அரசு உயரதிகாரியாக நடித்து துணிகர மோசடி: புத்தம் புது கார் ‘லபக்’

கோவை: தமிழக அரசின் ஆசிரியர் தேர்வாணைய அதிகாரியாக நடித்து, கோவை “ஹூண்டாய்’ �ஷாரூமில் 4.21 லட்சம் மதிப்பிலான புத்தம், புதிய காரை “லவட்டிய’ ஆசாமி, குடும்பத்துடன் தப்பினார். இந்த மோசடிப் பேர்வழி மீது, தமிழகத்தில் 32 மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

“ஹூண்டாய்’ கார் நிறுவனத்தின் �ஷாரூம், கோவை – திருச்சி ரோட்டில் உள்ளது. கடந்த மாதம் 23ம் தேதி இங்கு சென்ற ஒருவர், தான் தமிழக அரசின் ஆசிரியர் தேர்வாணைய அதிகாரியாக பணியாற்றுவதாகவும் தனது பெயர் முஜேந்தர் (32) என்றும் கூறியுள்ளார்.தனது அடையாள அட்டையைக் காட்டிய அவர், ஹூண்டாய் நிறுவன “ஐ 10′ காரை பார்வையிட்ட பின், மாதத் தவணை அடிப்படையில் விலைக்கு வாங்க முன்பதிவு செய்தார்; காரின் விலை 4.21 லட்சம் ரூபாய்.விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்கையில், நெ.10, கிருஷ்ணா நகர், பனப்பாளையம், பல்லடம் என்ற முகவரியில் வசிப்பதாக எழுதி, முன்பணமாக 50 ஆயிரம் ரூபாய் செலுத்தினார்.

பின், தமிழக அரசு அளித்ததாக கூறும் சம்பளச் சான்று, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, முகவரிச் சான்றுகளை ஒப்படைத்துச் சென்றார். அதன்பின், சில நாட்கள் வரவில்லை. மார்ச் 31ல் மீண்டும் �ஷாரூமுக்கு சென்ற அந்நபர், “இன்று, எனது தாயாரின் நினைவு தினம். எனவே, இந்த நாளில் புதிய காரை எடுத்துச் செல்ல விரும்புகிறேன். நான் பதிவு செய்துள்ள காரை ஒரே ஒரு நாள் கொடுங்கள்; நாளை காலையே மீண்டும் கொண்டுவந்து விடுகிறேன்’ என கெஞ்சியுள்ளார்.

போக்குவரத்து துறை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு, ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் பெற்ற பிறகே கார் வழங்கப்படும் என விடாப்பிடியாக கூறிய �ஷாரூம் ஊழியர்கள், கடைசியில் மனம் இரங்கி தற்காலிகமாக ஒரு நாள் ஓட்டத்துக்கு மட்டும் கார் வழங்க முன்வந்தனர்.இதையடுத்து, மீண்டும் 35 ஆயிரம் ரூபாய் செலுத்திய அந்நபர், காரை வீட்டுக்கு ஓட்டிச் சென்றார். உடன், �ஷாரூம் ஊழியர் பிரபு என்பவரும் சென்றார். அங்கு, அவரது மனைவியும் குழந்தையும் இருந்துள்ளனர்; நன்றாக உபசரித்து குடிக்க காபி வழங்கியுள்ளனர். அந்நபரின் நடவடிக்கை மீது சிறிதும் சந்தேகமின்றி ஊழியர் வீடு திரும்பினார்.மறுநாள், அந்த நபர் காரை கொண்டு வரவில்லை. அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், பல்லடத்துக்கு சென்று அந்நபரின் முகவரியில் விசாரித்தனர்; இரவோடு, இரவாக வீடு காலி செய்யப்பட்டு பூட்டு தொங்கியது.

அருகில் வசித்த மக்களிடம் விசாரித்த போது, அந்நபர் குபேந்தர், உபேந்தர், சுரேந்தர் என பல பெயர்களில் மோசடி செய்துள்ளதும், போலீசார் பல வழக்குகளில் இவரை தேடிவருவதும் அம்பலமானது.பின்னர் நடந்த ஆய்வில், அந்நபர் வழங்கியிருந்த சம்பள சான்று, முகவரிச் சான்று உள்ளிட்ட ஆவணங்கள் போலியானது என்றும், ஆசிரியர் தேர்வாணையத்துக்கும் அந்நபருக்கும் சிறிதும் சம்பந்தமில்லை என்பதும் அம்பலமானது.இதையடுத்து, நிறுவன மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர போலீஸ் குற்றம் மற்றும் போக்குவரத்து துணைக் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து, போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

மோசடி நபரின் உண்மையான பெயர் சரவணபிரபு. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பெரம்பலூரைச் சேர்ந்த பலரை கல்லூரி ஆசிரியர் பணியில் அமர்த்துவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்துள்ளார். இவரைப் பற்றிய பொது அறிவிப்பு வெளியிட்டு, பெரம்பலூர் போலீசார் பலமாதமாகத் தேடுகின்றனர்.

அதே போன்று, போத்தனூர் போலீஸ் எல்லைக்குள் அரசு பள்ளி ஆசிரியர்களிடம் நகைகளை சேகரித்து மோசடி செய்துள்ளார். பொள்ளாச்சியிலுள்ள �ஷாரூமில் போலி ஆவணங்களை கொடுத்து 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான சாதனங்களை வாங்கி மோசடி செய்துள்ளார்.அனைத்து இடங்களிலும் தன்னை ஆசிரியர் தேர்வாணையத்தின் இயக்குனர் என்றும், கட்டுப்பாட்டு அதிகாரி என்றும் கூறியுள்ளார். இந்நபர் மீது, திருப்பூர், ஈரோடு, சேலம், பொள்ளாச்சி உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 32 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது, கோவையில் ஊடுருவிய அந்த நபர் திட்டமிட்டு 4.21 லட்சம் ரூபாய் மதிப்பிலான காரை அபகரித்துச் சென்றுள்ளார். போலி ஆவணங்களை கொடுத்து காரை அபகரித்துச் சென்ற அந்த நபர், ஆர்.சி., புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை போலியாக தயாரித்து, காரை கூடுதல் விலைக்கு விற்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், பல கிரிமினல் குற்றங்களை, இந்த காரை பயன்படுத்திச் செய்யவும் முயற்சிக்கக் கூடும்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.