‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (07.04.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

இலங்கை பிரச்சனை குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் , நார்வே வெளியுறவுத்துறை அமைச்சருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இலங்கையில் நடைபெற்று வரும் கடும் போர் காரணமாக அப்பாவி பொதுமக்கள் அன்றாடம் பலியாகி வருவது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று சர்வதேச சமுதாயம் வலியுறுத்தி வருகிறது. .

இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் வாஷிங்டனில் இலங்கை பிரச்சனை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். நார்வே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோனஸ் கார் ஸ்டோயிரேவுடன் இந்த ஆலோசனையை அவர் மேற்கொண்டார். போர் நிறுத்தம், மனித அவல பிரச்சனை, அமைதி முயற்சி உள்ளிட்ட இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசியதாக தெரிகிறது .

சந்திப்பிற்கு பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது, இலங்கையில் போரை நிறுத்துவதற்கு நார்வே மேற்கொண்டு வரும் இடைவிடாத தொடர் முயற்சிகள் குறித்து தாங்கள் ஆலோசித்ததாக ஹிலாரி கிளிண்டன் கூறினார்.
அத்துடன் பருவ நிலை மாற்றம் மற்றும் ஆப்கானிஸ்தான் முதல் மத்திய கிழக்கு, இலங்கை உள்ளிட்ட பல்வேறு பிராந்திய பிரச்சனை களுக்கு தீர்வு காண்பது குறித்தும் நாங்கள் பேசினோம் என்று அவர் தெரிவித்தார். இருவருடைய பேச்சு வார்த்தையின் மற்ற விரிவான விவரங்கள் உடனடியாக தெரிய வில்லை.

!!!!!!!!!!!!!!!!!!!!
சிறிலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழினப் படுகொலையை அனைத்துலக சமூகம் தடுத்து நிறுத்தி அங்கு நிரந்தரப் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் வேண்டும் என்று வலியுறுத்தி கனடா, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மாபெரும் தொடர் மக்கள் எழுச்சி போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.
இந்த மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் புலம்பெயர் தமிழ்மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்திருக்கின்றனர்.
பிரான்சில்
சிறிலங்கா அரசாங்கத்தின் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தக் கோரி பிரான்சில் உள்ள புலம்பெயர் தமிழ்மக்களால் நேற்று திங்கட்கிழமை மாலையில் தொடங்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சகத்தின் முன்றலில் நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரான்ஸ் வாழ் தமிழர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர் .
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து தெரிய வருவதாவது:

சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழினப் படுகொலை தீவிரமடைந்துள்ள நிலையில் அதனை தடுக்கும் வகையில் போர்நிறுத்தம் கோரி பிரான்ஸ் வாழ் ஈழத் தமிழர்கள் வெளிவிவாகர அமைச்சின் முன்றலில் ஆயிரக்கணக்கில் திரண்டு ஆர்ப்பாட்ட ஒன்றுகூடலை நடத்தி வருகின்றனர்.

பாரிஸ் நகரின் இன்வலிட் என்னும் இடத்தில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சின் முன்றலில் நேற்று பிற்பகல் 3:00 மணியில் இருந்து ஒன்றுதிரண்ட தமிழர்கள் அதனை தொடர் போராட்டமாக மாற்றி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரெஞ்சு அரசாங்கம் முடிவு ஒன்றினை தெரியப்படுத்தும் வரை ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தை விட்டு நகர்வதில்லை என்ற உறுதிப்பாட்டுடன் மக்கள் முழக்கங்களை எழுப்பியபடி எழுச்சியுடன் காணப்படுவதாக எமது செய்தியாளர் அங்கிருந்து தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!
இதேவேளையில் பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் இருந்து நேற்று திங்கட்கிழமை கிளர்ந்தெழுந்த தமிழ் மக்கள், வெஸ்ட் மினிஸ்டர் நாடாளுமன்ற முன்றலில் தொடர்ச்சியாக மகிந்த அரசாங்கத்தின் தமிழின இனப் படுகொலைக்கு எதிராக முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சிறிலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழினப் படுகொலையை அனைத்துலக சமூகம் தடுத்து நிறுத்தி அங்கு நிரந்தரப் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் வேண்டும் என்று வலியுறுத்தி கனடா, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மாபெரும் தொடர் மக்கள் எழுச்சி போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.
இந்த மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் புலம்பெயர் தமிழ்மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்திருக்கின்றனர்.
கனடாவில்
கனடிய தமிழ் மாணவர் சமூகம், கனடிய தமிழர் சமூகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த போராட்டம் ஒட்டாவாவில் அமைந்திருக்கும் கனடிய நாடாளுமன்றம் முன்பாக நடைபெறவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாவது:
சிறிலங்கா அரசாங்கத்தின் கொடூர இனப்படுகொலையை உடன் நிறுத்தக் கோரியும
உடனடிப் போர் நிறுத்தம் வேண்டியும
சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறும் கனடிய அரசையும் கனடிய பிரதமர் ஸ்டீபன் காப்பரையும் வலியுறுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது .
இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12:00 மணி தொடக்கம் நாள்தோறும் தொடர் போராட்டத்தில் அனைத்துத் தமிழ் மக்களும் இணைந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
நாள்தோறும் காலை 7:00 மணிக்கு 1199 கென்னடி வீதியில் அமைந்திருக்கும் எவரெஸ்ட் Banquet மண்டபத்தில் இருந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளும் மக்களுக்கு உரிய பேருந்துகள் புறப்படவுள்ளன.
பேருந்துகளில் பயணிக்க விரும்புகின்றவர்கள் கீழ்க்காணும் தொடர் எண் வாயிலாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
சுயமாக வாகன வசதி கொண்டவர்கள் அதனைப் பயன்படுத்துமாறும் வேண்டப்படுகின்றனர்.
பேருந்துகள் புறப்படும் ஏனைய இடங்கள் பின்னர் அறியத் தரப்படும்.
பேருந்துப் பதிவுகளுக்கு: 416 825 6020
ஏனைய தொடர்புகளுக்கு: 647 838 6925
ஜேர்மனியில்
சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழின படுகொலையைத் தடுத்து நிறுத்த ஜேர்மனிய அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஜேர்மனி வாழ் தமிழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் குறித்து ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாவது :
ஜேர்மனி டுசல்டோவ் நாடாளுமன்றத்திற்கு (düsseldorf landtag) முன்பாக இன்று முற்பகல் 11:00 மணி தொடக்கம் தமிழினப் படுகொலையை உடன் தடுத்து நிறுத்த ஜேர்மனிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி கோரி முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது.
எனவே யேர்மன் வாழ் அனைத்து தமிழ் உறவுகளும் கலந்து கொண்டு எமது பலத்தை ஜேர்மனிய அரசிற்கு எடுத்துக்காட்டும் படி கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு: (49) 1633125311
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழீழ மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி சுவிற்சர்லாந்து ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபை முன்பாக இன்று (செவ்வாய்) மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
வன்னியில் தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசின் தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட்டு நிரந்தர போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
பிற்பகல் 2:00 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள ஆர்ப்பாட்டம் காலத்தின் தேவை கருதி சில வேளைகளில் காலவரையறையற்ற போராட்டமாக மாறும் என்பதால் தமிழ் உறவுகள் அதற்கான முன்னேற்பாடுகளுடன் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் நாடுகளில் மக்கள் தமிழினப் படுகொலைக்கு எதிராக ஆரம்பித்துள்ள தன்னெழுச்சிப் போராட்டங்கள் வலுப்பெற்றுவரும் நிலையில், அதிகளவிலான தமிழ் மக்கள் இவற்றில் கலந்துகொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஈழத்தமிழ் மக்களின் அவலத்தை வெளியுலகுக்கு எடுத்து விளக்கும் வகையில், மத்திய கிழக்கு நாடான கட்டாரில் நேற்று (திங்கட்கிழமை) கறுப்புக்கொடி, மற்றும் சுவரொட்டிப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கட்டாரில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள் அனவரும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு தமிழ் மக்களின் அவலத்தை கட்டார் அரசுக்கும், மக்களுக்கும் தெரியப்படுத்தி சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னி மக்களின் அவலத்தைத் தடுத்து உடனடி போர் நிறுத்தம் செய்யுமாறு வலியுறுத்தி நோர்வே பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.
பிரதமர் தனது அலுவலகத்திற்கு முன்பாக காலை 10:00 மணியளவில் மக்கள் ஒன்றுகூடுமாறு நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
வன்னியிலுள்ள பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்கா படையினர் தாக்குதல் நடத்த முற்படுவதாக தகவல் வெளியாகி இருப்பதுடன், அவ்வாறு தாக்குதல் நடத்தினால் பல இலட்சக்கணக்கில் மக்கள் உயிரிழக்க நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிறீலங்கா அரசு மீதான அனைத்துலக அழுத்தம் உடனடியாகப் பிரயோகிக்கப்பட்டு போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் எனவும், இதற்காக புலம்பெயர் தமிழ் மக்கள் கிழர்ந்தெழ வேண்டும் எனவும், தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் நேற்று முன்னாள் (ஞாயிற்றுக்கிழமை) அழைப்பு விடுத்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
இது தொடர்பாக நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
எமது இனத்தை கொடிய அழிவில் இருந்து காத்திட, உடனடிப் போர் நிறுத்தத்தினை ஏற்படுத்துவதற்கு நோர்வே அரசாங்கம் உரிய உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்த அணி திரள்வோம்.
எமது சொந்த அலுவல்களை நாளை ஒதுக்கி வைத்து எங்கள் உறவுகளுக்காக குரல் கொடுப்போம். அனைவரும் வீதிக்கு இறங்குவோம் என்று அச்செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
!!!!!!!!!!!!!!!!!
போர் வெற்றியைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு சிறுபான்மையினருடைய இருப்பை பலவீனப்படுத்தி அழித்துவிடும் திட்டம் ஒன்றுடன் அரசாங்கம் செயற்படுவதாக கடுமையான எச்சரிக்கை ஒன்றை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டிருக்கின்றார். கொழும்பு கொள்ளுப்பிட்டி ரேணுகா ஹோட்டலில் ஐனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசனுடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே இந்த எச்சரிக்கையை அவர் வெளியிட்டார்.

இங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது:

ஜனநாயக அடிப்படையில் மக்கள் ஆணையைப் பெற்றுக்கொள்ளாமல் தேர்தல் முறையில் மாற்றத்தைச் செய்து அதிகாரத்தில் நீடிப்பதற்கான திட்டம் ஒன்றுடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

போர் வெற்றிக்குள் மறைந்து நின்றுகொண்டு அரசாங்கம் ஜனநாயகத்துக்கு மாபெரும் சவாலை விடுத்துள்ளது. இதன் மூலம் சிறுபான்மை இனங்களான தமிழ், முஸ்லிம்களின் இருப்பும், பிரதிநிதித்துவமும் கேள்விக்குறியாக்கப்படும் ஆபத்து உள்ளது.

இதனை வெற்றி கொள்வதற்காக சிறுபான்மையினக் கட்சிகளும் அரசியல் அமைப்புக்களும் ஒன்றிணைந்து போராடுவது அவசியமாகும். இரண்டு தேசியக் கட்சிகளில் ஒன்றுடன் இணைவதால் மட்டும் இதனைச் சாதித்துவிட முடியாது.

மேல் மாகாண சபைத் தேர்தலின் பின்னர் மேலும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைச்சர் பதவிகளைக் காட்டி தமது பக்கத்துக்கு இழுத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியில் நீடித்துக்கொள்வதற்கான திட்டத்தினை அரசு வகுத்திருக்கின்றது.

அதற்காகத்தான் மாகாண சபைத் தேர்தல்களைத் துண்டு துண்டாக நடத்தி எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்தும் திட்டத்தினை அரசாங்கம் அரங்கேற்றிக்கொண்டிருக்கின்றது .

போர் வெற்றிக்குப் பின்னர் ஜனநாயகத்தைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டிய அரசு, பதிலாக அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் சதித்திட்டம் ஒன்றில் இறங்கியிருக்கின்றது. இதனால் சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

இவ்வாறான அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றுபட்டுப் போராடுவதற்குத் தயாராக வேண்டும் எனவும் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சிறிலங்காவின் கம்பஹா மாவட்டத்தில் உள்ள மாரவில பகுதி வீடொன்றில் இருந்து வானூர்தியின் சில பாகங்கள் மீட்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
குறிப்பிட்ட வீட்டின் உரிமையாளரும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் .

காவல்துறைக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றைத் தொடர்ந்தே கம்பஹா மாவட்டத்தில் உள்ள கடற்கரைக் கிராமமான மாரவில பகுதியில் குறிப்பிட்ட இல்லத்தை காவல்துறையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுற்றி வளைத்தனர்.

