சுதந்திரப் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க புலிகளின் தலைவர் பிரபாகரன் திடசங்கற்கம் பூண்டுள்ளார்: பா. நடேசன்

தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத்தை இடையறாது முன்னெடுக்க தமிழீழு விடுதலைப் புலிகளின் தலைவர்
வேலுப்பிள்ளை பிரபாகரன் திடசங்கற்பம் பூண்டுள்ளதாக அதன் அரசியல்துறைப் பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன் தெரிவித்துள்ளார்.

1985ம் ஆண்டு பூட்டானின் தலைநகர் திம்புவில் முன்வைக்கப்பட்ட சமாதானத் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்
தயார் நிலையில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்திலிருந்து வெளியாகும் ஜனசக்தி தமிழ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க இராணுவத்துடனான யுத்தத்தை பிரபாகரன் மிகுந்த தன்னம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் இந்திய தேர்தல்களின் போது இந்திய காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என அவர்
தெரிவித்துள்ளார்.

தமிழக மக்கள் மீது விடுதலைப் புலிகளின் தலைவர் பேரபிமானம் கொண்டுள்ளதாகவும், தமிழக மக்களே எமது பலம் எனவும் நடேசன் தெரிவித்துள்ளார்.

அப்பாவி மக்கள் எதிர்நோக்கி வரும் பாரிய மனிதப் பேரவலம் குறித்து இந்திய மத்திய அரசு பாராமுகமாய் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source & Thanks : tanilwin

Leave a Reply

Your email address will not be published.