தொகுதி பங்கீட்டில் அ.தி.மு.க., -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே உடன்பாடு : மார்க்சிஸ்ட் கம்யூ., வுக்கு 3 தொகுதிகள்

சென்னை : கூட்டணி உறுதியானாலும் தொகுதி பங்கீட்டில் அ.தி.மு.க., வுக்கும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே கடந்த 15 நாட்களாக இழுபறி நீடித்து வந்தது . இந்நிலையில் இன்று தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டது .

தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தத்தில் ஜெயலலிதாவும் , வரதராஜனும் கையெழுத்திட்டனர். கன்னியாகுமரி , மதுரை , கோவை ஆகிய மூன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஜெயலலித‌ா – வரதராஜன் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் இதை ‌தெரிவித்தனர். கடந்த தேர்தலில் மதுரை மற்றும் கோவையில் மார்க்சிஸ்ட்டு கட்சி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது . அ.தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க.,வுடன் மட்டும் இன்னும் தொகுதி பங்கீடு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.