானில் நிகழ்ந்து வரும் பல விருப்பத்தகாத சம்பவங்கள் மிகவும் அபாயகரமானவை . இது தொடர்பாக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
உலக நாடுகளுடன் இணைந்து செயல்படும் அதே நேரத்தில், எதிர்காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகள் தொடர்பாகவும் உறுதியான நடவடிக்கைகள் தேவை. பாகிஸ்தான் மீது வேறு எந்த நாடும் அதிகாரம் செலுத்தி வழிநடத்த முடியாது. பாகிஸ்தானில் தலிபான்களுடன் பேச்சு நடத்துவது குறித்து இப்போது எதுவும் கூறிவிட முடியாது என்றார் முஷாரப்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தென்னாப்பிரிக்காவில் வரும் புதன்கிழமை பொதுத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் இறுதிப் பிரச்சாரக் கூட்டத்தில், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, முன்னறிவிப்பில்லாமல் தோன்றியுள்ளார்.
கட்சியின் தலைவர் ஜேக்கப் ஸூமாவுடன் ஒரு கோல்ஃப் மைதான வண்டியில் கூட்டத்துக்கு வந்த மண்டேலாவுக்கு பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் ஆரவார வரவேற்பு அளித்துள்ளனர்.
ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போவது இந்தத் தேர்தல்தான் என்று தெரிவித்துள்ள ஜேக்கப் ஸூமாவுக்கு மண்டேலாவின் ஆதரவு கிடைத்திருப்பது மிகவும் சாதகமானது என்று இந்தப் பிரச்சாரக் கூட்டத்துக்கு சென்றிருந்த பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
1994
ல் இனவெறி ஆட்சி முடிவுக்கு வந்ததன் பின்னர் இப்போதைய தேர்தல்தான் மிக முக்கியத் தேர்தலாக பார்க்கப்படுகிறது என்றும் மற்ற கட்சிகளிடம் இருந்து ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கடும் போட்டியை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
!!!!!!!!!!!!!!!!!!
நோர்வே நாட்டு டாங்கர் கப்பல் ஒன்றை கடத்துவதற்கு ஏடன் வளைகுடா பகுதியில் சோமாலிய கடற்கொள்ளையர்கள் மேற்கொண்ட முயற்சியை நேட்டோ போர்க்கப்பல்களும், ஹெலிகாப்டர்களும் முறியடித்துள்ளன.
கொள்ளையர்களை இரவு நேரத்தில் மடக்கி பிடித்து விசாரித்த கனேடிய போர்க்கப்பல் ஒன்று அவர்களை விடுவித்ததாக நேட்டோ கூறியுள்ளது.
கனேடிய சட்டத்தின்ப்படி கடற்கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக நேட்டோ கூறுகின்றது .
சனிக்கிழமையன்று, டச் படைகள் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தி வைக்கப்பட்ட இருபது பேரை விடுவித்தனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இரானில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அமெரிக்க இரானிய செய்தியாளரான ரோக்சானா சபேரி விவகாரத்தில் இரான் அதிபர் மஹமுது அஹெமெதிநிஜாத் தலையீட்டுள்ளார்.
ரோக்சானா சபேரி நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார். இரானின் அரச வக்கீலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மேல்முறையீடு செய்யும் போது சபேரிக்கு அனைத்து சட்டரீதியான உரிமைகளும் கிடைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
வேவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த சனிக்கிழமையன்று அவருக்கு எட்டு ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இரான் அதிபரின் இந்தக் கடிதம், சட்ட நடைமுறையை குறை கூறுகின்றதா அல்லது இந்த வழக்கின் தன்மையை உணர்த்துகின்றதா என்பது தெளிவாக தெரியவில்லை என தெஹ்ரானில் இருக்கும் செய்தியாளர் கூறுகின்றார
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தெற்கு வாசிர்ஸ்தான் பகுதியில் ஆளில்லா விமானம் வீடு ஒன்றின் மீது இந்தத் தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளுர் தலிபான் தளபதி ஒருவரின் வீட்டை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.
தெற்கு வாசிர்ஸ்தான் பகுதி பாகிஸ்தானிலுள்ள தலிபான் தலைவரான பெய்துல்லா மெஹசுத்தின் பலமான கோட்டையாகும்.
அமெரிக்க ஏவுகணை தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும், ஏனென்றால் அவை தங்களுடைய நாட்டின் இறையான்மையை பாதிக்கிறது என பாகிஸ்தான் சொல்லி வருகிறத
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
1euro = 150.45sl /64.88in
1us $ = 115.80sl / 49.94in
1swiss fr = 98.99sl /42.70in
1uk pound =170.27sl / 73.43in
1 saudi riyal = 30.87sl /13.31in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *