துமாத்தளன் பகுதியிலிருந்து மேலும் பலர் வெளியே கொண்டுவரப்பட்டுள்ளனர்

இலங்கையின் வடக்கே இடம்பெறும் போர்ச் சூழலின் விளைவாக முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியிலிருந்து கிறீன் ஓசன் கப்பல் மூலம் அனைத்துலக செஞ்சிலுவைக் குழவின் அனுசரணையுடன் 536 பேர் புதன்கிழமை புல்மோட்டைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கொண்ட வரப்பட்டோரில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். காயங்களுக்கு இலக்கானோர் நோயாளர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் உதவியாளாகள் போன்றோரும் இந்தக் கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே இந்தியாவின் தூத்துக்குடி கடற்பிரதேசத்திலிருந்து காக்கிநாடாவுக்கு சென்று கொண்டிருந்த வேளை இயந்திரக் கோளாறு காரணமான விபத்துள்ளாகி திருகோணமலை துறைமுக கடற்பிரதேசத்தை அடுத்த ஆழ்கடல் பகுதியில் மிதந்துகொணண்டிருந்த எம்வீ கிரேண்பா என்ற துருக்கி தேச கப்பலின் மாலுமிகள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட நிலையில் இந்தக்கப்பலிலிருந்த கந்தக அமிலம் கசிவடைந்து கடற்பிரதேசத்தில் ஓழுகி சூழல் மாசடையும் நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர் இந்தக் கப்பலை ஆழ்கடல் பகுதிக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாகவும் இது தொடர்பில் துருக்கு அரசுடன் இலங்கை அரசு தொடர்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.