மதுரை…விஜய்காந்துக்கு காத்திருக்கும் முத்துலட்சுமி

மதுரை: மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மீண்டும் பி.மோகனே போட்டியிடுகிறார்.

4 முறை இந்தத் தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை வென்றுள்ள மோகன் மீது எந்த கெட்ட பெயரும் இல்லை. அதே போல பெரிய அளவில் நல்ல பெயரும் இல்லை.

இன்னும் அதே எளிமையோடு சுற்றி வரும் மோகனை யாரும் எளிதில் சந்திக்கலாம். ஆனால், அவரை சந்தித்து மனு கொடுப்பதால் பெரிய அளவில் பலன் ஏதும் கிடைக்காது. அவரை சந்தித்த திருப்தி தவிர.

இந்தத் தொகுதியில் திமுக சார்பில் அழகிரி போட்டியிடவுள்ள நிலையில் இந்தத் தொகுதியை மார்க்சிஸ்ட்டின் தலையில் அதிமுக கட்டிவிட்டதாகவே கருதப்படுகிறது. தேமுதிக சார்பில் முத்துலட்சுமி போட்டியிடும் நிலையில் அவர் மும்முனைப் போட்டியை ஏற்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அழகிரியின் ஆட்கள் வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னரே தேர்தல் வேலைகளை ஆரம்பித்துவிட்டனர்.

ஆனால், தொகுதி ஒதுக்கீடு நடக்கவே இவ்வளவு நாளாகிவிட்டதால் மார்க்சிஸ்ட்டும் அதிமுகவும் இன்னும் பிரச்சாரத்தை ஆரம்பிக்கவில்லை. யார் பணம் செலவிடுவது என்ற சிக்கல் வேறு.

தேமுதிக வேட்பாளர் முத்துலட்சுமி அவரது தலைவர் விஜய்காந்த் வந்து பிரச்சாரம் செய்து அவரை அறிமுகம் செய்ய வேண்டிய அளவுக்கு அரசியலில் புதுமுகம்.

இதனால் பெரிய அளவில் தேர்தல் வேலைகளில் ஈடுபடாமல் விஜய்காந்த் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

Source & Thanks : thatstamil.oneindia

Leave a Reply

Your email address will not be published.