தவறுதலாக ரகசியம் கசியவிட்ட பிரிட்டிஷ் அதிகாரி இராஜினாமா

பிரிட்டனின் மிக மூத்த பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு காவல்துறை அதிகாரியான பாப் குவிக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மிக ரகசியமாக வைக்கப்பட வேண்டிய ஆவணம் ஒன்றை வெளியிலே தெரிவது மாதிரி அவர் தவறுதலாக கையிலெடுத்து சென்றமை புகைப்படம் எடுக்கப்பட்டதையடுத்து அவர் பதவி விலகினார்.

நேற்று புதன்கிழமை லண்டனிலுள்ள பிரிட்டிஷ் பிரதமரின் அலுவலகத்திற்குள் நுழைந்தபோது அவர் செய்த இந்த பிழையின் விளைவாக, வடமேற்கு இங்கிலாந்தில் பயங்கரவாத சந்தேக நபர்களை பொலிஸார் கண்காணித்துவந்த நடவடிக்கையை அவர்கள் கைவிடவும், திட்டமிட்டிருந்த நேரத்திற்கு முன்பாக அவர்கள் அதிரடி சோதனைகளை மேற்கொள்ளவும் நேர்ந்தது.

இந்த நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ள 12 பேரில் 11 பேர் பாகிஸ்தான் பிரஜைகள் என்று பொலிஸார் கூறுகின்றனர்.

இறுதிக்கட்ட ஏற்பாடுகளில் இருந்த ஒரு பெரிய பயங்கரவாதச் சதித் திட்டத்தினை தாங்கள் ரகசியமாகக் கண்காணித்து வந்ததாகவும் இந்தச் சதியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் அல்கைதாவினருக்கும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது என்றும் பொலிசார் கூறுகின்றனர்.

Source & Thanks : .bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.