‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (11.04.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

ஈழத்தில் நடைபெற்றுவரும் போருக்குப் பின்னர் என்ன நடக்கும் என்பது குறித்து யாரும் பேசத் தேவையில்லை என்று விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் பா.நடேசன் கூறியுள்ளார்.

டெல்லியில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளேட்டிற்கு அவர் பேட்டியளித்துள்ளார். இலங்கை சண்டையில் பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி காயமடைந்ததாக இலங்கை ராணுவம் பொய்ப்பிரச்சாரம் செய்துவருவதாகவும், தற்போது நடைபெற்றுவரும் விடுதலைப்போரை பிரபாகரன் தலைமை தாங்கி நடத்திவருவதாகவும் நடேசன் தெரிவித்தார்.
இலங்கை சண்டையில் இந்தியாவின் உயர்மட்ட அளவிலான ராணுவ ஒத்துழைப்பு இலங்கை ராணுவத்திற்கு வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். ஒருவேளை போரில் புலிகள் தோல்வியடைந்தால், பிரபாகரனை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று ராஜபக்ஷேவிற்கு கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளதைப் பற்றி கேட்டபோது, அந்த பேச்சுக்கே இடமில்லை என்றும், புலிகளுக்கு அழிவே கிடையாது என்றும் நடேசன் உறுதிபடத் தெரிவித்தார்.
உலக நாடுகளில் நடைபெற்றுவரும் போராட்டங்களே தமிழர்களின் விடுதலை உணர்வைப் பிரதிபலிப்பதாகவும் அவர் கூறினார். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை உலக நாடுகள் அனைத்தும் ஆதரிக்கவேண்டும் என்றும் நடேசன் வலியுறுத்தினார்.
.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனனுடனான சந்திப்புக்காக விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் கருத்து முரண்பாடுகள் உருவாகியிருப்பதாகத் தெரிகின்றது . இதனால் கூட்டமைப்பு தனது முன்னைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளலாம் எனத் தெரிகின்றது .
மேனனை சந்திக்க வேண்டும் என கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்கள் சிலர் வலியுறுத்தும் அதேவேளையில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக கூட்டமைப்பின் தலைவர் இரா .சம்பந்தனைச் சந்திப்பதற்காக கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா இன்று சனிக்கிழமை அவசரமாக சென்னை விரைவதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

வடபகுதியில் தற்போது உருவாகியிருக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும், தற்போதைய அரசியல் நிலைமை பற்றியும் ஆராய்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளருடன் பேச்சு நடத்த வருமாறு தமிழ்த் தேசியக் சுட்டமைப்புக்கு இந்தியா அழைப்பு விடுத்திருந்தது.
எதிர்வரும் 15, 16 ஆம் நாட்கள் இதற்காக ஒதுக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கொழும்பில் நேற்று கூடி ஆராய்ந்த போதிலும் , அங்கு எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள மாவை சேனாதிராஜா , கூட்டமைப்பில் 22 உறுப்பினர்கள் இருக்கின்ற போதிலும் 10 பேர் மட்டுமே அதில் கலந்து கொண்டதாகத் தெரிவித்தார்.

இது தொடர்பாக இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்த மாவை சேனாதிராஜா, இந்த விவகாரம் தொடர்பாக கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தனுடன் ஆராய்வதற்காக தான் இன்று சனிக்கிழமை சென்னை செல்லவிருப்பதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக மாவை சேனாதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

“இந்திய வெளியுறவுச் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தருமாறு கூட்டமைப்பு ஏற்கனவே விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே புதுடில்லியிடம் இருந்து எமக்கு அழைப்பு வந்திருக்கின்றது.
எதிர்வரும் 15, 16 ஆம் நாட்களில் மேனனனைச் சந்திப்பதற்கு எமக்கு வாய்ப்புத் தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பு தொடர்பாக கொழும்பில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 உறுப்பினர்கள் நேற்று முன்நாள் கூடி ஆலோசனை நடத்தினர். அதனை ஒரு முழுமையான நாடாளுமன்றக் குழுக்கூட்டம் எனக் கருதிவிட முடியாது.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் புதுடில்லியின் அழைப்பு தொடர்பாக தமது கருத்துக்களை வெளியிட்டனர். எந்தவிதமான திட்டவட்டமான தீர்மானமும் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை. அவ்வாறான தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டிருக்குமானால் கூட்டமைப்பினால் அதிகாரபூர்வமான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கும்.

எமது நாடாளுமன்றக் குழுவில் உள்ள 22 பேரில் பெரும்பாலானவர்கள் தற்சமயம் வெளிநாடுகளில் உள்ளனர். அந்தக்குழுவின் தலைவர் இரா.சம்பந்தனும் தற்சமயம் சென்னையில் உள்ளார்.
நேற்று முன்நாள் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் இரா.சம்பந்தனுக்குத் தெரிவிக்கப்படும்.

