சோனியா மீது நடவடிக்கை எடுக்க பா.ஜ. வலியுறுத்தல்

தனது வேட்பு மனுவில் தவறான தகவலை அளித்த காங்கிரஸ் கட்சித் த்லைவர் சோனியா காந்தி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என த‌மிழக பா.ஜனதா தலைவ‌ர் இல.கணேச‌ன் வலியுறுத்தியுள்ளார்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், ” ரேபரே‌லி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த சோனியா க‌ா‌ந்‌தி தனது கல்வி‌த் தகுதியை தவறாக குறிப்பிட்டுள்ளார். இது டைப் செய்யும்போது ஏற்பட்ட தவறு என்று கூறியுள்ளார். அவரைப் போலவே அவர் மகன் ராகுலும் தவறான தகவலை கொடுத்துள்ளார்.இதுதொடர்பாக தே‌ர்த‌ல் ஆணைய‌ம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது.

வருண் காந்திக்கு மிரட்டல் விடுப்பதுபோல மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பேசியுள்ளார்.அவர் மீது தேர்தல் ஆணைய‌ம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது.

தமிழகத்தில் தென்சென்னை, வடசென்னை, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, வேலூர், திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு கட்சி தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பட்டியல் விரைவில் வெளியாகும். அதன்பிறகு 2 வது கட்ட பட்டியல் வெளியாகும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க.வின் கோட்டை என்று சொல்லக்கூடிய பகுதி எதுவும் இல்லை. அழகிரி மதுரையில் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது.அது என்ன கணக்கு என்று தெரியவில்லை.

தி.மு.க, அ.தி.மு.க மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்கள் மாற்று சக்திக்கு வாக்களிக்க விரும்புகின்றனர். கடந்த தேர்தலின்போது தே.மு.தி.க இதனை பயன்படுத்‌தி கொ‌‌ண்டது.தற்போது நடப்பது மக்களவை தேர்தல்.எனவே, பா.ஜ.க.வு‌க்கு வாக்களிக்க வேண்டும்.

அ.தி.மு.க அணியில் தொகுதி பங்கீடு சிக்கலால், ம.தி.மு.க எங்கள் அணிக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுக்க மாட்டோம். அது அரசியல் நாகரிகம் இல்லை. ம.தி.மு.க.வோடு பேச்சு எதுவும் நடக்கவில்லை.

இலங்கையில் உள்ள நிலைமை கவலை அளிக்கிறது. காங்கிரஸ் அரசு தனது பொறுப்பை நிறைவேற்றவில்லை. பிரபாகரன் பாதுகாப்பு பகுதியில் இருப்பதாக கூறி இலங்கை அரசு தமிழர்கள் வாழும் பகுதியில் தாக்குதல் நடத்துவது தவறானது எ‌ன்றார்

Source & Thanks : in.tamil.yahoo.com

Leave a Reply

Your email address will not be published.