டென்மார்க்கில் தொடரும் கவனயீர்ப்பு: ஆறு பேர் உண்ணாவிரதப் போராட்டம்

டென்மார்க்கின் தலைநகரான கொப்பன்கேக்கனில் வெளிவிவகாரஅமைச்சின் சதுர்க்கத்தில் 7 ஆம் திகதி திங்கள் அன்று மு.ப. 11 மணியளவில் நம் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வு மூன்றாவது நாளான இன்றும் தொடரப்பட்டபோதிலும்….

எதிர்பார்த்த பதில்கள் ஏதும் வெளிவிவகாரஅமைச்சரிடமிருந்து கிடைக்காததினாலும் காவல்துறையினரால் இதற்காக ஒதுக்கப்பட்ட நேரம் முடிவடைகின்ற தருணத்தில் இப்போராட்டம் வேறு முனைப்புப் பெற்றுள்ளது.

அதாவது திசைகள் இளைஞர்கள் எமது தேசத்தில் எம்மவர் மீதான இனப்பிச்சனைகள் ஒரு முடிவிற்கு வரும்வரை இன்றுமுதல் இதே இடத்தில் உண்ணாவிரத போராட்டமொன்றை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிக்கையொன்றை விட்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் திசைகளிலிருந்து ஐந்து இளைஞர்களும் ஒரு முதிய பெண்மணியும் கலந்துகொண்டுள்ளனர்.

இதில் எழுச்சிஉணர்வு பொங்க பங்கெடுத்த எமது உறவுகள் இளைஞர்களால் அறிவிக்கப்பட்ட இந்த முடிவுகள் குறித்து கவலை அடைந்தாலும் தம்மால் இயன்ற ஒத்துழைப்புக்களை வழங்குவதாக வாக்குறுதிகள் கொடுத்துள்ளனர்.

அத்துடன் எமக்கு மிக விரைவில் தமிழீழம் கிடைக்குமென்ற நம்பிக்கையோடு உண்ணாவிரதம் ஆரம்பமாகியது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.