வீட்டை காவல்துறையினர் சோதனையிட்ட போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த வானூர்தியின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது தொடர்பில் வீட்டு உரிமையாளர் தெளிவாகப் பதிலளிக்காததால் அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இந்த வீட்டின் உரிமையாளர் வான் படையில் முன்னர் பணியாற்றி ஓய்வு பெற்றவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட வானூர்தியின் உதிரிப்பாகங்கள் மூன்று அடுக்குகளைக் கொண்டதாகக் காணப்பட்டதாகவும், இந்தப் பகுதியில் வானூர்தி பாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருப்பது காவல்துறையினருக்கும் வான்படையினருக்கும் பெரிதும் அதிர்ச்சியைக் கொடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
!!!!!!!!!!!!!!!!*
புதுக்குடியிருப்பு சண்டைகளில் தனது முக்கிய தளபதிகளை இழந்த போதிலும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் முல்லைத்தீவிலேயே ஒளிந்திருக்கலாம்.
அனேகமாகப் பாதுகாப்பு வலயப் பகுதியில் அல்லது பதுங்கு குழிக்குள் (பங்கருக் குள் ) ஒளித்திருக்கலாம்.
இவ்வாறு கூறியிருக்கிறார் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா.

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதர் றொபேட் .பிளேக் நேற்றுத் தம்மைச் சந்தித்த போது இதனை அவரிடம் பொன் சேகா தெரிவித்தார் என படைத்தரப்பின் அறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

!!!!!!!!!!!!!!!
பாதுகாப்பு வலயத்திற்குள் பொது மக்களுடன் சிக்கியுள்ள விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி இராணுவ நடவடிக்கைக்கு இராணுவத்தினர் தயாராகி வருகின்றனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு நாள்களாக இடம்பெற்ற மோதல்களில் பெருமளவு விடுதலைப் புலிகளை அழித்த பின்னர் படையினர் தொடர்ந்து முன்னேறுகின்றனர் என இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படையினர் பொது மக்களை விடுவிப் பதற்கான இறுதி நடவடிக்கைகளை மேற்கொள்வதால் விடுதலைப் புலிகளின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை படையினரின் முழுமையான கட் டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட புதுக்குடியிருப்பில், பல விடுதலை புலி களின் உடல்களை படையினர் மீட்டனர் என்றும் இராணு வப் பேச்சாளர் உதய நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

இராணுவம் பொது மக்களுக்கு என அறிவித்த 20 சதுர கிலோமீற்றர் பகுதிக்குள் விடுதலைப் புலிகள் முடக்கப்பட்டுள் ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் பொதுமக்களை தொடர்ந்து மனித கேடயங்களாகப் பயன்படுத்துகின்றனர் என்றும் பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து தாக்குலை மேற்கொள்கின்றனர் எனவும் உதய நாணயக்கார மேலும் கூறினார்.
இராணுவம் எவ்வாறான திட்டத்தை வகுத்துள்ளது என்பதை தெரிவிக்க மறுத்துள்ள அவர், இது வித்தியாசமான நடவடிக்கையாக மீட்பு நடவடிக்கையாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழ் மக்கள் இன்று அரசியல் தீர்வில் நம்பிக்கை இழந்து விட்டார்கள் எனத் தெரிவித்துள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், இந்த அரசாங்கத்திடம் இருந்து இன நெருக்கடியைத் தீர்த்து வைக்கக்கூடிய அரசியல் தீர்வினை எதிர்பார்க்கவும் முடியாது எனத் தெரிவித்திருக்கின்றார்.
கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள ரேணுகா ஹோட்டலில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே இந்தக் கருத்துக்களை மனோ கணேசன் தெரிவித்தார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ராவூப் ஹக்கீமுடன் இணைந்து தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் உரையாற்றினார்.

இங்கு அவர் மேலும் முக்கியமாக தெரிவித்ததாவது:
அரசியல் தீர்வினைக் கொண்டு வருவதில்லை; இராணுவத் தீர்வு முனைப்புக்களை நீடிப்பதிலேயே அரசாங்கம் முனைப்புடன் இருக்கின்றது.
அரசியல் தீர்வைக் காண்பதற்கென அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் கூட்டங்களை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி புறக்கணித்த நிலையில் அதில் நாம் கலந்து கொண்டோம்.

ஆனால், அனைத்து கட்சிக்குழுவின் பரிந்துரைகளில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. அனைத்துலக கட்சிக்குழுவின் நிபுணர்கள் குழு தயாரித்தளித்த பெரும்பான்மை அறிக்கையைத் திறந்து பார்க்காமலேயே அவர் தூக்கி எறிந்தார்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த பரிந்துரைகளைப் பகிரங்கப்படுத்துவதற்குக் கூட அரசாங்கம் தயாராக இருக்கவில்லை. பதிலாக இராணுவ நிகழ்ச்சி நிரலை நீடிப்பதிலேயே அரசாங்கம் முனைப்புக்காட்டி வருகின்றது.

இதன் காரணமாக தமிழ், முஸ்லிம் மக்கள் அரசியல் தீர்விலும் அரசாங்கத்திலும் நம்பிக்கை இழந்து விட்டனர். இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் அரசுக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை.

அரசியல் தீர்வில் அரசாங்கத்துக்கு நம்பிக்கை இருக்குமானால் முதலில் நிபுணர்கள் குழுவின் அறிக்கையைப் பகிரங்கப்படுத்த வேண்டும். இதனை நான் அரசுக்கு ஒரு சவாலாகவே விடுக்கின்றேன்.

அரசியல் அமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை தமிழர்கள் 20 வருடங்களுக்கு முன்னரே நிராகரித்து விட்டனர். ஆனால், மாகாண சபைத் திட்டத்தைக் கூட முழுமையாக நடைமுறைப்படுத்த அரசு தயாராகவில்லை எனவும் மனோ கணேசன் இங்கு தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடரின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவிற்கு .நாவின் கல்வி மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ 2009ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகைச் சுதந்திர விருதை வழங்கியுள்ளது. யுனெஸ்கோவின் பணிப்பாளர் கொய்சிரோ மற்சூறா இவ்விருதுக்கு லசந்த விக்ரமதுங்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

போருக்கு எதிராகச் செயற்பட்டு வந்த லசந்த பரஸ்பர புரிந்துணர்வு, இணக்கப்பாடு , கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகிய முக்கிய பண்புகளை தனது ஊடகவியலில் கடைப்பிடித்ததற்காக இவ்விருது அவருக்குப் பொருத்தமானது என்றும் கொய்சிரோ மற்சூறா தெரிவித்துள்ளார்.

அவர் தனக்கு ஆபத்துள்ளதை உணர்ந்தும் தனது மரணம் வரை உண்மையைப் பேசியதால் இவ்விருதுக்கான தேர்வாளர்களால் இவரது பெயர் ஏகமனதாக ஏற்கப்பட்டதாக தேர்வாளர் குழுவின் தலைவர் ஜோ தொலோலோ தெரிவித்தார்.
முழு உலகத்தையும் சேர்ந்த 14 பேரைக் கொண்ட யூரிகள் சபையே ஏகமனதாக லசந்தவைத் தெரிவு செய்துள்ளது.