இதற்காக நான் இன்று சென்னைக்குப் புறப்படவிருக்கின்றேன். அவருடனான கலநதுரையாடலை தொடர்ந்து மேனனுடனான சந்திப்பு தொடர்பாக பொருத்தமான தீர்மானம் ஒன்றை எடுப்போம் “.
இவ்வாறு மாவை சேனாதிராஜா தனது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றார
!!!!!!!!!!!!!!!!!!!
பிரித்தானியாவில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கிய இருவரில் ஒருவர் நேற்று நள்ளிரவு தொடக்கம் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை இடைநிறுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது .
அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையகத்தில் நடைபெறும் சந்திப்பில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்படுவதாக வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்தே சிவதர்சன் சிவகுமாரின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது .
எனினும் சுப்பிரமணியம் பரமேஸ்வரன் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்வார் என்று பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களின் பிரதிநிதிகளுடன் நேற்று வெள்ளிக்கிழமை இரவு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் இடத்திற்கு வருகை தந்து சந்திப்பை நடத்தியிருக்கின்றார்.
இச்சந்திப்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பிற்கு செல்ல வேண்டிய காரணத்தால் சிவதர்சன் சிவகுமாரின் உண்ணாநிலைப் போராட்டத்தை இடைநிறுத்துமாறு பிரித்தானிய அரசின் சார்பில் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.
அத்துடன் பிரித்தானிய அரசாங்கத்தால் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று இலங்கைப் பிரச்சினை குறித்து உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இக்குழுவினருடன் பிரித்தானிய தமிழ் இளையோர் இணைந்து செயற்படுமாறும் அவர் தெரிவித்திருந்தார் என்று கூறப்படுகின்றது.
இதேவேளையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் ஏற்றப்பட்டிருந்த தமிழீழ தேசியக் கொடியான புலிக்கொடியையும் இறக்குமாறு பிரித்தானிய அரசு கேட்டுக்கொண்டதையடுத்து அங்கு ஏற்றப்பட்டிருந்த புலிக்கொடியும் இறக்கப்பட்டுள்ளதுடன்ஒலிபெருக்கிகளில் முழக்கமிடுவதையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் நிறுத்தியுள்ளனர்.
அதேநேரம் பிரித்தானியாவில் இன்று பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெறவுள்ளது.
பிரித்தானியாவின் எம்பாக்மென்ட் என்ற இடத்தில் இன்று பிற்பகல் 2:00 மணிக்கு இந்த ஆர்ப்பாட்ட பேரணி தொடங்கி ஹைட் பார்க் என்ற இடத்தை சென்றடையும் என்றும் அங்கு பிரித்தானிய அரசுக்கான மனு கையளிப்பு வைபவம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது .
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொள்பவர்கள் தமிழீழ தேசியக் கொடியான புலிக்கொடியை தமது கைகளில் ஏந்தியிருப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையிலேயே நேற்று இரவு நாடாளுமன்றத்திற்கு முன்பாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஏற்றப்பட்டிருந்த புலிக்கொடிகள் இறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும
!!!!!!!!!!!!!!!!!!!!!!

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட அடுத்த சில தினங்களுக்குள் பிரித்தானிய அரசாங்கம் முனைப்புகளை மேற்கொள்ளும் என பிரித்தானிய பிரதமரின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி டேஸ் பிரவுண், பிரித்தானிய தமிழர்களுக்கு வழங்க உறுதிமொழி தொடர்பில், இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

டேஸ் பிரவுணின் இந்த உறுதிமொழியானது, இலங்கையின் உள்விவகாரத்தில் முழுமையாக தலையீடுகளை மேற்கொள்வதாகும் என இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் நேற்று(10) தெரிவித்துள்ளார் .

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுத்து நிறுத்த,ஐக்கிய நாடுகள் பொதுச் சபையை கூட்ட வேண்டும் என தமிழர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதிலளித்துள்ள பிரவுண் அது மிகவும் கடினமானது என கூறியுள்ளார். இதேவேளை போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துமாறு கனேடிய அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கையையும் இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் விவாதங்களை நடத்தி நேரத்தை விரயமாக்கத் தயாரில்லை என ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.

யுத்த நிறுத்த உடன்படிக்கையின் மூலம் நாட்டிற்கு துரோகம் இழைத்துள்ளதாக ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் விவாதமொன்றை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் பகிரங்க அழைப்பு விடுத்திருந்தார்.

எனினும் , இவ்வாறான விவாதங்களினால் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை என அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.

