உலகை உலுக்கப் போகும் மகிந்தவின் அடுத்த கட்ட பிளான் அம்பலம்

அவசரமாக விடுதலைப்புலிகளின் வேவுப்பிரிவினர் இத்தகவலை அறிவித்திருக்கின்றார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அலம்பில் கடற்கரையோர பிரதேசத்தில் ஏழு(07) குழிதோண்டும் (வைக்கோ இயந்திரம் நின்று பாரிய குழிகள் தோண்டப்படுகின்றது. அக்குழிகளில் பாதுகாப்பு வலயத்தில் இருக்கின்ற அப்பாவி மக்கள் மீது இந்தியா கொடுத்த நச்சுவாயுவை வீசி கொண்றுவிட்டு இக்குழிகளில் போடும் திட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற�


இந்தத் திட்டங்களை நடை முறைப்படுத்தும் இந்தியப் படை அதிகாரிகளாக கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த இந்தியாவின் முன்னணிப் படைக் கட்டளைத் தளபதியான ‘லால்பகதூர்’ என்பவரும் மற்றைய திட்டமிடல் வன்னிப் போர் முனைக் கட்டளைத் தளபதியாகப் பின் தளத்தில் உள்ள சுதர்சன் சோப்ரா என்பவரும், அவினாஷ் சந்திரா என்பவரும் உள்ளதாக அவர்களின் வன்னிப் போர் முனையில் உள்ள இராணுவ வீரர்களின் தொடர்பாடல் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் அனுசரணையுடன் இடம்பெறும் இப் பணியில் ஈடுபடுவதற்கென தென்பகுதியில் இருந்து ஊர்காவற்படையினருரும், இந்தியாவின் சிறப்புப் பாதுகாப்பு வீரர்களும் அலம்பில் பிரதேசத்தில் வந்து நிலை கொண்டுள்ளனர். அவர்களிற்கு ஒவ்வொரு நாளும் காலை, மாலை முகமூடி(மாஸ்க்) அணிவிக்கப்பட்டு கடற்கரையில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.
இரவு வேளை வேவுப்பணியில் போராளிகள் ஈடுபட்டிருந்த போது அங்கு நின்ற ஊர்காவற்படையினரின் ரகசிய தொலைபேசி உரையாடல்களில் இருந்து இத்தகவல் மேலும் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.

இவ் கொடூரத்தை அரங்கேற்றுவதற்காகவே வன்னியில் சுமார் அறுபதினாயிரம் மக்கள் மட்டும் உள்ளனர் என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. உண்மையில் முல்லைத்தீவு அரச அதிபரின் கணக்குப்படி வன்னியில் உள்ள மக்கள்; தொகை இரண்டு லட்சத்திற்கும் மேல் என்று உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றார்.
எனவே உடனடியாக சர்வதேசசமூகமும், புலம்பெயர் தமிழர்களும், குறிப்பாக தழிழக தலைவர்கள் இவ்விடயத்தில் ஒற்றுமையாக தலையிட்டு இங்கு நடக்கப்போகின்ற பாரிய மனித அவலத்தை தடுத்து நிறுத்துங்கள். இல்லையேல் ஒரு வரலாற்றுத் தமிழினம் பூண்டோடு அழிந்து விடும். இந்த நாகரிகமான புதிய நூற்றாண்டில் இப்படியொரு அவலம் தமிழனுக்கும், மனிதகுலத்திற்கும்.
தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் எதிரிக்கு சந்தர்ப்பமாகவும், தழிழனுக்கு மரண இடியாகவும் அமையப்போகின்றது. யாராவது வாருங்களேன்?? எங்களையும் கொஞ்சம் திரும்பிப் பாருங்களேன்!

பிற் குறிப்பு: இலங்கைப் பிரதம் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா அவர்கள் ‘குயில் கூவும் வேளையில் சுதந்திரமடையும் செய்தி விரைவில் கிடைக்கும் என்றும், சோனியா காந்தி அவர்கள் ஏப்ரல் 14இற்குள் புலிகளை அழிக்கும் படி உத்தரவிட்டதாகவும் ஏற்கனவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவை முற்று முழுதாக உறுதிப்படுத்தப்பட்ட நம்பகத்தன்மை வாய்ந்தவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட செய்திகள்.

ஏப்ரல் 14இற்கு இன்னும் இருப்பது நான்கு நாட்கள் மட்டுமே என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது. இச் செய்தியினை அனைத்து ஆங்கில, தமிழ் ஊடகங்களிலும் பிரசுரிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.!

Source & Thanks : yarl.com

Leave a Reply

Your email address will not be published.