அவர் எழுதிய ஆசிரிய தலையங்கம் அவர் ஜனவரி 8ஆம் திகதி கொல்லப்பட்ட மூன்று நாட்களின் பின்னரே ஜனவரி 11ஆம் திகதி வெளியானதாகவும் தேர்வுக்குழுத் தலைவர் தெரிவித்தார்.

அத்துடன் அவர் ஊடக சுதந்திரத்திற்காகத் தன்னை அர்ப்பணித்ததுடன் அதன் அடிப்படையே கொலைக்கான காரணமாக இருந்தது. லசந்த விக்ரமதுங்க பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்ட போதும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை .

இவ்விருது மே மாதம் மூன்றாம் தி;கதி உலக பத்திரிகை சுதந்திர தினத்தன்று கட்டாரின் தலைநகரான டோகாவில் வைத்து வழங்கப்படவுள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு அம்பாறை மாவட்டத்தின் திருகோயில் பிரதேசங்களில் கடந்த இரண்டு வாரங்களில் 17 இளைஞர்கள் கடத்தப்பட்டு அல்லது காணாமல் போயுள்ளனர். இது குறித்து இளைஞர்களின் உறவினர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரி. துரைரட்ணசிங்கத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இலங்கை இராணுவம் மற்றும் தமிழ் ஆயுத குழுக்கள் வெள்ளை வானில், வீடுகளுக்கு சென்று இளைஞர்களை பலவந்தமாக அழைத்துச் சென்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மூதூர் கிழக்கு மற்றும் திருகோயில் பிரதேசங்களில் சிலர் தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளனர்.

இதேவேளை மூதூர் கிழக்கில் இராணுவத்தினர் கடந்த வாரம் மேற்கொண்ட தேடுதலில் 12 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

தினமும் இராணுவத்தினாரல் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன் கைதுகளும் இடம்பெற்று வருகின்றன. இதன் காரணமாக மூதூர் கிழக்கு மற்றும் திருகோயில் பிரதேசங்களை இளம் யுவதிகளும் இளைஞர்களும், பாதுகாப்பான இடங்களை தேடி தமது வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளதாக உறவினர்கள் துரைரட்ணசிங்கத்திடம் குறிப்பிட்டுள்ளனர்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
விடுதலைப் புலிகளின் ஆயுத களஞ்சியசாலை ஒன்றை படையினர் நேற்று முற்றாக தாக்கி அழித்ததுடன் 9 சடலங் களையும் கைப்பற்றியதாக படைத் தரப் பில் தெரிவிக்கப்பட்டது.
புதுமாத்தளனுக்குத் தெற்கே பாது காப்பு வலயப் பகுதியிலிருந்து 55 ஆவது படைப்பிரிவு 1 கி.மீற்றர் தொலைவிலும் 58 ஆவது படைப்பிரிவு 300 மீற்றர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

விடுதலைப்புலிகளின் இறுதி கட்டத்தில், அவர்களுக்கு ஒக்சிஜன் வழங்கி கைகளை சுட்டுக்கொள்ள வேண்டாம் என ஜாதிக ஹெல உறுமய தலைவர் எல்லாவள மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார் .

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

முல்லைத்தீவில் புதுமாத்தளன் பகுதியில் அமைந்துள்ள மக்கள் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் செஞ்சிலுவைச் சர்வதேசகுழு( .சி.ஆர்.சி) தனது மனிதாபிமானப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
அந்த அமைப்பின் பேச்சாளர் செய்தி ஏஜென்ஸி ஒன்றுக்கு இத்தகவலை நேற் றுத் தெரிவித்துள்ளார்.
மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதியில் உள்ள ஒரு லட்சம் மக்களுக்குமான மனிதாபிமானப் பணிகளை நாம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம் .
இந்தப் பணிகளை முன்னெடுக்க நூற்றுக்கு மேற்பட்ட தொண்டர்கள் பணியாற்றுகின்றனர். அவர்கள் புதுமாத்தளன் பகுதியில் இருந்து மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறார்கள் .
அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் எமது பணியாளர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளனர் என்றார் அவர்.
புதுக்குடியிருப்பை முழுமையாகக் கைப்பற்றி விட்டதாக அரசாங்கம் நேற்றுமுன்தினம் அறிவித்த பின்னர், செஞ்சிலுவைப் பேச்சாளர் தமது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!
புதுக்குடியிருப்பு என்பது, ரஜரட்ட ராஜ்ஜியம் வீழ்ச்சியடைவதற்கு முன்னர் காணப்பட்ட பண்டைய கால நகரம் எனவும் இதனை மீட்டமை தொடர்பில் படையினருக்கு கௌரமளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். பயங்கரவாதிகளுக்கு தற்போது இருப்பது, போர் தவிர்ப்பு வலயமான ஒரு சிறிய பகுதி மாத்திரமே.

30 வருடங்களாக தீரக்கப்படாத பிரச்சினையாக அரசியல்வாதிகள் மாற்றிக் கொண்ட விடுதலைப்புலிகள் தொடர்பான பிரச்சினையை மிகவும் குறுகிய காலத்திற்குள் முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைள் வெளிநாட்டு சக்திகளையும் ஆச்சரியத்திற்கு உள்ளாகியுள்ளது.

விடுதலைப்புலிகள் பயன்படுத்தியிருந்த, ஒரே தடையில் 600 வேட்டுகளை தீரக்கவல்ல துப்பாக்கிகள் போன்ற நவீன ஆயுதங்களை நோக்கும் போது, விடுதலைப்புலிகள் இலங்கைக்கு மாத்திரமல்லாது, இந்தியாவுக்கு அழுத்தங்களை கொடுக்க தயாராகி இருந்தனர் என்பது புலப்படுகிறது.

இவ்வாறான ஆயுதங்கள் இலங்கை இராணுவத்திடம் கூட காணப்படவில்லை. இந்தியா பலமான நாடாக வளர்ச்சியடைந்து வருவதற்கு எதிரான மேற்குலக நாடுகள், விடுதலைப்புலிகள் ஊடாக இந்தியா மீது தாக்குதல் நடத்தும் திட்டத்திற்காக, புலிகளுக்கு ஆயுதங்களை கொடுத்து போஷித்தனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால் இந்த சந்தர்ப்பத்தில் கூட விடுதலைப்புலிகளுக்கு வலு சேர்க்க சில மேற்குல நாடுகள் முயற்சிக்கக்கூடும்.இவ்வாறான எந்த சக்திகள் வந்தாலும் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வரும் போராட்டதை நிறுத்த போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளமை பாராட்டப்பட வேண்டியது.

எவ்வாறான சக்திகள் வந்த போதிலும் அவற்றை முறியடித்து, எதிர்கால சந்ததியினருக்கு நாட்டை பாதுகாத்து கொடுப்பது, நாட்டு தலைவரின் கடமை எனவும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவள மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அரசாங்கப் படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் உக்கிர மோதல்களில் காயமடையும் வன்னிச் சிவிலியன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்வடைந்து செல்கின்றமை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடக அறிக்கைகளின் மூலம் தெளிவாக புலப்படுகின்றது.

