வன்னியில் சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதல்: நேற்றும் நேற்று முன்நாளும் 189 தமிழர்கள் படுகொலை; 357 பேர் படுகாயம்

வன்னியில் சிறிலங்கா படையினர் நேற்றும் நேற்று முன்நாளும் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 189 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 357 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் நேற்று முன்நாள் மட்டும் குழந்தை உட்பட 13 சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

‘மக்கள் பாதுகாப்பு வலய’ பகுதிகளான அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் மாத்தளன் ஆகிய பகுதிகள் மீது நேற்று புதன்கிழமை காலை தொடக்கம் பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார், பீரங்கி, ஆர்பிஜி உந்துகணை மற்றும் தொலைதூர துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை அகோரமாக நடத்தியிருக்கின்றனர்.

இதேவேளையில் தொடக்க சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கான பால்மா பெறுவதற்காக வரிசையில் காத்து நின்ற மக்கள் மீது நேற்று காலை 7:00 மணியளவில் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இத்தாக்குதலில் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் உட்பட பெருமளவிலானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா படையினரின் நேற்றைய தாக்குதல்களில் மட்டும் 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 296 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டோரில் 47 பேர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர்.

நேற்றைய தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டோரின் பெயர், விபரங்கள் எதுவும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை.

அதேவேளையில் ‘மக்கள் பாதுகாப்பு வலய’ பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், இடைக்காடு மற்றும் முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகள் மீது நேற்று முன்நாள் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை அகோரமாக நடத்தினர்.

இதில் ஒன்றரை வயது குழந்தையும் 13 சிறுவர்களும் உட்பட 39 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதலில் கொல்லப்பட்டோரில் அடையாளம் காணப்பட்டவர்களின் பெயர் விபரம் வருமாறு:

கற்பகநாதன் கஜீபன் (வயது ஒன்றரை)

சர்வேஸ்வரன் மதுசக் (வயது 05)

வினோதன் தமிழ்ச்செல்வி (வயது 07)

ஜெகன் தனுசன் (வயது 07)

கற்பகநாதன் சுலக்சனா (வயது 08)

சிவகுமார் டினோசியன் (வயது 08)

சந்திரசேகரன் டினோசிகா (வயது 09)

கற்பகநாதன் குயிந்தினி (வயது 10)

சிவானந்தமூர்த்தி கதிரவன் (வயது 11)

கீதாரட்ணம் மதுசன் (வயது 11)

மருதலிங்கம் காவியா (வயது 12)

தேவதாசன் மதுமிதா (வயது 13)

தசரதகுமார் விபூசன் (வயது 13)

கனகரட்ணம் கிருசிகா (வயது 14)

சிவகுருநாதன் புனிதலட்சுமி (வயது 57)

கருணானந்தமூர்த்தி கோபி (வயது 25)

துரைராசன் தயாநிதி (வயது 25)

யோசெப் மார்த்தம்மா (வயது 76)

பாலகுமார் (வயது 46)

சிவசாமி சரவணமுத்து (வயது 53)

தம்பிமுத்து பத்மநாதன் (வயது 48)

பத்மநாதன் தேவமலர் (வயது 22)

பாலசிங்கம் கமலேஸ்வரி (வயது 32)

மருதமலை மாங்கனி (வயது 19

கதிரமலை மணிவாசகம் (வயது 29)

மாணிக்கம் கந்தன் (வயது 30)

சிறீஸ்கந்தராசா கதிராமுத்தம்பி (வயது 48)

கிருபாகரன் சரோஜினிதேவி (வயது 54)

தருமராசா சிவானந்தமூர்த்தி (வயது 28)

மனேகாரன் சங்கர்

ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஏனையோரின் பெயர், விபரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.