அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கப்பட்டது

சிறிலங்கா பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு 81 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

நேற்று செவ்வாக்கிழமை சபாநாயகர் முன்னிலையில் கூடிய போது அவரசகாலச சட்டம் நீடிப்பது தொடர்பான பிரேரணை பிரதமர் ரெட்ண சிறி விக்கிரமநாயக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இது தொடர்பான விவாதம் நடைபெற்று மாலை வேளையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் கிடைத்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிராக வாக்களித்தது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

Source & Thanks : pathivu.com

Leave a Reply

Your email address will not be published.