வடக்கு கிழக்கில் குறிப்பாக வன்னிச் சிவிலியன்களுக்கு சிகிச்சையளிக்கப்படும் வைத்தியசாலைகளின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வவுனியா வைத்தியசாலை அதிக பட்சமாக 600 நோயாளிகளுக்கே சிகிச்சை அளிக்க முடியும் என்ற போதிலும் தற்போது அங்கு 1200க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது .

மன்னார் வைத்தியசாலையில் 500 நோயாளிகளே உச்ச பட்சமாக தங்கியிருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும் என்ற போதிலும் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை வைத்தியசாலை மோதல்களில் காயமடையும் அரச படையினரின் சிகிச்சைக்காக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதான வைத்தியசாலைகளுக்கு உறுதுணையாக கிளை வைத்தியசாலைகளை நிறுவும் திட்டமொன்றை சுகாதார அமைச்சு முன்வைத்த போதிலும் பாதுகாப்பு அமைச்சு பாதுகாப்பை காரணம் காட்டி குறித்த திட்டத்தை நிராகரித்துள்ளது.

மேலும் குறித்த வைத்தியசாலைகளில் பாரியளவு மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது .

விசேட நிபுணத்துவ வைத்தியர்கள் இல்லாத காரணத்தினால் நோயாளிகள் பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கனிஸ்ட வைத்திய அதிகாரிகள் தமது இயலுமைக்கும் அப்பால் கடமையாற்றி வருவதாகவும், விசேட நிபுணத்துவ மற்றும் சிரேஸ்ட வைத்தியர்கள் குறித்த பிரதேசங்களுக்கு செல்ல விரும்பவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.

சாதாரண வைத்தியர்கள் சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாகவும், இது சதாரண சூழ்நிலையில் ஓர் குற்றச் செயல் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சைகளை வழங்குவதில் பல்வேறு சிரமங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரத்தை மேற்கோள்காட்டி பிரபல ஆங்கில இணையதளமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

மேலும் வன்னியிலிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் சிவிலியன்களது தேவைகளை கேட்டறிந்து கொள்ள எந்தவொரு அதிகாரியும் நியமிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் விடுதியின் இராணுவ தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 11 மாணவர்கள் படையினரால் தெல்லிபழையில் உள்ள இராணுவ புனர்வாழ்வு முகாமுக்கு பலவந்தமாக அழைத்துச் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

நேற்று ஆசிரியர் கலாசாலைக்கு விஜயம் செய்த கல்வியதிகாரிகளிடம் பெற்றோர் இதனை தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்பாணம் மற்றும் தென்மராட்சி பகுதிகளில் இருக்கும் தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது .

படையினரால் அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்களில் சிலர் எதிர்வரும் உயர்தரப் பரீட்சையில் தோற்றவுள்ளனர். இதேவேளை கோப்பாய் தடுப்பு முகாமில் உள்ள மாணவர்களுக்கு கல்வியதிகாரிகள் கற்ற உபகரணங்களை வழங்கிய போது, மாணவர்கள் அவற்றை பெற்றுக்கொள்ள மறுத்துள்ளனர்.

படையினரால் மாணவர்கள் புனர்வாழ்வு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டமை தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தாமை குறித்து, மாணவர்களின் பெற்றோர்கள் விசனமடைந்துள்ளனர். இந்த நிலையில் மாணவர்கள் படையினரால் கடத்திச் செல்லப்பட்டமை குறித்து விவாதிக்க யாழ் அரச அதிபர் கே.கணேஷ் இன்று (07) உடனடியான கூட்டம் ஒன்றை நடத்த உள்ளதாகவும் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தென்மராட்சியில் உள்ள தடுப்பு முகாம்களில் தங்கியுள்ள மாணவர்களும் படையிரால் அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எத்தனை மாணவர்கள் படையினரால் அழைத்துச் செல்லப்பட்டனர் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தலைமையில் வடக்கு கிழக்கில் அரசாங்கம் தனியான இராணுவப் பிரிவொன்றை அமைத்துள்ளது என்றும் அதனூடாக அங்கு இராணுவ ஆட்சியொன்றைக் கொண்டு செல்லத்திட்டமிட்டுள்ளது என்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறினார்.
கொழும்பில் நேற்று மனோ கணேசன் எம்.பியும் தாமும் இணைந்து நடத்திய ஊட கவியலாளர் சந்திப்பிலேயே ஹக்கீம் இவ்வாறு கூறினார் . அங்கு ஹக்கீம் மேலும் கூறியவை வருமாறு:
அரசு இப்போது யுத்த வெற்றிகளை அடிப்படையாக வைத்துத்தான் நினைத்த அனைத்தையும் செய்கின்றது. அவ்வாறான ஒன்றுதான் இந்த மாகாணசபைத் தேர்தல்களும்.
மக்களின் ஆணையை புறம்மொதுக்கி வைத்து விட்டு அரசு ஒருவகையான இராணுவ ஆட்சியை நடத்திக் கொண்டு வருகிறது.
அண்மையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்த னின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அவர்களின் ஆயுதங்களை அரசிடம் கையளித்தது. இது எல்லோரையும் ஏமாற்றும் செயல்.
அவர்கள் ஆயுதங்கள் முழுவதையும் அரசிடம் ஒப்படைக்கவில்லை. சிறு எண்ணிக்கையை மாத்திரமே ஒப்படைத்தனர். அந்தச் சந்தர்ப்பத்தில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் எவரும் அங்கு இருக்கவில்லை .
இந்த ஆயுத ஒப்படைப்பை எப்படி நம்புவது?
இது ஒரு நாடகம். இந்நாட்டு மக்களையும் சர்வதேசத்தையும் முட்டாளாக்கும் செயல்.
கருணாவிடம் இருந்த ஆயுதங்கள் எங்கே
ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்று கூறப்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் தம்மிடமுள்ள ஆயுதங்களை ஒப்படைக்க முடியாது என்று அமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் கூறிவந்தார் .

இப்போது தன்னிடம் ஆயுதங்கள் எவையும் இல்லை என்று கூறுகின்றார். அப்படியென்றால் தான் ஆயுதங்களை ஒப்படைக்க மாட்டேன் என்று கூறியபோது இருந்த ஆயுதங்கள் எங்கே?.

அரசு கருணாவின் தலைமையில் வடக்கு கிழக்கில் தனியான இராணுவ பிரிவு ஒன்றை உருவாக்கியுள்ளது. அங்கு இராணுவ ஆட்சியை நடத்தவே திட்டமிட்டுள்ளது. கருணாவிடம் பல முகாம்களும், படைகளும் உள்ளமை அனைவருக்கும் தெரிந்த உண்மை. இதை அவரால் மறுக்க முடியாது. இந்த மாதிரியான நிலையில்தான் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை இன மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் எமக்குண்டு.

