தென்மராட்சி நலன்புரி முகாம்களில் தங்கியிருந்த தமிழ்மக்களில் 184 இளைஞர்,யுவதிகள் இராணுவத்தினரால் கடத்தப்பட்டுள்ளனர்

நேற்று செவ்வாய்க்கிழமை  மதியமளவில் கொடிகாமம், மிருசுவில் பகுதிகளில் உள்ள, இடம்பெயர்ந்த மக்களுக்கான நலன்புரி முகாங்களுக்கு இராணுவ ட்ரக்கில் வந்த இராணுவத்தினர் ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்து ஒரு அங்கத்தவர் வீதம் 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்,பெண் 184 உறுப்பினர்களை விசாரணை என்ற பெயரில் கைது செய்து கொண்டு சென்றுள்ளார்கள்.

பெற்றோர்கள் கதறி அழுது இராணுவத்திடம் இருந்து தடுக்க முற்பட்ட போது இராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்கி, துப்பாக்கியால் மேல்வெடிகள் வைத்து அச்சுறுத்தினார்கள்.

அதில் ஒரு பெற்றோருக்கு அடித்ததில் அவரின் வலது கை முறிவு ஏற்பட்டு பின் வைத்தியசாலைக்கு ஏற்றப்பட்டது.

மேலும் மிருசுவில் முகாமில் வேலை செய்கின்ற தமிழ் பொலிஸ் உறுப்பினர்; ஒருவரின் திடுக்கிடும் தகவல்படி கைது செய்து கொண்டு சென்றவர்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்து விட்டு அவர்களை கருணாவின் தலைமையின் கீழ் வடகிழக்கு பிரதேசங்களில் யுத்தவேலைகளுக்கும், பாதுகாப்பு பணிகளுக்கும் ஈடுபடுத்தப்போவதாக அவர் கூறியுள்ளார்.

இவர்களுக்கான பயிற்சி முகாம் தெல்லிப்பளையில் உள்ள இரகசியமான இடத்தில் நடைபெறுவதாக அறியமுடிகின்றது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.