பாகிஸ்தான் ஓட்டுனருக்கு இலங்கையில் கௌரவம்

பாகிஸ்தானின் லாகூர் நகரில் கடந்த மாத முற்பகுதியில் இலங்கைக் கிரிக்கட் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்ட சமயம் அவர்கள் பயணித்துக் கொண்டிருந்த வாகனத்தினை துணிச்சலாகச் செலுத்திச் சென்று அவர்களது உயிர்களைக் காப்பாற்றிய பாகிஸ்தானின் வாகன ஓட்டுனரான முஹமட் கலில் இன்று திங்களன்று கொழும்பில் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.

துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும்போது, தனது உயிரைப் பணயம் வைத்து இலங்கை வீரர்களை பாதுகாப்பாக லாகூர் கடாபி மைதானத்திற்கு காப்பாற்றிச் சென்றமைக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில், இலங்கை அரச பத்திரிகை நிறுவனமான லேக்கவுஸ் நிறுவனம் முகமட் கலிலும் அவரது குடும்பத்தினரும் ஒருவாரகாலம் இலங்கையில் விடுமுறையில் தங்கிச் செல்ல அழைப்பு விடுத்திருந்தது.

இதன் பிரகாரம் அங்கு சென்ற கலிலுக்கு இன்று காலை ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் தலைமயகத்தில் இடம்பெற்ற விசேட வைபமொன்றில் கௌரவம் வழங்கப்பட்டதோடு, சுமார் 21,800 அமெரிக்க டாலர்களும் சன்மானமாக வழங்கப்பட்டது.

Source & Thanks : .bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.