எல்லாம் தேர்தல் மயம்

திங்களன்று சந்தைகளின் துவக்கமே அபாரமாக இருந்தது. சந்தை 186 புள்ளிகள் அதிகமாகி முடிந்தது. ஏறியதற்கு காரணம், ஜி-20 மாநாட்டின் தொடர்ச்சியாக விளையப்போகும் நன்மைகளும், ஷார்ட் கவரிங்கும் இருந்ததாலும் சந்தை மேலே சென்றது.

வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வாங்கியதும் சந்தை மேலே சென்றதற்கு ஒரு காரணம்.நேற்று துவக்கமே சந்தையில் பெரிய சரிவில் தான் துவங்கியது. 362 புள்ளிகள் கீழே சென்று 10,171 புள்ளிகள் வரை சென்றது. ஆனால், பீனிக்ஸ் பறவை போல சந்தை உயிர்த்தெழுந்து 362 புள்ளிகள் நஷ்டத்தையும் சரி செய்து பின்னர் 207 புள்ளிகள் மேலேயும் சென்றது. நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும்.இறுதியாக 207 புள்ளிகள் கூடி 10,741 புள்ளிகளைத் தொட்டிருக்கிறது. இது, 30 சதவீதத்திற்கும் மேலே சென்றிருக்கிறது. கடந்த ஐந்து மாதங்களில் இது தான் அதிகபட்ச உயர்வு. எல்லாம் தேர்தல் மயம்.ஏற்றுமதி புள்ளி விவரங்கள் ஏமாற்றம் தருவதாக உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் மட்டும் அமெரிக்க டாலர் மதிப்பில் 17.25 பில்லியன் அளவு ஏற்றுமதி செய்திருந்தோம். ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதம் அது 12 பில்லியன் டாலர் அளவிற்கு குறைந்துள்ளது. இது, 30 சதவீதம் குறைவு.

– சேதுராமன் சாத்தப்பன் –

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.