லிபியாவுக்கு நாளை பயணமாகின்றார் மகிந்த

சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அதிகாரபூர்வ பணயத்தினை மேற்கொண்டு நாளை புதன்கிழமை லிபியா செல்லவிருப்பதாக அரசாங்க செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
லிபிய அரசாங்கத்தினால் கடந்த வருடத்தில் விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமையவே இந்தப் பயணத்தை அவர் மேற்கொள்ளவிருக்கின்றார்.

அரச தலைவரின் இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்களிப்பை வழங்குவதாக இருக்கும் என கொழும்பில் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

மகிந்த ராஜபக்ச அரச தலைவராகப் பதவியேற்றுக்கொண்ட பின்னர் லிபியாவுக்கு அவர் மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.