இந்த நோக்கில்தான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும், மனோ கணேசனின் மேலக மக்கள் முன்னணியும் ஒன்று சேர்ந்து மேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றன.
சிறுபான்மை இனக் கட்சிகள் பெரும்பான்மை இனக்கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியுடனோ அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடனோ இணைவதால் சிறுபான்மை இன மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க முடியாது.

எமது மக்களின் வேதனை எமக்குத்தான் தெரியும். இந்த வகையில் சிறுபான்மை இனக் கட்சிகள் இவ்வாறு இணைவதுதான் எமது மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க பொருத்தமானதாக அமையும் என்றார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மறுவாழ்வுத் திட்டமொன்றை ஆரம்பிக்க உள்ளதாக இராணுவத் தரப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நான்கு மாதங்களில் யாழ்ப்பாணத்தில் சுமார் 74 விடுதலைப் புலி உறுப்பினர்கள் அரசாங்கப் படையினரிடம் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் 6 முதல் 12 மாத கால விசேட மறுவாழ்வுத் திட்டங்களுக்குள் அனுமதிக்கப்படவுள்ளனர்.

இவ்வாறு மறுவாழ்வு அளிக்கப்படுவோருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே மறுவாழ்வுத் திட்டத்தில் இணைந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்தோர் வேலை வாய்ப்புக்களை பெற்றுள்ளதாக இராணுவ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் கனேடிய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென அந்நாட்டு அரசியல் தலைவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

வன்னியில் சொல்லொனா துயரங்களை எதிர்நோக்கி வரும் அப்பாவி தமிழ்ச் சிவிலியன்களுக்கு தேவையான அடிப்படை மனிதாபிமான உதவிகளை வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை விவகாரம் தொடர்பில் கனேடிய அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டுமென புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜெக் லெய்டன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி ஜெர்மனியும், பிரான்ஸசும் ஏற்கனவே ஐக்கிய நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையில் கனேடிய அரசாங்கமும் இணைந்து கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கப் படையினருக்கும் இடையிலான மோதல்களினால் ஆயிரக் கணக்கான அப்பாவிச் சிவிலியன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனேடிய மனித உரிமைகளுக்கான அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மாநாடொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தலைவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் அமைப்பின் சுற்றுலாத்துறை அமைச்சர்களின் மாநாடு இன்று இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் மிலிந்த மொரகொட தலைமையில் கொழும்பில் ஆரம்பமாக உள்ளது.

கொழும்பு தாஜ் சமுத்திரா விடுதியில் இன்றும் நாளையும் மாநாடு நடைபெற உள்ளது. பிராந்திய சுற்றுலாத்துறையின் வளர்ச்சி மற்றும் கூட்டு திட்டங்கள் குறித்து மாநாட்டில் கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ்குடா நாட்டுக்கு A-09 பாதையாலட பொருட்களை எடுத்து செல்ல 157000ரூபா பார ஊர்திக்கட்டணமாக செலுத்த வெண்டியுள்ளதாக வர்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது சிறீலங்கா அரசு கொழும்பில் இருந்து பொருட்களைகொண்டு செல்ல அரச மொத்த வியாபார நிலையவாகனங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவற்றுக்கு அனியாயமாக பல கட்டணங்கள் வெலுத்துவதாகவும் 136000ரூபா வாகனக் கூலியாகவும் இறக்கி ஏற்றும் கூலி 10000ரூபா என்றும் பின்னர் நாவற்குழி களங்சியத்தில் இருந்து யாழி் வர்த்தக நிலையங்களுக் கொண்டு செல்ல மீண்டும் 10000ரூபாவும் இறக்க 1000ரூயாவும் என மொத்தம் 157000இற்கு மேல் செலவாவதாகவும் இதனால் தாம் பெரும் நட்டத்தினை எதிர்நோக்குவதாகவும் கப்பலில் பொருட்களை கொண்டுவருவதா விட கூடிய விலையிலேயே பொருட்கள் விற்க வேண்டியுள்ள நிலையில் தாம் பொருட்ளை குறைந்த விலையில் விற்பதாக ஒரு மாயையை சிறீலங்கா அரசும் வேறு சிலரும் மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் தொவித்துளளனர்.

சரசரியாக ஒரு பாராஊடி்தியில் 15 மெற்றிக் தொன் உணவு கொண்டுவரப்படாலாம் எனவே இங்கு ஒரு மெற்றிக் தொன்னுக்கு 15000ரூபா வரையில் கட்டணம் மாத்திரம் செல்வதாகவும் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தமது பாரஊர்திகயளில் பொருட்கள் கொண்டுவரப்படின் வெறும் 50000ரூபா மாத்திரம் கட்டணமாக செலவாகும் என தெரிவித்துள்ள வர்தகர்கள் தாம் தற்போது 100000மேற்பட்ட பணத்தினை செலழிப்பதாகவும் அது அப்பாவி மக்களின் தலைகளில் சுமத்தப்படுவதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.
யாழுக்கான தரைப்பாதை திறக்கப்ட்டுள்ளதாகவும் அதனூட வேகுவிரைவில்போக்குவரத்து இடம் பெறும் என்றும் சிறீலங்கா படையினரும் அரசும் தொடர் பிரச்சாரங்கள் நடாத்திவருகின்றதையும் ஈதவரை அவ்வாறான எநத நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமையும் சுட்டிக்காட்டத்தக்க
!!!!!!!!!!!!!!!!!!!
india
!!!!!!!!!!!!!!!!!!!
தேர்தல் குறித்தோ, தொகுதி பங்கீடு குறித்தோ தற்போது பேசும் மனநிலையில் நான் இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி ஒதுக்கீடு முடிவடைந்துள்ளது. கடந்த இரு வாரங்களாக இழுபறியில் இருந்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனான தொகுதி ஒதுக்கீடும் நேற்று சுமூகமாக முடிவுக்கு வந்தது.

எனினும், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுகவுடனான தொகுதி ஒதுக்கீடு இன்னமும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து இழுபறியாக உள்ளது.

இந்நிலையில் , அதிமுகமதிமுக இடையே நேற்று மாலை தொகுதி உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் , மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்திப்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால், நேற்று இரவு வரை, இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில், இலங்கை தமிழர் பாதுகாப்புக் குழுவை சேர்ந்த , தென்மாவட்ட மாணவர்கள் நேற்றிரவு சுமார் 8.50 மணியளவில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை வந்தனர். அவர்களை வரவேற்பதற்காக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எழும்பூர் ரயில் நிலையம் வந்தார்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ” தேர்தல் பற்றியோ, தொகுதி ஒதுக்கீடு பற்றியோ பேசும் மனநிலையில் நான் தற்போது இல்லைஎன்றார்.

