அரசியல் தீர்வு நோக்கி தமது செயற்பாடுகளை முன்னகர்த்துக: இலங்கை அரசுக்கு அமெரிக்கா வலியுறுத்து.

அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுதல் மற்றும் பாதிக்கப்படுவதற்கு காரணமான இனப்பிரச்சினைக்கு, இலங்கை அரசாங்கம் தமது அரசியல் செயற்பாடுகளை அரசியல் ரீதியான தீர்வினை நோக்கி முன்னகர்த்த வேண்டும் என ஐக்கிய அமெரிக்கா நேற்று வலியுறுத்தியுள்ளது.

தெற்காசிய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் உதவி செயலர் ரிச்சட் பவுச்சருக்கும், அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தின் புலம்பெயர்ந்த தமிழ் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் பின்னர், ரிச்சட் பவுச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த சந்திப்பின் போது, இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவர் ரொபேர்டோ பிளக்குக்கும் தொலை ஒளி தொடர்பு மூலம் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது, இலங்கை பொது மக்களினம், புலம்பெயர்ந்தவர்களினதும் கோரிக்கைகளுக்கு அமைய இலங்கை அரசாங்கத்தினால், அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் தங்கியுள்ள, மோதல் தவிர்ப்பு பிரதேசத்தில், இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் தாக்குதல்களை மேற்கொள்ளாதிருக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.