யுத்த நிறுத்த உடன்படிக்கை காலத்திலேயே புலிகள் தங்களை வலுப்படுத்திக் கொண்டனர் என்பது உலகறிந்த உண்மை எனவும், அதனை மேடை போட்டு விவாதம் நடத்தி மெய்ப்பிக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இலi; எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2002ம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தினால் செய்து கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையினால் நாட்டின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் ஒருமைப்பாடு ஆகியன இழக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இலங்கையின் வடக்கே, வன்னியில் பாதுகாப்பு வலயமென அழைக்கப்படும் பகுதியே உலகில் மிகவும் ஆபத்தான இடம் எனத் தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் , இப்பகுதி மீதான ஷெல் தாக்குதல்களை உடனடியாக நிறுத்து மாறு இலங்கை அரசைக் கோரியுள்ளது.இலங்கையில் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்படுவதை முடிவுக்கு கொண்டு வருவதற்காக .நா.பாதுகாப் புச்சபை உடனடி நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்றும் இலங்கைக்கு விசேட பிரதிநிதியொருவரை உடனடி யாக அனுப்பவேண்டும் என்றும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கேட்டுள்ளது. இது குறித்து கண்காணிப்பகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:விடுதலைப் புலிகளிடம் ஒரு லட்சம் பொதுமக்கள் சிக்கியுள்ள வன்னியின் பாது காப்பு வலயம் மீது கடும் ஷெல் தாக்கு தலை மேற்கொள்வதன் மூலம் உயிரி ழப்புகள் அதிகரிக்கின்றன. இதனை இலங்கை அரசு நிறுத்த வேண்டும் .
இலங்கையில் இரு தரப்புகளும் மனிதாபிமானச் சட்டங்களை மீறுவதை முடி வுக்கு கொண்டு வருவதற்காக ஐக்கிய நாடு கள் பாதுகாப்புச் சபை அவசர நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும் என் றும் அதற்காக விசேட பிரதிநிதியொருவரை இலங்கைக்கு அனுப்பவேண்டும் என்றும் சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுக்கின்றது.
இலங்கையின் பாதுகாப்பு வலயமெனச் சொல்லப்படும் பகுதியே உலகின் மிகவும் ஆபத்தானபகுதியாகும் எனத்தெரிவித்துள்ள மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குநர் பிரட் அடம்ஸ், இலங்கையில் இவ்வாறான கொடூர உயிரிழப்புகள் இடம்பெறும்போது .நா. பாதுகாப்புச்சபை தான் எப்போது செயற்பட வேண்டுமென்ற அரசியல் நடைமுறை தொடர்பாகப் மாறுபட்ட வார்த்தைகளை வெளியிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 7 ஆம் திகதியிலிந்து கடும் ஷெல் தாக்குதல்க ஏப்ரல் 7ஆம் திகதியிலிருந்து பல பகுதிகள் கடும் ஷெல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன என்றும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுளளன என்றும் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்கள் மனித உரிமைக் கண்காணிப்பகத்திடம் தெரிவித்தனர்.
மோதல் நடைபெறும் பகுதியிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பாக உடனடியாக வெளியேற்ற உதவுமாறு இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும் கண்காணிப்பகம் கேட்டுக்கொள்கிறது.
விடுதலைப் புலிகள் மண் அணையை அமைத்து குறுகிய இடைவெளிகளில் காவலரண்களை அமைத்துள்ளமையால், அங்கிருந்து வெளியேறுவது மிகவும் கடினமாகவுள்ளது என அங்கிருந்து சமீபத்தில் தப்பி வந்தவர்கள் தெரிவித்தனர்.
அங்கிருந்து வெளியேறியவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெறுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

மோதலால் பாதிக்கப்பட்டுள்ள வன்னிப்பகுதிக்குச் செல்வதற்கு இலங்கை அரசு தொடர்ந்தும் பத்திரிகையாளர்களுக்கும் சுயாதீன கண்காணிப்பாளர்களுக்கும் அனுமதி யளிக்க மறுக்கின்றது.
பாதுகாப்பு வலயத்திலிருந்து தகவல்களை வழங்கும் மருத்துவப் பணியாளர்களும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்க வேண்டாமெனப் பாதுகாப்பு அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டுள்ளனர் என மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
அரசிடம் முறையிடுவதால் பலன் கிடைக்கும் என்ற கட்டத்தைத் தாண்டிவிட்டோம். நாங்கள் பல தடவைகள் சொல்லியும் அவர்கள் பொதுமக்கள் மீது தாக்குதலை மேற்கொள்வதை நிறுத்தவில்லை. தேவையான அளவு மருந்துப் பொருள்களை அனுப்பவில்லைஎன்று அந்த மருத்துவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு நாளும் அறிக்கை வெளியிடுகிறோம். உரிய அதிகாரிகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தெரிவிக்கிறோம் . எனினும் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான அவசியமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இப்படி மனித உரிமைக் கண்காணிப்பகம் மேலும் தெரிவித்தது .

