மாணவர்கள் வேடத்தில் லண்டனில் ஊடுருவிய 10 தீவிரவாதிகள் கைது: மிகப் பெரிய தாக்குதல் முறியடிப்பு

உலக நாடுகளுக்கு சவாலாக விளங்கும் அல்கொய்தா தீவிரவாதிகள் அவ்வப்போது மறைமுக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்க இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் லண்டனில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த அல்கொய்தா தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி இருப்பதாகவும், அவர்கள் மாணவர்கள் வேடத்தில் லண்டனுக்குள் ஊடுருவி இருப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பல்கலைக்கழக நூலகத்துக்கு வெளியே ஒரு தீவிரவாதியை போலீசார் பிடித்த காட்சி.

இந்நிலையில் லண்டனில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த அல்கொய்தா தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி இருப்பதாகவும், அவர்கள் மாணவர்கள் வேடத்தில் லண்டனுக்குள் ஊடுருவி இருப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து லண்டன் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மான்செஸ்டர், லிவர்பூல், லிங்காஸ்யர் ஆகிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் பிடிபட்டனர். இவர்களில் 2 பேர் லிவர்பூலில் உள்ள ஜான் மூரஸ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆவர். மாணவர்கள் இருவரும் நூலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

அப்போது நூலகத்துக்கு வெளியே வெடிகுண்டு போன்று மர்ம பார்சல் ஒன்று கிடந்தது. அதனை போலீசார் பத்திரமாக மீட்டனர். இவர்கள் மான்செஸ்டர் கால்பந்து மைதானம், இரவு விடுதி, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட இடங்களில் மிகபெரிய தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேரும் படித்துக்கொண்டே தீவிரவாதிகளுக்கு உளவு வேலை பார்த்து உள்ளனர். அவர்கள் மூலம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மாணவர்கள் விசாவில் இங்கு ஊடுருவி உள்ளனர்.

போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். லண்டனில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Source & Thanks : maalaimalar

Leave a Reply

Your email address will not be published.