பொதுமக்கள் மீதான எறிகணை தாக்குதல்கள் நிறுத்த வேண்டும்-மனித உரிமை கண்காணிப்பகம்

வீரகேசரி இணையம் 4/10/2009 11:51:21 AM – பொதுமக்கள் மீதான எறிகணைத் தாக்குதல்களை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் சுமார் 100,000 பொதுமக்கள் சிக்கியிருப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை நிலவரம் குறித்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை விரைந்து செயற்பட வேண்டுமெனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்படும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கில் விசேட பிரதிநிதியொருவரை ஐக்கிய நாடுகள் அமைப்பு அனுப்பி வைக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயம் உலகின் மிக ஆபத்தான பிரதேசங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளதென மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெறும் உயிரிழப்புக்களை தடுத்து நிறுத்த ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் இன்றியமையாததென அவர் குறிப்பிட்டுள்ளார்.யுத்த குற்றச் செயல்களை புரிவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் தார்மீகப் பொறுப்பு அரசாங்கத்திற்கு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். E-mail to a friend

Source & thanks : .virakesari.lk

Leave a Reply

Your email address will not be published.