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
காங்கேசன்துறைக்கும் திருகோண மலைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று சனிக்கிழமை இடம்பெறும் என யாழ். அரச அதிபர் கே.கணேஷ் அறிவித்துள்ளார். மாவட்டச் செயலகத்தால் வழங்கப்பட்ட ஏப்ரல் மாதத்தின் 4ஆவது கப்பல் சேவைக்கு அனுமதிச் சிட்டை பெற்ற வர்களும் அவசர தேவையின் நிமித்தம் பிரயாணம் மேற்கொள்ள இருப்பவர்களும் இன்று காலை 8 மணிக்கு பிரயாண ஏற்பாடுகளுடன் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்துக்கு சமுகமளிக்குமாறு அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!
கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ள உள்ளுராட்சி சபைகளின் விசேட திருத்தச்சட்ட மூல அங்கீகாரத்தை ஆரம்பித்திலேயே சகல பிரதிநிதிகளும் ஏக மனதாக நிராகரிக்க வேண்டும்என கிழக்கு மாகாண சபையின் எதிர் கட்சித்தலைவரான பசீர் சேகுதாவுத் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று மாலை ஏறாவூரில் நடை பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் தமிழ்முஸ்லிம் உறுப்பினர்களிடம் இந்த வேண்டுகோளை அவர் முன் வைத்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்உத்தேச திருத்த சட்டம் கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரம் பெறப்பட்டு பாராளுமன்றத்திலும் நிறைவேற்றப்படுமானால் தெற்கிலுள்ள தமிழ்முஸ்லிம் மக்களின் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதித்துவங்கள் குறைந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் இதனை திட்டமிட்ட ஒரு சதி நடவடிக்கையாகவே கருத வேண்டும்.

விகிதாசார பிரதிநிதித்துவ முறை இருப்பதால் தான் தெற்கிலுள்ள உள்ளுராட்சி மன்ற சபைகளில் தமிழர்களும் ,முஸ்லிம்களும் அங்கம் பெறக்கூடிய வாயப்புகளைப் பெற்றுள்ளார்கள்.அதனை இல்லாமல் செய்வதே உத்தேச திருத்தச் சட்டத்தின் நோக்கமாகும்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணசபையில் மேற்படி திருத்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது.இதற்கு அங்கீகாரம் அளிக்கக் கூடாது.ஆரம்பததிலேயே நிராகரிக்க வேண்டும்.அப்படி வலிந்து வாக்கெடுப்பிற்கு விடப்பட்டால் தமிழ்முஸ்லிம் உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்து சட்ட மூலத்தை செயலிழக்கச் செய்ய வேண்டும் .

13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் அதிகாரப் பரவலாக்கததை முழுமையாகப் பெற்றுக் கொள்வதற்கும் அதற்காகப் போராடுவதற்கும் மாறாக மத்திய அரசாங்கத்தின் சதி முயற்சிகளுக்கு கிழக்குமாகாணசபை துணையாகி பலியாகக் கூடாது.
மாறாக இந்த திருத்தச் சட்டத்திற்கு கிழக்கு மாகாணசபை அங்கீகாரம் அளிக்குமானால் அது மத்திய அரசாங்கத்தின் அடிமையாகவே தொடர்ந்தும் இருந்து சிறுபான்மை மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு குழி தோண்ட முயலும் சதிகளுக்கு துணை போனதாகவே அமைந்து விடும் .” என்றும் குறிப்பிட்டார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஜனநாயக நாடு என்ற ரீதியில் சட்டரீதியாக நடைபெற்று வரும் எந்தவொரு போராட்டமோ அல்லது ஆர்ப்பாட்டமோ தடை செய்யப்படமாட்டாதென கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கனேடிய தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதாகவும், அதனை உடனடியாக தடுத்து நிறுத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இலங்கை கோரிக்கை விடுத்திருந்தது.

ஒட்டோவாவில் அண்மையில் இலங்கைத் தமிழர்களினால் நடத்தபபட்ட ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கைத் தூதுவர் தயா பெரேரா கோரிக்கை விடுத்திருந்தார்.

