அமெரிக்காவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் இந்திய சிஇஓ!

நியூயார்க்: அமெரிக்காவில் அதிக சம்பளம் பெறும் டாப் தலைமைச் செயல் அலுவலர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, இன்றைய தேதிக்கு அமெரிக்காவிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் ஒரு இந்தியர்! மோட்டாரோலா நிறுவனத்தின் சிஇஓ சஞ்சய் ஜா-தான் அவர். கடந்த 2008-ம் ஆண்டில் அவர் பெற்ற சம்பளம் 104 மில்லியன் டாலர்கள். கிட்டத்தட்ட 550 கோடி ரூபாய்!

இவரோடு ஒப்பிட்டால் இந்தியாவின் நம்பர் பணக்காரர் முகேஷ் அம்பானி, ரிலையன் இண்டடஸ்ட்ரீஸ் சிஇஓ என்ற முறையில் பெறும் சம்பளம் ரூ.44.02 கோடி மட்டுமே.

சிட்டி குரூப்பின் விக்ரம் பண்டிட் கூட முகேஷ் அம்பானியைவிட 4 மடங்கு அதிக சம்பளம் பெறுகிறார் என்கிறது இந்த அறிக்கை.

ரே இராணி

ஆக்ஸிடென்டல் குழுமத்தின் சிஇஓவான ரே இராணி, அதிக சம்பளம் வாங்கும் அமெரிக்க சிஇஓக்களில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். இவர் வைன் ரிஸார்ட்ஸ் மற்றும் டிசிடபிள்யூ குழுமத்தின் இயக்குநராகவும் உள்ளார்.

ராபர்ட் ஐகர்

ஆண்டுக்கு 49.7 மில்லியன் டாலர் சம்பளமாகப் பெறும் ராபர்ட் ஐகர், வால்ட் டிஸ்னியின் சிஇஓ. வால்ட் டிஸ்னி கம்பெனியின் தலைவர் மற்றும் சிஓஓவாகவும் இருப்பவர்.

விக்ரம் பண்டிட்

அமெரிக்காவில் அதிக சம்பளம் பெறும் மற்றுமொரு இந்திய சிஇஓ விக்ரம் பண்டிட். ஆண்டுக்கு 38.22 மில்லியன் டாலர் சம்பளமாகப் பெறும் இவர் சிட்டி குரூப் வங்கிகளின் தலைமை செயல் இயக்குநர்.

இப்போது சிட்டி குழுமம் கடும் நஷ்டத்தைச் சந்திப்பதால் வெறும் 1 டாலர் சம்பளத்தில் பணியாற்றுவதாகவும், நிறுவனம் லாபத்துக்கு திரும்பிய பிறகே முழு சம்பளம் பெற்றுக் கொள்வேன் என்றும் நம்ம ஊர் ஹீரோ ஸ்டைலில் சபதமேற்றுள்ளார்.

லூயிஸ் காமில்லரி

36.36 டாலர்கள் சம்பளமாகப் பெறும் லூயிஸ் காமில்லரி அமெரிக்காவின் மற்றுமொரு காஸ்ட்லி சிஇஓ. பிலிப் மோரிஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

இவர்களைத் தவிர, கால்பைன் கார்பரேஷனின் சிஇஓ ஜாக் ஏ ஃ பஸ்கோ, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் கென்னத் ஐ செனால்ட், மோட்டாரோலாவின் இணை சிஇஓ கிரிகோரி க்யூ பிரவுன், இ பே நிறுவனத்தின் ஜான் ஜே டோனஹோ, அனடார்கோ பெட்ரோலியம் நிறுவன சிஇஓ ஜேம்ஸ் ஹேக்கட் ஆகியோர் அதிக சம்பளம் பெறுவோர் பட்டியலில் அடுத்தடுத்த நிலையில் உள்ளனர்.

Source & Thanks : thatstamil.oneindia

Leave a Reply

Your email address will not be published.