மட்டக்களப்பில் சிறிலங்கா படையினரின் காவலரண் மீது தாக்குதல்: 2 பேர் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிலங்கா படையினரின் காவலரண் மீது இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இரு படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏனையோர் காயங்களுடன் தப்பியோடியுள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட கட்டளைப் பணியகம் தெரிவித்துள்ளதாவது:

குடும்பிமலைக்கும் பள்ளத்துச்சேனைக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் பகல் நேர பாதுகாப்பு காவலரண் மீது இன்று வியாழக்கிழமை பிற்பகல் 5:45 நிமிடமளவில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்த காவலரண் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது ஐந்து படையினர் காவல் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இதில் இரு படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏனையோர் காயங்களுடன் தப்பியோடியுள்ளனர். படையினரிடம் இருந்து விடுதலைப் புலிகளால் ரி-56 ரக துப்பாக்கியும் அதற்குரிய ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.