இதேவேளை, இலங்கையின் வடபகுதியில் இடம்பெற்று வரும் யுத்தத்தை தடுத்து நிறுத்தி பொதுமக்களை பாதுகாக்க ஐக்கிய நாடுகள் அமைப்பு உரிய அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டுமென கனேடிய வெளிவிவகார அமைச்சர் லாரன்ஸ் கெனொன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் அமைப்பு விசேட பிரதிநிதியொருவரை நியமிக்க வேண்டுமென கனேடிய லிபரல் கட்சியின் தலைவர் மைக்கல் இக்னடிப் குறிப்பிட்டுளளார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கொழும்பு கடற்கரை வீதி காவல்துறை நிலையத்தில் ஒட்டுக்குழு அட்டகாசம
கொழும்பு புறக்கோடை கடற்கரை வீதியில் உள்ள சிறீலங்கா காவல்துறை நிலையத்தில் சிறிலங்கா படையினருடன் மற்றும் காவல்துறையினருடன் இணைந்து இயங்கும் ஓட்டுக்குழுக்களின் செயற்பாடு மிக அதிகமாகவும் அருவருக்கத்தக்க விதத்தில் உள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
துணைப்படைக் கருணா குழுவினைச் சேர்ந்த இவர்கள் தமிழ் இளைஞர், பெண்களை இலக்கு வைத்து கைது செய்வது போல சிறீலங்கா படையினர் மற்றும் காவல்துறையினருடன் இணைந்து இயங்கி பல விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதாகவும், குறிப்பாக இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் பெற்றோர் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்தும் ஏனைய இடங்களில் இருந்தும் தற்காலிக தேவைகள் கருதி கொழும்பு வருபவர்கள் காவல்துறை நிலையத்துக்கு பதிவுகளை மேற்கொள்ளச் செல்லும்போது அவர்களின் விபரங்களை பெற்று அவர்களை கைது செய்து அல்லது கடத்தி பணம் பறிப்பதுடன் இவ்வாறான பண்பாட்டு கலாச்சார விழுமியங்களுக்கு முரணாக செயற்படுவதால் கொழும்பில் உள்ள இளைஞர் , பெண்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
இதில் முற்று முழுதாக அந்த ஆயுதக்குழு உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவத்துள்ளனர். இது பற்றி வெளியில் சொல்லவோ, அல்லது முறையிடவே அஞ்சி அவர்கள் தமக்கு நேரும் இன்னல்களை மறைத்து வருகின்றனர
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
india
!!!!!!!!!!!!
இலங்கை‌த் தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், வருகிற 14ஆ‌ம் தேதி தமிழ்நாட்டு மக்கள் கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று தே.மு.‌தி. . தலைவ‌ர் விஜயகாந்த் வே‌‌ண்டுகோ‌ள் வ‌ிடு‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை‌த் தமிழர்களுக்காக மாவட்டங்கள் தோறும் ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரத போராட்டங்களும் அறவழியில் தே.மு.தி. . நடத்தியது. அமெரிக்கா, இங்கிலாந்து, நார்வே போன்ற நாடுகளும், ஐரோப்பிய யூனியனும், .நா. சபையும் இலங்கையில் நடைபெறும் தமிழின படுகொலையை தடுக்க போர்நிறுத்தம் செய்ய வேண்டுமென்று இலங்கை அரசை கேட்டு கொண்டன. விடுதலைப்புலிகள் இயக்கமும், போர்நிறுத்தம் செய்ய முன்வந்தது. இந்தியாவும் இலங்கை அரசை போர் நிறுத்தம் செய்ய கேட்டுக்கொண்டது .

ஆனால், இலங்கை அரசு தொடர்ந்து ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்றும், லட்சக்கணக்கான தமிழர்களை இடம் பெயரச் செய்து துன்புறுத்தியும் வருகிறது. இன்னும் சில தினங்களில் மிகப்பெரிய மனித பேரழிவை, இலங்கையில் சுமார் 1 லட்சம் தமிழ் மக்களை சுட்டுகொல்வதன் மூலம் நடத்தவுள்ளது.

தமிழக அரசோ முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் பேரணி நடத்துவதும், மத்திய அரசுக்கு மனுபோடுவதும், இலங்கை இறையாண்மையில் இந்திய அரசு தலையிட முடியாது என்றும் தெரிவிக்கிறது. சோனியாகாந்தி முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி போல் செயல்பட வேண்டுமென்று கூறிவிட்டு, தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை அடையாளப்படுத்தி கொண்டார்.

இந்திய அரசோ, தாங்கள் எவ்வளவு கேட்டுக்கொண்டும் இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்ய மறுக்கிறது என்று சொல்லி கைவிரித்து விட்டனர். இலங்கையில் தனது எதிர்ப்பை காட்டும் வகையில் இந்திய அரசு விமான போக்குவரத்தை நிறுத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். வங்கதேசத்தில் செயல்பட்டதை போல இலங்கை தமிழர்களை காப்பாற்ற இந்தியா ராணுவத்தை அனுப்ப வேண்டுமென்று கோரினேன் .

