குடும்பதகராறில் மனைவி, குழந்தைகொலை

தேனி: குடும்ப தகராறில் மனைவி, குழந்தை மீது மண்ணென்ணை ஊற்றி தீ வைத்து கொலை செய்த ஜவுளி வியாபாரி, தானும் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

தேனி அருகே பொம்மையகவுண்டன்பட்டி பாலன்நகர் பகுதியை சேர்ந்த முத்தையா செட்டியார் மகன் செந்தில்குமார்(30). ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கும் போடியை சேர்ந்த அழகுசுரேதா(25) என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கீர்த்திக தர்ஷிணி என்ற ஒரு வயது குழந்தை உள்ளது. கூட்டு குடும்பமாக வசித்து வந்த செந்தில்குமார் மூன்று நாட்களுக்கு முன் வாடகை வீட்டில் தனி குடித்தனம் வந்தார்.

வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மனைவியின் நகைகளை வாங்கி அடமானம் வைத்திருந்தார். கணவர் வீண் செலவு செய்வதை கண்டித்தும், திருவிழாவிற்கு செல்ல நகையை திருப்பித்தருமாறு கூறியும் அழகுசுரேகா செந்தில்குமாருடன் தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு இப்பிரச்னை பெரிதானதால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் தனது மனைவி, குழந்தை மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து கொலை செய்தார். தனது உடலிலும் மண்ணைண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கதவை உடைத்து தீயை அணைத்தனர். தேனி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு உடல் கருகிய நிலையில் மூவரும் கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பலனின்றி அழகுசுரேகா, கீர்த்திக தர்ஷிணி பலியாகினர். நேற்று காலை 8 மணிக்கு செந்தில்குமார் பலியானார். அல்லிநகரம் போலீசார், பெரியகுளம் ஆர்.டி.ஓ., சுப்பிரமணியம் விசாரிக்கின்றனர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.