பிரபாகரன் மீது சிறு துரும்பு விழுந்தாலும் தமிழகத்தில் இரத்த ஆறு ஓடும்: வைகோ

இலங்கை தமிழர்களுக்கு எதிராக போரை உடனடியாக நிறுத்த இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,

இலங்கையில் பெரிய அபாயம் ஈழத்தமிழர்களை எதிர்நோக்கி சூழ்ந்துள்ளது. அவர்கள் பேரழிவை எதிர்நோக்கி உள்ளனர். இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தி பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த 6 மாதங்களில் ஈழ மக்கள் துயரத்தை பற்றி சோனியா காந்தி ஒரு இடத்திலாவது பேசியிருப்பாரா? இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதாக சோனியா காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சோனியா கருணாநிதிக்கு ஏன் கடிதம் எழுத வேண்டும். போரை நிறுத்த சொல்வதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளாரா? அல்லது போரை நிறுத்தும்படி அவரிடம் பேசியுள்ளாரா?

விடுதலைப்புலிகளை பொதுமக்களை கொல்கிறார்கள் என்று அவர்கள் பேசியதற்கு கண்டனம் தெரிவித்த எங்களை கைது செய்தார்கள். அதற்காக கொளத்தூர் மணி, இயக்குனர் சீமான், நாஞ்சில் சம்பத் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.

பிரணாப் முகர்ஜி தான் தேச துரோகி, தமிழின துரோகி. பிரபாகரன் உடம்பில் சிறு துரும்பு விழுந்தாலும் தமிழகத்தில் இரத்த ஆறு ஓடும்.

இலங்கையில் நடைபெறும் போரை இந்தியா நடத்துகிறது. அதனை பிரான்ஸ் பத்திரிகைகள் உறுதிப்படுத்துகிறது. ஈழத்தமிழர்களை பாதுகாக்க தாய் தமிழன் ஆயுதம் ஏந்தி போராட ஈழம் செல்வான். அதில் முதல் ஆளாக நான் இருப்பேன்.

இந்திய அரசு உடனடியாக போரை நிறுத்த சொல்ல வேண்டும். இல்லையெனில் இந்திய என்ற ஒரு தேசம் இனி இருக்க போவதில்லை என்று மீண்டும் கூறிக்கொள்கிறேன் என்று பேசினார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.