இந்திய அரசும், தமிழக அரசும் செயல்படாத நிலையில் தமிழினத்திற்கு மிகப்பெரிய வரலாற்று துரோகத்தை இழைத்து வருகின்றன. ஒருபுறத்தில் ஐயோ என்று கதறும் இலங்கை தமிழ் மக்கள், மறுபுறத்தில் ரத்த கண்ணீர் மட்டுமே வடிக்கும் தமிழ்நாட்டு மக்கள் . இந்த நிலையில் இலங்கை தமிழ் மக்களை காப்பாற்ற எனக்கு தெரிந்த ஒரே வழி, நான் நம்பும் கடவுளை வேண்டுவது தான். காப்பாற்ற கூடிய நிலையில் உள்ளவர்கள் இலங்கையில் அழியும் தமிழினத்தை காப்பாற்ற தவறிவிட்டனர்.

இனி ஆண்டவன் தான் அவர்களை காப்பாற்ற வேண்டுமென்று, வாடும் இலங்கை தமிழ் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஏப்ரல் 14ஆ‌ம் தேதி காலை 10 மணி முதல் 11 மணிக்குள் தமிழ்நாட்டு மக்கள் இலங்கை தமிழர்களுக்காக கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

ஆங்காங்கே ஆலயங்களிலும், மசூதிகளிலும், மாதாகோவில்களிலும், இதர வழிபாட்டு தலங்களிலும் கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் பெருமளவில் இந்த சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டு தங்கள் ஒற்றுமையையும், உணர்வையும் உலகுக்கு எடுத்துக்காட்ட கேட்டுக்கொள்கிறேன் . “கடவுளை நம்பினோர் கைவிடப்படார்என்பது பழமொழி எ‌ன்றுவிஜயகா‌ந்‌த் கூ‌றியு‌ள்ளா‌ர் .
!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், காங்கிரசுடனான தேர்தல் உறவை தூக்கி எறிந்துவிடுவோம் என்றும் சொல்வதை விடுத்து ஏன் கெஞ்ச வேண்டும்?” என்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி‌க்கு பா... ‌நிறுவன‌ர் ராமதாஸ் கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர் .
இது தொடர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தட்டிக் கேட்பாரின்றி, தடுத்து நிறுத்துவாரின்றி சிங்கள இனவெறி அரசு தனது போர்ப்படை வலுவைக் கொண்டும், தனது நட்பு நாடுகளின் துணை கொண்டும் நடத்துகின்ற தமிழின அழிப்புப் போரை, தமிழக அரசும் அதன் முதலமைச்சரும், தங்களது வலுவைக் கொண்டு தடுத்து நிறுத்தாவிட்டால், மிகப்பெரிய அவலத்தையும், பேரழிவையும் ஈழத்தில் தமிழினம் சந்திக்கும் என்ற ஆபத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த ஆபத்தை தடுத்து நிறுத்த வேண்டும் ; இதற்கு தயக்கம் காட்டி வரும் இந்தியப் பேரரசை தட்டிக் கேட்டு அதனை செயல்பட வைக்க வேண்டும் என்பது உலகத் தமிழர்களின் கோரிக்கை. இந்தக் கோரிக்கையை முன் வைத்தால், இலங்கைப் பிரச்சனைக்காக, ஏன் ஆட்சியைத் துறக்கக் கூடாது என்று யாரோ சில பேர் கேட்பதாக முதலமைச்சர் குற்றம் சாற்றியிருக்கிறார்.

”அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் தமிழினத்தைக் காப்பாற்ற முடியாவிட்டால், இந்த ஆட்சி எதற்கு”? என்று முன்பு கேட்டவரே இவர் தான். இப்போது, யாரோ சில பேர் கேட்பதாகக் குற்றம்சாற்றி ஈழத் தமிழர் பிரச்சனையை திசை திருப்ப முயற்சித்திருக்கிறார் .எ‌ன்று ராமதாஸ் கூறியுள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
“இலங்கை‌த் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் திரட்டப்பட்ட கையெழுத்து படிவங்கள், வரு‌ம் 20ஆ‌ம் தேதி ஐ.நா.சபைக்கு அனுப்பப்படும்” என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்
இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை‌த் தமிழர்களை முற்றிலுமாக அழித்து ஒழித்திட இலங்கை அரசு உச்சக்கட்ட போரினை நடத்தி வருகிறது. உலக சட்ட விதிகளை குழிதோண்டி புதைக்கும் வகையில் தமிழர்கள் மீது நெருப்பு குண்டுகளை வீசுவதும், விஷவாயு குண்டுகளை வீசுவதும், பாதுகாப்பு வளையம் என்று அறிவித்து, அதற்குள் மக்களை வரவழைத்து அவர்கள் மீது குண்டு மழை பொழிவதும், கொடுங்கோல் இலங்கை அரசின் அன்றாட நடவடிக்கையாக மாறிவிட்டது.

