இந்திரா காந்தியை வழியைப் பின்பற்றி சோனியா காந்தி செயற்பட வேண்டும்: கருணாநிதி

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் அணுகுமுறைகளை சோனியா காந்தியும் பின்பற்ற வேண்டுமென தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.


இலங்கையில் இடம்பெற்று வரும் யுத்தத்தை நிறுத்தி இனச் சுத்திகரிப்பை தடுத்து நிறுத்த சோனியா காந்தி விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திரா காந்தி இலங்கைத் தமிழர்களுக்கு அளித்த உதவிகளைப் போன்று சோனியா காந்தியும் உதவிகளை வழங்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

அன்னை சோனியா காந்தி எங்கள் தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னையில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடைபெறுவதற்கு முன்னர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நல்லதொரு பாடம் புகட்ட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பேரணியின் போது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.