ஐகோர்ட் வக்கீல்கள் மீண்டும் புறக்கணிப்பு

சென்னை : ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்தக் கோரி, கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தில் வக்கீல்கள் ஈடுபட்டனர்.கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி ஐகோர்ட் வளாகத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் இருவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என நீதிபதிகள் முகோபாதயா, தனபாலன், சந்துரு அடங்கிய “பெஞ்ச்’ உத்தரவிட்டிருந்தது.


இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இரு அதிகாரிகளும் மனுக்கள் தாக்கல் செய்தனர். ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதிக்கவில்லை.ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரசைக் கண்டித்தும், உத்தரவை அமல்படுத்தக் கோரியும் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக வக்கீல்களின் கூட்டு நடவடிக்கைக் குழு முடிவெடுத்தது. அதன்படி, நேற்று கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் வக்கீல்கள் ஈடுபட்டனர். பெரும்பாலான வக்கீல்கள் கோர்ட்டுக்குச் செல்லவில்லை.அரசு வக்கீல்கள் மற்றும் சில வக்கீல்கள் கோர்ட் நடவடிக்கைகளில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஐகோர்ட் வக்கீல்கள் சங்கத் தலைவர் பால்கனகராஜ், செயலர்கள் மோகனகிருஷ்ணன், வேல்முருகன், தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர். கேன்டீன் அருகில் சில வக்கீல்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Source & Thanks : dinamalare

Leave a Reply

Your email address will not be published.