ஜனநாயக நாடு என்ற ரீதியில் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் தடுக்க முடியாது: கனடா

ஜனநாயக நாடு என்ற ரீதியில் சட்டரீதியாக நடைபெற்று வரும் எந்தவொரு போராட்டமோ அல்லது ஆர்ப்பாட்டமோ தடை செய்யப்படமாட்டாதென கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கனேடிய தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதாகவும், அதனை உடனடியாக தடுத்து நிறுத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இலங்கை கோரிக்கை விடுத்திருந்தது.

ஒட்டோவாவில் அண்மையில் இலங்கைத் தமிழர்களினால் நடத்தபபட்ட ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கைத் தூதுவர் தயா பெரேரா கோரிக்கை விடுத்திருந்தார்.

இதேவேளை, இலங்கையின் வடபகுதியில் இடம்பெற்று வரும் யுத்தத்தை தடுத்து நிறுத்தி பொதுமக்களை பாதுகாக்க ஐக்கிய நாடுகள் அமைப்பு உரிய அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டுமென கனேடிய வெளிவிவகார அமைச்சர் லாரன்ஸ் கெனொன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் அமைப்பு விசேட பிரதிநிதியொருவரை நியமிக்க வேண்டுமென கனேடிய லிபரல் கட்சியின் தலைவர் மைக்கல் இக்னடிப் குறிப்பிட்டுளளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.