புலிகளின் தலைவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச அமெரிக்க உதவி அமைச்சர் விருப்பம்

புலிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைவது தொடர்பில் அவர்களின் தலைவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கான சாத்தியம் குறித்து அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் ரிச்சர்ட் பௌச்சர் பிரஸ்தாபித்துள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித ஹோகன்னவை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடிய போதே ரிச்சர்ட் பௌச்சர் தமது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

இலங்கையின் முல்லைத்தீவு வடக்கின் மிகச்சிறிய பகுதியில் சுமார் 500 புலிகள் உள்ளனர். அவர்களால் 30 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரையான பொதுமக்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கையின் வெளிவிவகாரச் செயலாளர் பௌச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தார்.

அதன்போது இணைத்தலைமை நாடுகள் புலிகளிடம் “மக்களை சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதை பிரதி அமைச்சர் பௌச்சர் மீளவும் சுட்டிக்காட்டி வலியுறுத்தினார் என்று இங்குள்ள இலங்கைத் தூதரகம் நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.