பாதிரியராக மாறிய கணவரை சேர்த்து வைக்க கோரி பெண் மனு: சமரச மையத்திற்கு மாற்றம்

மதுரை: பாதிரியராக மாறிய கணவரை சேர்ந்து வாழ உத்தரவிட கோரி பெண் தாக்கல் செய்த மனுவை சமரச தீர்வு மையத்திற்கு மாற்றம் செய்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரை கட்ராம்பாளையத்�“த சேர்ந்தவர் செந்தமிழ்செல்வி.

இவருக்கும், எல்லீஸ்நகரை சேர்ந்த பால்ராஜூக்கும் 1992ல்பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தின் அடிப்படையில் தன்னை யாருக்கும் தெரியாமல் பால்ராஜ் திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது பாதிரியராக மாறியதை காரணம் காட்டி பால்ராஜ் தன்னுடன் சேர்ந்து வாழ மறுப்பதாகவும், தன்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிட கோரியும் செந்தமிழ்செல்வி குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கில் அவருக்கு சாதகமாக உத்தரவு வெளியாகவில்லை. அந்த உத்தரவை எதிர்த்து செந்தமிழ்செல்வி ஐகோர்ட் கிளையில் சிவில் சீராய்வு மனுசெய்தார். மனு நீதிபதிகள் பி.முருகேசன், டி.ராஜா கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. செந்தமிழ்செல்வி நேரில் ஆஜராகி வாதிடுகையில், “பால்ராஜூக்கும், எனக்கும் திருமணம் நடந்தது’ என்றார். திருமணமே நடக்கவில்லை என பால்ராஜ் சார்பில் அவரது வக்கீல் அன்புநிதி தெரிவித்தார். எதிர்தரப்பாக சேர்க்கப்பட்டுள்ள பால்ராஜ் உறவினர்கள் ஜெபாஸ்டியான், ஜான் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி செந்தமிழ்செல்வி குற்றச்சாட்டை மறுத்தனர். அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுவை சமரச தீர்வு மையத்திற்கு மாற்றம் செய்தனர். அங்கு அனைத்துதரப்பின“ரும் பேசிதீர்வுகாணவும், முடியாத பட்சத்தில் மீண்டும் ஐகோர்ட்டை அணுகலாம் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.