புலம்பெயர் தமிழ் மக்களின் எழுச்சி: சிறிலங்கா அரசு சீற்றம்

அனைத்துலக நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் நடத்தி வரும் போராட்டங்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் தனது கடுமையான எதிர்ப்பை அனைத்துலக நாடுகளுக்கு தெரிவித்துள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய சிறிலங்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ரோகித போகோல்லாகம அனைத்துலக நாடுகளை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அனைத்துலகத்திலும் வாழும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அங்கு பேரணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பேரணிகளின் போது விடுதலைப் புலிகளின் கொடிகளையும் சின்னங்களையும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தையும் தாங்கி செல்கின்றனர்.

இந்த பேரணிகள் விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட நாடுகளில் நடைபெறுகின்றன. ஆனால் அங்கு விடுதலைப் புலிகள் மீதான தடை என்பது காகிதத்தில் மட்டுமே உள்ளன என கோபாவேசமாக அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

Source & Thanks : Puthinam.com

Leave a Reply

Your email address will not be published.