பின்னர், ரயிலில் வந்திறங்கிய மாணவர்களை அவர் வரவேற்க சென்றார். சென்னை வந்திறங்கிய தென்மாவட்ட மாணவர்களில் ஒரு பிரிவினர், தங்களை வரவேற்க வந்த வைகோவுக்கு எதிராக கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்ற ராமே‌ஸ்வர‌ம் ‌‌மீனவ‌ர்களை ‌‌விடு‌வி‌க்க நடவடி‌க்கை எடு‌க்க‌ப்ப‌ட்டு வரு‌‌கிறது எ‌ன்று த‌‌மிழக அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக த‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌‌பி‌ல், கடந்த 1ஆ‌ம் தேதி, கடலில் 6 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமே‌ஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர். அவர்களது படகுகளையும் அவர்கள் கொண்டு சென்றார்கள்.

இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலமாகவும், சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் மூலமாகவும் பல்வேறு துறையினரை அணுகி, பிடித்துச் செல்லப்பட்ட இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகளையும் கூடுமான வரையில் விரைவாக விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இலங்கையில் உள்ளநீ‌திம‌ன்ற‌ங்களுக்கு தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளது . இதனால் இந்த விவகாரத்தில் சிறிது தாமதம் ஏற்பட்டு வருகிறது. எனினும், மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது எ‌ன்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
!!!!!!!!!!!!!!!!!!!!!
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் குண்டம் விழாவில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.

ஈரோடு மாவ‌ட்ட‌ம், சத்தியமங்கலம் அடுத்துள்ளது பண்ணாரி. இங்குள்ள மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆ‌ண்டு‌ம் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்திற்கு அடுத்து வரும் செவ்வாய்கிழமை குண்டம் விழா நடப்பது வழக்கம். இதன்படி இந்த வருடத்தின் குண்டம் விழா பூச்சாட்டு நிகழ்ச்சி மூலம் தொடங்கியது . இதையடுத்து அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.

நேற்று திங்கட்கிழமை இரவு அம்மன் அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தெப்பக்குளத்தில் இருந்து வந்து குண்டத்திற்கு தீ மூட்டப்பட்டது. ஊஞ்சல், வேம்பு உள்ளிட்ட மரங்கள் அமைத்து அதில் தீ மூட்டி விடிய, விடிய எரியவிட்டனர். அது தக, தக என இருந்தபோது பக்தர்கள் தீ மிதிக்க தயார் செய்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடந்த ஞாயிற்று கிழமை மதியமே தீ மதிக்க வரிசையில் நிற்க தொடங்கிவிட்டனர்.
இன்று அதிகாலை 3.55 ம‌ணிக்கு கோயில் தலைமை பூசாரி குண்டத்தை சுற்றிலும் கற்பூறம் பற்ற வைத்து அம்மனை வணங்கி மாரியம்மா கோஷமிட்டபடி தீ மிதித்து தொடங்கி வைத்தார்.

மாலை ஐந்து மணிவரை பக்தர்கள் தொடர்ந்து தீ மிதிப்பார்கள். அதன்பின் கால்நடைகள் தீ மி‌திக்கும். அம்மன் இன்று கையில் வீணையுடன் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தாள். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தீ மிதிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. காலை எட்டு மணிவரையிலும் சுமார் ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் தீ மிதித்தனர்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள வங்கிகளின் ரகசியக் கணக்குகளில் இந்தியர்கள் போட்டு வைத்துள்ள பணத்தை கொண்டுவர மத்திய அரசிற்கு உத்தரவிடுமாறுக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இரண்டு பொது நல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

சுவிட்சர்லாந்து வங்கிகளில் ரகசிய கணக்குகளில் எவ்வளவு பணம் வைக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை அறிந்து அதை மக்களுக்குத் தெரியப்படுத்துமாறு மத்திய அரசிற்கு உத்தரவிட வேண்டுமென்றும் கோரியுள்ள அந்த பொது நல மனுக்கள், இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தை வெளியிடுமாறு உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது .

மக்கள் அரசியல் முன்னணி, ஆசாதி பச்சாவோ அன்டோலன் ஆகிய இரு பொது நல அமைப்புகள் தொடர்ந்துள்ள மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அ‌ஸ்ஸாம் மாநிலத்தில் நேற்று அடுத்தடுத்து 4 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 8 பேர் உயிரிழந்த நிலையில், இன்று திட்டமிட்டபடி தமது அ‌ஸ்ஸாம் பயணத்தை மேற்கொள்ளப்போவதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார்.

பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அ‌ஸ்ஸாம் மாநிலத்தில் நேற்றைய குண்டுவெடிப்புக்கு கடும் கண்டனத்தையும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் பேட்டியளித்த பிரதமர், பயங்கரவாதிகளின் திட்டங்களை முற்றிலுமாக அழிக்க அரசு தொடர் உறுதி பூண்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் திட்டமிட்டபடி தாம் இன்று அ‌ஸ்ஸாம் மாநிலத்திற்குச் செல்லவிருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

பிரதமரின் அ‌ஸ்ஸாம் பயணத்தையொட்டி, உள்துறை உயர் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அங்கு சென்று பாதுகாப்பு நிலைமையை நேரில் ஆய்வு செய்கிறது .

பாதுகாப்புப் பணியில் மத்திய ரிசர்வ் காவல்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடைய நேற்றைய குண்டுவெடிப்புச் சம்பங்களின் பின்னணியில் உல்ஃபா தீவிரவாத அமைப்புக்கு தொடர்பிருக்கலாம் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

கவுகாத்தி, தேகியாஜூலி, மான்கஜார், போகஜான் ஆகிய 4 இடங்களில் அடுத்தடுத்து சில மணி நேரங்களுக்குள் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் குடியரசுத்தலைவர் பிரதிபா பாட்டீல் பயணம் மேற்கொண்டதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவிற்குள் சுதந்திரமாக செல்வதற்கு சீனாவின் அனுமதி தேவையில்லை என்று இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

பிரதிபா பாட்டீல், கடந்த வாரம் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 4 நாட்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்ற அவர், இந்தியசீன எல்லைப்பகுதியில் அமைந்துள்ள டவாங் நகருக்கும் சென்றார்.
அங்கு 1962ஆம் ஆண்டு சீனாவுடன் நடைபெற்ற போரில் வீரமரணமடைந்த வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதிபா பாட்டீல், ராணுவத்தினரிடையே உரையாற்றினார். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் முக்கிய அதிகாரிகளிடம் சீனா தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இந்தியாவிற்கு சொந்தமான பகுதிகளில் சுதந்திரமாக பயணம் செய்யும் உரிமை குடியரசுத் தலைவர் உட்பட அனைத்து இந்தியர்களுக்கும் உள்ளதாக இந்தியா உறுதிபடத் தெரிவித்துள்ளது . ஆனால், இதுதொடர்பாக இருநாட்டு முக்கிய அதிகாரிகள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்மாநிலத்திற்கு பயணம் செய்த பிரதமர் மன்மோகன்சிங், டவாங் பகுதிக்கு சென்றதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!


world
!!!!!!!!!!!!!!!!!!
இத்தாலியின் மையப்பகுதியில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது.

