காஸ் டேங்கர் லாரி கவிழ்ந்ததால் பரபரப்பு

திருவெண்ணெய்நல்லூர்: விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காஸ் ஏற்றிய டேங்கர் லாரி கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடியிலிருந்து கும்மிடிப்பூண்டி காஸ் ஆலைக்கு டேங்கர் லாரி நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது.

லாரி நேற்று அதிகாலை 4 மணிக்கு திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சித்தானங்கூர் அருகில் சென்ற போது சாலையோரம் இருந்த சிறுபாலத்தில் கவிழ்ந்து லாரியின் முன்பக்க அச்சு முறிந்தது. காஸ் லாரி கவிழ்ந்ததால் வெடித்து விடுமோ என்ற அச்சத்தில் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை டேங்கர் மீது பீச்சி அடித்தனர். அதிர்ஷ்டவசமாக காஸ் கசிவு ஏற்படவில்லை.கவிழ்ந்த காஸ் லாரியை நேற்று மாலை வரை அப்புறப்படுத்தவில்லை. அதிகாரிகளின் ஒப்புதல் மற்றும் தூத்துக்குடியிலிருந்து மாற்று டேங்கர் வந்த பிறகு அதில் காஸ் மாற்றப்படும் என தெரிகிறது. காஸ் வெடித்து சிதறியிருந்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என தீயணைப்பு அலுவலர் தெரிவித்தார். இச்சம்பவத்தால் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.