23 அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: எஸ்எஸ்.சந்திரன், கண்ணப்பன், தம்பித்துரைக்கு சீட்

சென்னை: அதிமுக போட்டியிடும் 23 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அதிமுக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் விவரம்..

1. திருவள்ளூர் (தனி): ஆர்.ராஜன்
2. தென்சென்னை: ராஜேந்திரன்.
3. மத்திய சென்னை: நடிகர் எஸ்.எஸ்.சந்திரன்
4. காஞ்சிபுரம்(தனி) : டாக்டர் ராமகிருஷ்ணன்
5. வேலூர்: எல்.கே.எம்.பி. வாசு
6. கிருஷ்ணகிரி: நஞ்ஜேகவுடு
7. ஆரணி: முக்கூர் சுப்பிரமணியன்
8. விழுப்புரம் (தனி): பெ.முருகன்
9. சேலம்: முன்னாள் அமைச்சர் செம்மலை
10. நாமக்கல்: வைரம் தமிழரசி
11. திருப்பூர்: சி.சிவசாமி
12. பொள்ளாச்சி: கே.சுகுமார்
13. திண்டுக்கல்: பி.பாலசுப்ரமணி
14. கரூர்: மு.தம்பிதுரை
15. திருச்சி: ப.குமார்
16. பெரம்பலூர்: மருதை ராஜ்
17. கடலூர்: மு.சி.சம்பத்
18. மயிலாடுதுறை: ஓ.எஸ்.மணியன்
19. சிவகங்கை: ராஜகண்ணப்பன்
20. தேனி: தங்க தமிழ்ச்செல்வன்
21. ராமநாதபுரம்: வ. சத்தியமூர்த்தி
22. தூத்துக்குடி: சிந்தியா பாண்டியன்
23. நெல்லை: கே.அண்ணாமலை

‘நேரம்’ சரியிருந்ததால்…

இவர்கள் எல்லாம் ஜாதகம் பார்த்து சீட் தரப்பட்டவர்கள் ஆவர். அதிமுக சார்பில் போட்டியிட விண்ணப்பம் தந்த 3,400 பேரிடமும் ஜாதமும் பெறப்பட்டது. அதை ஜோதிடர் குழுவை வைத்து ஆராய்ந்து இந்த வேட்பாளர்களை ஜெயலலிதா தேர்வு செய்துள்ளார்.

பெளர்ணமியில் வெளியான அறிவிப்பு:

நிறைந்த பெளர்ணமி என்பதால் பல நாள் காத்திருந்து இன்று தனது வாக்காளர் பட்டியலை ஜெயலலிதா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.