சிறிலங்காவின் பொருளாதாரம் 3 விகிதம் வீழ்ச்சி காணலாம்: மத்திய வங்கி

சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி இந்த வருடம் 3 விகிதம் வீழ்ச்சி காணலாம் என அந்நாட்டின் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் காப்ரால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தள்ளதாவது:

உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி; நடைபெற்று வரும் போர் என்பன சிறிலங்காவின் பொருளாதாரத்தை அதிகளவில் பாதித்துள்ளன.

எனவே இந்த வருடத்திற்கான பொருளாதார வளாச்சி 2.5 தொடக்கம் 3.5 விகிதத்தினால் வீழ்ச்சி காணலாம்.

பெருளாதார நிலமைகள் அனுகூலமாக அமைந்தால் கூட 4.5 தொடக்கம் 5.0 விகித வளர்ச்சியையே எட்ட முடியும் என்றார் அவர்.

சிறிலங்காவின் பொருளாதாரம் 2008 ஆம் ஆண்டு 6.0 விகித வளர்ச்சியையும், 2007 ஆம் ஆண்டு 6.8 விகித வளர்ச்சியையும் எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சிறிலங்காவின் பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு போரே காரணம் என பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வருடத்தின் பாதுகாப்பு செலவீனமாக அரசு 1.6 பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.