திருகோணமலையை அண்மித்த கடல் பகுதியில் விபத்திற்குள்ளான துருக்கி கப்பல் மூழ்கியது

வீரகேசரி இணையம் 4/10/2009 9:01:03 AM – திருகோணமலையை அண்மித்த கடல் பகுதியில் விபத்திற்குள்ளான துருக்கி கப்பல் நடுக்கடலுக்கு இழுத்துச் செல்லும் போது கடலில் மூழ்கி விட்டதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.

துருக்கி நாட்டிலுள்ள துட்டிக்கோரின் துறைமுகத்திலிருந்து 6250 மெற்றிக் தொன் சல்பூயுரிக் அமிலத்தை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்த வேளை கடந்த 2 ஆம் திகதி இந்தியாவிலுள்ள தூத்துக்குடி துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருந்த “எம்.டி.கிறான்ட்பா” என்ற இந்த சரக்குக் கப்பல் கடந்த திங்கட்கிழமை திருகோணமலை துறைமுகத்தை அண்டிய கடல் பகுதியில் விபத்திற்குள்ளானது.

விபத்துக்குள்ளான கப்பலை அவதானித்த இலங்கை கடற்படையினரால் 19 கப்பல் பணியாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று இலங்கையிலுள்ள துருக்கி தூதராலய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டனர். இக் கப்பலில் ” சல்பூயுரிக் அமிலம்” களஞ்சியப் படுத்தப்படடிருந்தமையினால் கடல் வள பாதிப்பை கருத்திற் கொண்டு சமுத்திரத்தின் நடுப் பகுதிக்கு மீட்புக் குழுவினரால் கப்பல் இழுத்துச் செல்லப்பட்ட போது 3000 மீற்றர் ஆழ் கடல் பகுதியில் மூழ்கி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Source & Thanks : yarl.com

Leave a Reply

Your email address will not be published.