நானோ: மூன்று நாளில் 51,000 விண்ணப்பங்கள்!

டெல்லி: மூன்றே நாளில் நானோ காருக்கான 51 ஆயிரம் விண்ணப்பங்களை விற்றுள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.

ஏப்ரல் 4ம் தேதி 218 மையங்களில் இந்த விண்ணப்பங்கள் விற்பனையாகத் தொடங்கின. நேற்று வரை மொத்தம் 51 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்றுள்ளன. இவை அனைத்தும் டாடா மோட்டார்ஸ் மையங்களில் மட்டுமே விற்கப்பட்டன. டைட்டன், குரோம மற்றும் வெஸ்ட்ஸைட் விற்பனை மையங்களில் இன்னும் விண்ணப்பங்கள் வழங்க ஆரம்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை அனைத்து மையங்களிலும் விண்ணப்பங்கள் தரப்படும்பொழுது, அதிக எண்ணிக்கையில் மக்கள் வருவார்கள் என்கிறார் டாடா மோட்டார்ஸ் செய்தி தொடர்பாளர்.

நாளை முதல் வருகிற ஏப்ரல் 25ம் தேதி வரை புக்கிங் துவங்குகிறது.

நானோ புக் செய்ய முன் பதிவு விண்ணப்பத்தின் விலை ரூ. 3,00. வாகனத்துக்கான முன்பதிவுக் கட்டணம் ரூ.95,000.

முதல் ஆண்டு 1 லட்சம் கார்கள் வழங்கப்படுமாம்.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.