மரணம் அறிவித்தல் - திரு. செல்லையா கபிலராஜன்
பலாலி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கபிலராஜன் நேற்று (17.04.2009) வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் செல்லையா மற்றும் காலஞ்சென்ற சிவயோகம் தம்பதியினரின் அன்பு மகனும், செல்வப்பத்மாவதி, ரகுலராஜன் (பவா), விமலராஜன் (பவி - France) ஆகியோரின் அன்புச் சகோதரனும் சின்னத்துரை, ரஞ்சினி, மஞ்சுளா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (19.04.2009) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வில்லூன்றி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:-
ஆ.செல்லையா (தந்தை),
செ.ரகுலராஜன் (பவா சகோதரன்),
இல.5, பலாலி வீதி,
யாழ்ப்பாணம்.

