தமிழகம் மட்டுமல்லாது, இங்கிலாந்து, கனடா , ஜெர்மனி போன்ற பல்வேறு நாடுகளிலும் தமிழர்கள் எழுப்பும் குரலை அறவே கண்டு கொள்ளாதது மட்டுமின்றி இலங்கை அரசு போரை நிறுத்துவதற்கு மாறாக, போரை தீவிரப்படுத்தி தமிழர்களை முற்றிலும் ஒழிக்கும் எண்ணத்தோடு செயல்படுகிறது.

இலங்கை அரசின் கொடுங்கோன்மை செயல்களை, ராஜபக்சேயின் குரூரபுத்தியை .நா.சபைக்கு கொண்டு சென்று உலக நாடுகளின் கவனத்தை இலங்கை‌த் தமிழர்களுக்கு ஆதரவாக திரட்ட தமிழக மக்களிடம் கையெழுத்து பெறுகிற இயக்கம் தொடங்கி ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. அந்த படிவங்களை வரு‌ம் 20ஆ‌ம் தேதி .நா.சபைக்கு அனுப்ப உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் .

மாவட்ட செயலர்கள், ஆங்காங்கே பல்வேறு குழுக்களாக பிரிந்து கையெழுத்து பெற்றுக்கொண்டிருக்கிற படிவங்களை உடனே தலைமைக்கு 15ஆ‌ம் தேதிக்குள் விரைந்து அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கையெழுத்து இயக்கத்திற்கு பேராதரவு தந்து ஒத்துழைப்பு தந்த தமிழக மக்களுக்கு தமிழக மக்களின் இந்த கையெழுத்து பிரதிகளும் ஈழத்தமிழரின் துயர்துடைக்க நிச்சயம் பயன்படும் என்று நம்புகிறேன் எ‌ன்று சரத்குமார் கூறியுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட அறிவிக்கப்பட்டிருந்த .தி.மு.. வேட்பாளர்கள் 2 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் .தி.மு.. 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்று முன்தினம் .தி.மு.. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டார். இந்நிலையில் திருவள்ளூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று மாற்றி அறிவித்துள்ளார்.
திருவள்ளூர்(தனி) தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ஆர். ராஜனுக்கு பதிலாக ஜி.கே. இன்பராஜும், பெரம்பலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த மருதை ராஜுக்கு பதிலாக கே.கே. பாலசுப்ரமணியனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அசாம் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார்.

அசாம் மாநிலம் சச்சார் மலைப்பிரதேசத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு , தீவிரவாதிகள் ரயில் பெட்டியை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில், ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார். பாதுகாப்புப்படையினரின் தொடர் தாக்குதலால் தீவிரவாதிகள் அனைவரும் தப்பி ஓடி விட்டனர்
!!!!!!!!!!!
சட்டீஸ்கர் மாநிலத்தில் போலீஸாரை சுற்றி வளைத்து நூற்றுக்கும் மேற்பட்ட நக்சல் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் 10 போலீஸார் பலியாகினர். 11 பேர் படுகாயமடைந்தனர்.

சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சல் தீவிரவாதிகள் அடிக்கடி திடீர் தாக்குதல் நடத்திவருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் , சிந்தாகுபா போலீஸ் நிலையம் அருகே வாக்குச்சாவடி அமைப்பதற்கான இடத்தை போலீஸார் ஆய்வு செய்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று அங்குவந்த நூற்றுக்கும் மேற்பட்ட நக்சல் தீவிரவாதிகள் போலீஸாரை சுற்றிவளைத்து அவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டனர்.
உடனே போலீஸாரும் தீவிரவாதிகளை நோக்கித் திருப்பி சுடத்தொடங்கினர். இந்த சம்பவத்தில் மத்திய ஆயுதப்படை துணை கமாண்டர் ஒருவர் உட்பட 10 போலீஸார் கொல்லப்பட்டனர். 11 போலீஸார் படுகாயமடைந்தனர். தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!
world
!!!!!!!!!!!!!!
பாகிஸ்தானின் பனர் என்ற நகரத்தை தாலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இஸ்லாமாபாத்தை வீழ்த்தும் அபாயம் நெருங்கி வருவதாகவும் இதனால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளதாகவும் தெரிகிறது.

