பிரான்ஸ் போராட்டம் புதிய இடத்தில் தொடர்கிறது

பிரான்சில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர்கின்றது. இன்று இன்வலிட் பகுதியில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்ட அசம்பிளே நஷ்னல் பகுதியில் மதியம் முதல் மாலை நான்கு மணிவரை இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து போராட்டம் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கிருந்து 5000 வரையான மக்களுடன் போராட்டம் ரொக்கடரோ பகுதிக்கு நகர்ந்துள்ளது.

இன்று தொடக்கம் பிரான்சின் முக்கிய பகுதிகளில் ஒன்றான உலக அதிசயம் அமைந்துள்ள ஈபிள் கோபுரத்திற்கு அருகிலுள்ள மனித உரிமைகள் சதுக்கத்தில் (ரொக்கடரோ) தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது.

போராட்டத்தில் கலந்துகொள்ளும் மக்கள் அனைவரையும் அப்பகுதிக்கு வந்து இணையுமாறு ஏற்பாட்டாளர்கள் கோருகின்றார்கள்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.