அப்ருஸோவின் தலைநகரான லக்யுலாவின் பெரும்பாலான பகுதிகள் இந்த நிலநடுக்கத்தில் கடுமையாக சேதமடைந்துள்ளன. அந்நாட்டு நேரப்படி நேற்று அதிகாலை 3.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக பல கட்டிடங்கள் இடிந்தன. அதில் தூங்கிக் கொண்டிருந்த மக்களும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர் .

தற்போது வரை மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 1,500 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன . பல ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ReL[Õ ùNôkR SôhÓ UdLs ÁúR U²R ùY¥ÏiÓ (RtùLôûXl TûP) RôdÏRûX Tô¡vRô²VoLs SPjÕ¡u\]o Guß AkSôh¥u EsÕû\ AûUfNL EVo A§Lô¬ WyUôu Uô#d ùR¬®jRôo.
£ß ùRôûLdLôL Cj RtùLôûX RôdÏR#p AYoLs DÓTÓ¡u\]o Gußm AYo á±]ôo.
U²R ÏiÓ RôdÏR#p LôVUûPkÕ WôYp©i¥ UÚjÕYUû]«p £¡fûN ùTtß YÚTYoLû[ §eLs¡ZûU TôoûY«hP ©u, ùNn§Vô[oL°Pm AYo á±VÕ:
YPúUtÏ GpûXl×\ UôLôQeL°p RtùLôûXl TûP RôdÏRÛdÏ BhLs ¡ûPlTRôLÜm ARtÏj úRûYVô] ùY¥ÏiÓ EûPLs ®tTû]dÏ ¡ûPd¡u\] Gußm Tj§¬ûLL°p ùNn§Ls YkÕs[].
JÚ RtùLôûX ÏiÓRô¬«u ®ûX ì.5 XhNm ØRp 15 XhNm YûW Es[Õ. AúR NUVm AYWÕ ÏÓmTj§]o ì.5 XhNm ùTß¡u\]o.
CYoLû[l úTôu\YoLs Tô¡vRô²u G§¬L[ôYo. AYoLs CkSôhûP áßúTôP ®Úmסu\]o. AYoLs ϱjÕ UdLs GfN¬dûLVôL CÚdL úYiÓm Gu\ôo.
CRt¡ûPúV £VôpúLôh¥p úWôkÕl TûP RûXûUVLj§p SPkR ®Zô®p TeúLt\ AYo, TVeLWYôRjRôp úUôNUôLl Tô§dLlThP SôÓ Tô¡vRôu Gu\ôo. úUÛm, TVeLWYôRjûR úRôtL¥dL EXL SôÓLs RUÕ SôhÓdÏ ERY úYiÓm Guß úLhÓd ùLôiPôo.
TVeLWYôRm, RtùLôûXl TûPj RôdÏRp B¡VYtû\ JÓdL AWÑ JÚe¡ûQjÕ úTôWôÓ¡\Õ.
SôhÓ UdL°u E«ÚdÏm, EûPûUdÏm TôÕLôl× YZeÏYúR AW£u ØRuûUVô] úSôdLm Gu\ôo.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தென்னாப்பிரிக்காவில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் ஜேக்கப் ஸூமாவுக்கு எதிரான ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அந்நாட்டின் அரசு தரப்பு சட்ட நடவடிக்கை அதிகாரிகள் கைவிட்டுள்ளனர்.
இக்குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆரம்ப விசாரணைகளில் முறைகேடுகள் நடந்துள்ளபடியால் ஸூமாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்னெடுப்பது சாத்தியப்படக்கூடியதோ, விரும்பத்தகுந்ததோ அல்ல என்று தலைமை சட்ட நடவடிக்கை அதிகாரி கூறியுள்ளார்.
இம்மாதத்தில் பின்னர் நடக்கக்கூடிய தேர்தலில் ஸூமா வெற்றிபெற்றால், அவர் அதிபராவதில் இருந்த தடங்கல்களை தற்போதைய முடிவு அகற்றியுள்ளது.
இம்முடிவினை ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் வரவேற்றுள்ளது. ஆனால் இம்முடிவு நாட்டின் ஜனநாயக விழுமியங்களுக்கு ஊறு விளைவித்துள்ளதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!
பாகிஸ்தானின் வடமேற்கில் அமைந்துள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் சிறுமி ஒருத்திக்கு பொதுமக்கள் முன்னிலையில் சவுக்கடி தண்டனை கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணை ஒன்றுக்கு அந்த நாட்டின் தலைமை நீதிபதியாக மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டுள்ள இஃப்திகார் முகம்மது சவுத்ரி உத்தரவிட்டுள்ளார்.
எங்கே எப்போது அச்சம்பவம் நடந்தது, தண்டனை கொடுத்தவர்கள் யார், தண்டனைக்குள்ளானது யார் என்பனவற்றை பொலிஸார் கண்டறிவதோடு, இவை குறித்து அவர்கள் தமக்கு தொடர்ந்தும் விபரம் வழங்க வேண்டும் என இஃப்திகார் சவுத்ரி கூறினார்.
ஒரு பதின்ம வயது சிறுமியை அமுக்கிப் பிடித்து அவளுக்கு சவுக்கடி வழங்கப்படும்போது அவள் வலியில் கதறுவதைக் காட்டும் வீடியோ படம் குறித்த நீதிமன்ற விசாரணையில் அவர் இவ்வுத்தரவை வழங்கினார்.
அச்சிறுமிக்கு ஆண் ஒருவரோடு கள்ளத்தொடர்பு இருந்தது என்ற குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
!!!!!!!!!!!!!!!!!!
epArpyhe;J ,e;jpa JLg;ngLj;jhl;l mzpfspw;f;F ,ilapyhd ஆட்டம் மழையினால் டிராவில் முடிந்தது- இந்தியா தொடரை 1-0 என கைப்பற்றியது
!!!!!!!!!!!!!!!!!!!!
1 euro = 155.04sl /66.90in
1us $ =116.05sl /50.07in
1swiss fr =102.03 sl/ 44.02in
1uk pound =170.21sl /73.44in
1saudi riyal =30.94sl /13.35in

Leave a Reply

Your email address will not be published.