பாகிஸ்தானில் ஆதிவாசிகள் வசிக்கும் வடமேற்கு எல்லையில் அல்கொய்தா மற்றும் தாலிபான் தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்கள் பெருமளவில் உள்ளன. இதனால், பாகிஸ்தான் மற்றும் ஆப்கனில் அடிக்கடி பயங்கரவாத செயல்கள் நடைபெற்றுவருகின்றன .
இந்நிலையில், பாகிஸ்தானிற்குள் பெருமளவில் ஊடுருவியுள்ள தாலிபான் தீவிரவாதிகள், அந்நாட்டைக் கைப்பற்றுவதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் எச்சரித்துவருகின்றன.
இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் இருந்து நூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பனர் என்ற இடத்தை தாலிபான் தீவிரவாதிகள் இன்று கைப்பற்றிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன .
இவர்களின் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த அங்குள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு படை மற்றும் ஆதிவாசிகள் எவ்வித முயற்சியும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. எனினும், பாகிஸ்தான் தலைநகரின் அருகே தீவிரவாதிகள் நெருங்கிவிட்டதால் இஸ்லாமாபாத்திற்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது
!!!!!!!!!!!!!!!!!
இத்தாலியின் லக்கிலா நகரில் கடந்த திங்களன்று இடம்பெற்ற பூகம்பத்தில் உயிரிழந்தவர்களுக்கான இறுதிக்கிரியைகள் திறந்த வெளியில் நடந்தபோது பல்லாயிரக்கணக்கானோர் அதில் கலந்துகொண்டனர்.
இருநூற்றுக்கும் அதிகமான பிரேதப் பெட்டிகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.
குழந்தைகளின் சிறிய வெள்ளை நிறப் பெட்டிகள் அவர்களது பெற்றோரது பெட்டிகளுக்கு மேலாக வைக்கப்பட்டிருந்தன.
புனித பாப்பரசரின் செய்தி ஒன்றும் அங்கு படிக்கப்பட்டது.
உறவினர்களை பறிகொடுத்த குடும்பத்தினரின் துயரத்தில் தானும் பங்குகொள்வதாக குறிப்பிட்டுள்ள அவர் , அவர்கள் விரைவில் அந்த துயரத்தில் இருந்து மீள்வதற்கான துணிவைப் பெறுவார்கள் என்று கூறியுள்ளார்.
அந்த நிகழ்வில் கலந்துகொண்ட இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கொனி அவர்கள், பூகம்பத்தில் வீடிழந்த சிலர் தங்குவதற்கு தனது சில வீடுகளை வழங்கினார் என்று செய்தியாளர் கூறினார்.
!!!!!!!!!!!!!
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடான ஜப்பானை மீட்பதற்காக , 250 பில்லியன் டாலர்கள் பெறுமதியான ஊக்கத்திட்டம் ஒன்றை ஜப்பானிய பிரதமர் டரோ அசோ அறிவித்திருக்கிறார்.
மேலும் பொருளாதாரம் மோசமடைவதயும், மக்களின் வாழ்க்கைக்கு அதனால் பாதிப்பு ஏற்படுவதையும் தடுப்பதை நோக்கமாகக் கொண்டே, ஒரு மாதகாலத்துக்குள் மூன்றாவது தடவையாக வெளியாகும் இந்த மீட்பு நிதி ஒதுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்றுமதியிலும், உற்பத்தியிலும், தொழில் வாய்ப்பிலும் ஜப்பான் பெரும் வெட்டை எதிர்கொள்கிறது .
!!!!!!!!!!!
இராக்கின் வடக்கு நகரான மொசூலில், நடந்த தற்கொலைத் தாக்குதல் ஒன்றில், அமெரிக்க சிப்பாய்கள் 5 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
கடந்த பல மாதங்களில் பெருமளவிலான அமெரிக்கப் படையினர் ஒரே நேரத்தில் கொல்லப்பட்ட சம்பவம் இதுவாகும்.
பொலிஸ் தலைமையகம் ஒன்றுக்கு வெளியே ஒரு டிரக்கில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் இராக்கிய பொலிஸ்காரர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
!!!!!!!!!!!
சீனாவில் இருக்கும் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களில் பணிபுரியும் உயர் அதிகாரிகளின் சம்பளங்களை குறைக்கும்படி சீன அரசு உத்தரவிட்டுள்ளது .
மேல்மட்ட உயரதிகாரிகளுக்கு மிக அதிகமான சம்பளம் வழங்கப்படுவதாகவும், அந்த சம்பளத்திற்கும் சராசரி பணியாளரின் சம்பளத்திற்கும் இடையிலான வருமான இடைவெளி அதிகரித்துவருவதாகவும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிதி நிறுவனங்களின் உயரதிகாரிகளின் சம்பளம் மற்றும் போனஸ் எனப்படும் ஊக்கச் சம்பளம் ஆகியவை, 2007ஆம் ஆண்டு இருந்த அளவில் 90 வீதமாக குறைக்கப்படவேண்டும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளத
!!!!!!!!!!!!!!!!!!
1 euro = 152.15sl /65.30in
1us $ = 115.80sl /49.70in
1swiss fr =100.29sl /43.05in
1uk pound = 169.70sl /72.83in
1saudi riyal = 30.92in/13.27in

Leave a Reply

Your email address will not be published.