பாகிஸ்தான் தலைநகரம் இஸ்லாமாபாத்தில் தீவிரவாதிகள் புகுந்ததாக பரபரப்பு: பள்ளிகள், அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது

பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் அடிக்கடி வெடிகுண்டு தாக்குதல் நடத்தி ஏராளமானோரை கொன்று குவித்து வருகின்றனர்.

இதனால் எந்த நேரத்தில் எங்கு தாக்குதல் நடக்குமோ? என்ற பீதி பாகிஸ்தானில் நிலவுகிறது.

இந்த நிலையில் இன்று தலைநகரம் இஸ்லாமாபாத்துக்குள் தீவிரவாதிகள் நுழைந்து விட்டதாகவும் அவர்கள் தாக்குதல் நடத்த போவதாகவும் தகவல்கள் பரவின.

இதனால் நகரம் முழுவதும் பாதுகாப்பு படை உஷார்படுத்தப்பட்டது. அனைத்து இடங்களிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள். பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தீவிரவாதிகள் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனவே இன்று அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது. வழக்கமான பணிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

தலிபான் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் கராச்சி உள்பட வேறு சில நகரங்களிலும் தாக்குதல் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Source & Thanks : maalaimalar

Leave a Reply

Your email address will not be published.