பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடிபணியாது : சர்தாரி

பாகிஸ்தானின் சொந்த நலன் கருதியே பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுகிறோம் எனத் தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, பயங்கரவாதத்திற்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
அமெரிக்கத் ராணுவத் தளபதி மைக் முல்லன், பாகிஸ்தானுக்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ரிச்சர்ட் ஹோல்புரூக் ஆகியோர் இஸ்லாமாபாத்தில் சர்தாரியை சந்தித்து பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலை குறித்து நேற்றிரவு விவாதித்தனர்.

இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானின் நலன் கருதியே பயங்கரவாதத்திற்கு எதிரான போரை தாங்கள் நடத்தி வருவதாகவும், பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்றும் சர்தாரி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பயங்கரவாதிகள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு அரசுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என சர்தாரி வலியுறுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் போது பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி, அயலுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோர் உடனிருந்தனர்.

Source & Thanks : in.tamil.yahoo.com

Leave a Reply

Your email address will not be published.